வெள்ளத்தின் உள்ளத்திலே


நமது கடந்தகாலங்கள் என்றுமே நம்மால் மறக்கப்பட முடியாதவை. ஏனெனில் அவற்றின் ஞாபகங்கள் நிகழ்காலத்தின் ஏதோவொரு சம்பவங்கள் மூலம் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

அந்தவகையில் எமதூரில் தற்போது கடும் வறட்சி நிலவுகின்றது. இந்த நீர்ப்பற்றாக்குறையும், பல குளங்களின் வற்றலும் எனக்கு தந்த ஞாபக உதிர்வாய் பதிவாகின்றது இந்தப் பதிவு!

2010 ஆண்டு ஜனவரி மாதம் அநுராதபுர நகரில் தாராளமாக மழை பெய்தது. இங்குள்ள பிரசித்திபெற்ற குளங்கள் எல்லாம் நிறைந்து, வீதி வழியே உலவத் தொடங்கின. வீடுகளில் வெள்ளம் புகுந்து வேடிக்கை பார்க்க, உயிரைக் கையில் பிடித்த மக்களோ, பொது இடங்களில் பிரார்த்தனையுடன் தஞ்சம் புகுந்தனர். பாடசாலைகள் , தொழில் நிறுவனங்கள் வாரக்கணக்கில் மூடப்பட்டன. இப் பகுதியில் ஏற்பட்ட இவ் வெள்ளம் மக்களுக்கு முதல் அனுபவமாதலால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பதற்றமும் சிரமமும் அடைந்தனர்.

எம்மிருப்பிடமான அநுராதபுர நகரின் வீடுகள், பாடசாலைகளிலும் வெள்ளம் புகுந்து பலவற்றை அழித்தன. சிறைச்சாலை வளவினுள் புகுந்த வெள்ளத்தால் அங்கிருந்த பொலிஸ் வாகனங்கள் புதைந்தன. போக்குவரத்துக்கள் தடைப்பட்டன. வீதிகள் உடைந்தன. வெள்ளம் பார்க்க வரும் பிற இட மக்கள் வெள்ளமும் நிறைந்தன.

யாரும் யாருக்கும் ஆறுதல் கூறமுடியாத நிலை. இதற்குக் காரணம், வெள்ளத்தால் நீர்மட்டம் நிரம்பி வழிந்த மல்வத் ஓயாவின் அருகில் எம்மிருப்பிடம் இருந்ததுதான்.

இன்னும் தொடர்ந்து மழை பெய்தால் , அந்நீரால் நாச்சதுவ குளம் நிரம்பி அவ்வூருக்குள் நீர் புகும் எனவும், இதனைத் தடுக்க அக்குள அணைக்கட்டு உடைக்கப்பட்டு குளநீர் வேறு திசைகளுக்கு பரவ விடப்படும் எனக் கூறப்பட்டது.

 மேலதிகமாக மழைபெய்து இவ்வாறு நாச்சதுவ குள அணைக்கட்டும் உடைக்கப்பட்டிருந்தால் , அநுராதபுர நகரின் பெரும் உட்பகுதிகளின் நீர்மட்டம் 10 அடிக்குயர்ந்திருக்கும். இதனால் இம்மக்களின் சொத்துக்கள் நீரால் உறிஞ்சப்பட்டிருக்கும்.

மனப்பீதியுடன், உயிரைக் கையில் பிடித்து வைத்திருந்த எம்முதடுகள் இறைவனைத் துதித்தவாறே இருந்தன. அல்ஹம்துலில்லாஹ்!

அன்று வான் கண்ணீரின் தாராளம் மக்களைச் சினக்க வைத்தது. இன்றோ சூரிய கதிரின்  தாராளமும் மக்களை சினக்க வைக்கின்றது.

அதிகமாகக் கிடைக்கும் எதிலும் ஆபத்துக்களே நமக்குள் குவிந்து கிடக்கின்றன எனும் அந்த சிந்தனையை  மனதுள் அழுத்துகின்றன இப்புகைப்படங்கள் ! 
                                   
                                                         வீதியில் வெள்ளம்
எங்கள் பக்கத்து வீட்டை மூழ்கடித்த வெள்ளம்


எங்கள் வீட்டு வளவு


எங்கள் வீட்டின் பின்புறம்


எங்கள் வீட்டின் முன்பகுதி


எங்கள் வீடு


அநுராதபுர பொலீஸ் விடுதி


                              அநுராதபுர சிங்க கணு அருகில்

           
             வெள்ளத்தால் மல்வத்து ஓயா நிரம்பி வழிதல்
                                                 
                                                     
                                             மிஹிதுபுர வீதி


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை