வியத்தகு தாவரங்கள் சிலBaobab

நீண்ட கோடைகாலம் நிலவும் பிரதேசங்களில் வளரும் இத் தாவரங்கள் நீரைச் சேமித்து வைப்பதற்காக இசைவாக்கத்தைக் காட்டுகின்றது. இது விட்டம் 9 மீற்றரைக் கொண்டுள்ளது. இதன் உயரம் 18 மீற்றர். 6 மாத கால கோடை காலத்தைக் கழிப்பதற்காக இதன் வெண்ணார்த் தன்மையான தண்டினுள் 100000 லீற்றர் நீரைச் சேமித்து வைத்துக் கொள்ளும்.

Redwood


உலகின் மிகப்பெரிய உயிரி. கலிபோனியா காடுகளில் காணப்படும். இது 24 மீற்றர் சுற்றளவும், 120 மீற்றர் உயரமும் கொண்டது. இதன் நிறை 2000 தொன். தண்டு செந்நிறம்

Rafflesia

இது உலகின் மிகப்பெரிய மலராகும். இது மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. இது இறைச்சியின் அமைப்பை ஒத்தது. அழுகிய மணம் உடையது. 


Stone Plants

தென்னாபிரிக்க நாடுகளில் கற்களுக்கிடையில் கல் போன்ற தாவரங்கள் காணப்படுகின்றன. இத்தாவரங்கள் தசைப்பிடிப்பான தண்டையும் ஒரு சோடி , இரண்டு  சோடி அல்லது மூன்று சோடி இலைகளையும் கொண்டவை. இதனாலேயே இவை கற்கள் போன்ற தோற்றத்தைக் கொண்டவை. தாவரத்தை விட பூக்கள் பெரியவை. இதழ்கள் மினுமினுப்பானவைCuscuta 

மஞ்சள் நிற நூற்சிக்கல் போன்று பற்றையாக வளரும் செடியிதுவாகும். இது ஒரு முழு ஒட்டுண்ணித்தாவரமாகும். இதன் வேர் , பிற தாவரத் தண்டில் பரவி முழுமையான போசணையைப் பெறும்.Hora

இலங்கைக்கேயுரித்தான தாவரமாகும். இங்கு ஈரவலயத்தில் காணப்படும். 30 மீற்றர் உயரமாக வளரும். பழம் தோன்றும் போது இதன் புல்லிகளும் கீழே விழாமல் பழத்துடன் காணப்படுவதால் காற்றால் எடுத்துச் செல்லப்படும் 
Tiger claw

இலங்கையின் உலர்வலயத்தில் காணப்படும். இது உலர்ந்த பின் வலிமையானது. கறுப்பு நிறம். கூர்மையான ஒருசோடிக் கொளுக்கிகளைக் கொண்டது. இக் கொளுக்கி புலிகளின் நகங்கள் போன்றவை. இவை விலங்குகளின் உடலில் ஒட்டிப் பரம்பல் அடையும்.Sundew

இதன்  இலைகளிலிருந்து மயிர்கள் போன்ற அமைப்புக்கள் மேல் நோக்கி வளரும். இம் மயிர்களின் உச்சியிலுள்ள சுரப்பிகளின் சுரப்புக்கள் சிறிய பனித்துளி போன்று காணப்படும். இது நிறமற்றது. மணமற்றது. பூவின் அமுதம் போன்று காணப்படும். இதனால் கவரப்பட்ட பூச்சிகள் இத் திரவத்தில் ஒட்டி இறக்கின்றன. இறந்த பூச்சிகள் சமிபாடடைந்து தாவர இலையினால் உறிஞ்சப்படும்.


என் வகுப்பு மாணவர்களுக்கு இலகுவாகக் கற்பிக்கும் பொருட்டு தயாரிக்கப்பட்ட கற்பித்தல் துணைச்சாதனமிதுவாகும் 

(தகவல் உதவி - விஞ்ஞானம் - தரம் 7)
3 comments:

  1. அசத்தல் படங்கள்...

    தங்களின் சேவைக்கு வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை