மரண அவஸ்தை


(வழமைய விட சற்று வித்தியாசமா உங்க கூட கதைக்கணும் என்ற ஆசை.....அதுதான் இந்தப் பேச்சுப்பாணி போஸ்ட்........)

ஹாய்.......................!

நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்க வந்து உங்ககிட்ட பேசுறன்......சிரிச்சுகிட்டு பதில் சொல்ல மாட்டீங்களா........

சின்னதா ஒரு சிரிப்புத்தானே............
அதுக்கேன் இப்படி மூஞ்சிய உர்ர்ர்ர் னு வைச்சிட்டு............

புரியுது புரியுது வந்த விசயத்த சொல்லிடுறன்!

வாழ்க்கை ரொம்ப அழகானதுங்க........ரொம்ப ரொம்ப இனிமையானதும் கூட (காதக் குடுங்க.....அது கனவு வாழ்க்கைங்க)

ஆனால் வாழ்க்கைல நாம நினைக்கிறது , எதிர்பார்க்கிறது நடக்கலைன்னா........இந்த அழகான வாழ்க்கை மரணத்தையும் நினைக்கத் தோணும். நான் கூட நெறைய தடவை சாவப் பற்றி யோசித்திருக்கிறன்.. நான் ரொம்ப நேசிக்கிறவங்க என்ன விட்டுப் போகக் கூடாது.......என்னால அந்த வேதனைய தாங்கிக் கொள்ள முடியாது. ஆனால்............நான் அவங்கள விட்டு சட்டென்று கண்ண மூடிடணும்........

(இது சுயநலமா.......)

இன்னும் இந்த ஆச ஏனோ நெறைவேறவே  இல்லை...இந்த உலகத்தில நானெல்லாம் வாழ்ந்து அப்படி என்னதான் ரொம்ப சாதிக்கப்போறன்.......ஒன்னுமேயில்ல....பூமிக்கும், மனுஷனுக்கும் பாரமா வாழ்றதுல அப்படி என்னதான் இருக்கு!

மரணம் என்று சொன்னதும் , உங்க ஹார்ட் ரொம்ப பயத்தோட துடிக்குதுங்க. அந்த சத்தம்.........சத்தியமா.......எனக்கு கேட்குதுங்க....அப்படித்தான் சொல்ல ஆச...ஆனால் கேட்க நீங்க பக்கத்தில இல்லையே.....

எனக்கு வந்த மரண அழைப்புக்கள கொஞ்சம் உங்ககிட்ட சொல்லத்தான் வேணும்.......ஏன்னா.......ப்ரென்ஸ்கிட்ட எதுவுமே ஒழிக்கக்கூடாதுன்னு நானே எனக்கு சொல்லியிருக்கேன்.

ஒரு பத்து வருஷத்துக்கு முந்தி, வீட்டு வளவு கூட்டிக்கொண்டிருக்கும் போது தென்னை மரத்திலிருந்து பெரிய தேங்காய் ஒன்னு நெத்தில வந்து விழுந்தது.
பட்.................

என் நெத்தில தெறித்து விழுந்த போது பக்கத்தில நின்ன என் தங்கச்சிமார் அப்படியெ விறைச்சுப் போய் பேயறைஞ்சு நின்னாங்க வேதனைல......இன்னும் 2 சென்ரி மீற்றர் போனால் கண்ணு குளோஸ்.........அப்புறம் நடு மண்டைல விழுந்த ஆளே குளேஸ்தான்........

அப்புறம் ஒரு மூணு வருஷத்துக்கு முதல் பஸ்ஸூல ஏறும் போது பஸ் ரைவர் நான் ஏற முதல் பஸ்ஸ ஸ்டார்ட் ஆக்க.....

ஒரு கால் றோட்ல, மறு கால பஸ்ல....

.ஏற முயற்சித்த நானோ வீசப்பட்டு கீழ விழ...............அடடா...........நான் விழுந்த இடம் எதுன்னு தெரியுமா........

பஸ்ஸூக்குள்ள........ரெண்டு பின் சில்லு விளிம்போரம் என் கழுத்த தொட்டுக் கொண்டு நின்றது........றோட்ல நின்ன ஆக்கள் இதப் பாத்துட்டு கத்த,  சத்தத்தில பஸ்காரன் பேயறைஞ்சு போய் பஸ்ஸ நிப்பாட்டிட்டான்.....பாருங்கோ.....அவன்  கையும் ஓடல, காலும் ஓடல, அதனால பஸ் சில்லும் உருளல........பின்னஞ்சில்லு உருண்டா.........என் கழுத்தெலும்பு  ........"நறுக்" தான்.

அப்புறம் ஒரு வருஷத்துக்கு முன்னாடி சின்னதா ஒரு மோட்டார் சைக்கிள் விபத்து....மழை நேரம் பள்ளத்துக்குள்ள தண்ணி நின்று மறைக்க, நான் இது தெரியமா பைக்க அதுக்குள்ள விட................

அப்புறம்................

நான் கீழே விழுந்திட்டன்..........சின்னதா ஒரு காயம்......பெரிசா இல்லீங்க.......மஞ்சள் நிற என்  மழை அங்கி சிவப்பு நிறமாக மாறுற அளவுக்கு. அப்புறம் இன்னும் 1 சென்ரீ மீற்றர் என்றால் பைக் கண்ணுக்குள்ள குத்தியிருந்த கண்ணு அம்பேல்தான்........

இப்படி எத்தனையோ விபத்துக்கள் வந்தாலும் படைச்சவன் காப்பாத்தினான். ஏன்னா................

நீங்க எல்லாம் என் ப்ரெண்ட்ஸா இருக்கணும் தானே அதுக்குதான்..........

அப்புறம்..................தூக்கம் வருது குட்நைட் சொல்லட்டுமா!

8 comments:

 1. சம்பவங்கள் திகைக்க வைத்தது...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் தனபாலன்......அநுபவங்கள் தான் நம் வாழ்வை மேலும் அர்த்தப்படுத்துகின்றது

   Delete
 2. take care...thanks good day...good night...

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீதரன்

   Delete
 3. Replies
  1. அருண்..............!
   வாழ்வை வெறுத்தொதுங்குவோருக்குப் பயம் வராது. ஏனென்றால் அவர்கள் மரணத்தை நேசிப்பவர்கள் என்னைப் போலவே!

   Delete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை