தஞ்சை பெரிய கோயில்சரித்திரங்கள் புரட்டப்படும் போதுதான், நம்மை விட்டு விலகிப் போன, மறைந்திருக்கின்ற பல விடயங்களை அறிய முடிகின்றது. இவ்வாறான
ஒவ்வொரு சரித்திரங்களின் பின்னாலும் பல உயிர்களின் ஆற்றல்களும், உழைப்புக்களும், புதுமைகளும் இருக்கும். அவற்றைத் தேடியறிதலே சுவாரஸியமான ஓர் கலைதான்.

அந்த வகையில் என்னை வியப்புக்குள்ளாக்கிய தஞ்சாவூர் பெரிய கோயில் தொடர்பான சரித்திரங்களைத் தேடியறிவதற்காக வலம் வந்த இணைய உலா வில்  பெற்றுக் கொண்ட தகவல்களையே உங்களுடன் பகிரப் போகின்றேன்.

தஞ்சாவூர்,.காவிரி சமவெளிப் பகுதியில் 15 தளங்களைக் கொண்ட சுமார் 60 மீற்றர் நீளமான கோயிலே தஞ்சை பெரியார் கோயிலாகும். சோழர்களின் சிறப்பை வெளிப்படுத்தக் கூடிய இக்கோயிலில் பல சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

இது  10ம் நூற்றாண்டில் (கி.பி 985 - 1070 வரை)  சோழர்கள் தமிழ்நாட்டை ஒரே குடையின் கீழ் ஆண்ட    பொற்காலத்தி லேயே,   சோழ மன்னனாகிய இராஜ இராஜ சோழனால்   கட்டப்பட்டது. அரசனின் சிவ பக்தியுடன் 1006ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கோயிலைக் கட்டி முடிக்க 7 ஆண்டுகள் சென்றனவாம். இன்று இக்கோயிலின் வயது 1002 ஆகும். இராஜ இராஜ சோழன் மன்னன், கோயில் கட்டும் கலையில் பல புதுமைகளை ஏற்படுத்திய மன்னனாவான். இக்கோயில் கட்டடக் கலையானது, தென்னிந்திய கட்டடக் கலைகளுக்கு சிறந்த அத்திவாரமாக விளங்குகின்றது.


இக்கோயிலானது, இராஜ இராஜ சோழன் மன்னன் காலத்தில் இராஜ இராஜேஸ்வரம் என்றும், நாயக்கர்கள் ஆண்ட காலத்தில் தஞசை பெரியார் கோயில் என்றும்,  மராட்டியர் காலத்தில் பிருகதீசுவரம் என்றும் அழைக்கப்பட்டது.

Thanjavur Tower.jpg

இதன் நீளம் 150 அடியாகும். கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்துள்ள கூர்நுனிக் கோபுரமாக இதன் விமானம் அமைந்துள்ளது. இதன் இராஜ கோபுரம் மிகவும் அழகிய கலைநயத்துடன் காணப்படுகின்றது.


உண்மையில் தமிழர்களின் சாதனையாக இக்கோயிலைக் குறிப்பிடலாம். இங்குள்ள சிற்பங்களில் மகரங்களும், போர் வீரர்களும், வாயைப் பிளந்து கொண்டிருக்கும் குதிரைகளும், அவற்றின் மீதேறி பயணம் செய்பவர்களின் உருவங்களும் காணப்படுகின்றன. 50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிருந்ததாக கல்வெட்டுச் சான்றுகள் பகர்கின்றன. நாயக்கர் காலத்தில் ஒரே கல்லால் கட்டப்பட்டுள்ள நந்தியானது, 14 மீற்றர் நீளமும், 7மீற்றர் அகலமும்,3 மீற்றர் உயரமுமானதாகும்.


1987ம் ஆண்டு, ஐக்கிய நாட்டு கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் , இக் கோயில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.


இந்திய மத்திய அரசானது 1954ம் ஆண்டில் ஆயிரம் ரூபாய்த் தாளையும் ,1995ம் ஆண்டில் மாமன்னர் ராஜ ராஜ சோழன் உருவம் பதித்த இரண்டு ரூபாய் முத்திரையையும் , ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு 2010ம் ஆண்டு 5 ரூபாய முத்திரையும் நாணயத்தையும் நினைவாக வெளியிடப்பட்டது.

                               Tanjai1000.jpg

இத்தகைய சிறப்புமிகு கோயிலில், 2 வித்தியாசமான உருவங்களுள்ளன. அவற்றிலொன்று தலையில் தொப்பியுடன் காணப்படும் மேலைத்தேசத்தைச் சேர்ந்தவனின் உருவச் சிலையாகும்.

Photo: , ‘தஞ்சைப் பெரிய கோவில்’ என்றழைக்கப்படும் பிரமாண்டமான கோவில்.
அதன் மிகப் பிரமாண்டமான இராஜகோபுரம் மிகவும் அழகான கலை நயத்துடன் கட்டப்பட்டது.

அந்தக் கோபுரத்தில் காணப்பட்ட ஒரு உருவச் சிலை எல்லாரையும் புருவத்தை உயர்த்த வைத்தது. ஒரு இந்துக் கோவில் கோபுரத்தில் இது சாத்தியமா? என்னும் கேள்விகள் ஒலிக்கும் வகையில் இருந்தது அந்த உருவச் சிலை. 
 அப்படி அந்தக் கோபுரத்தில் இருந்த உருவச் சிலை என்ன தெரியுமா….?
ஒரு மேலைத் தேச நாட்டவன், தலையில் தொப்பியுடன் காணப்படுகிறான். தஞ்சை மன்னனுக்கும் இந்துக்களின் ஆச்சாரத்துக்கும் ஏற்பே இல்லாத் தன்மையுடன் அந்தச் சிலை பெரிதாகக் காட்சியளிக்கிறது.
அந்தப் படம் இதுதான்……..!

மற்றைய உருவம் இப் பெண்ணின் சிலையாகும்.


இச் சிலைகளுக்கும்  சோழ மன்னனுக்கும் என்ன தொடர்புண்டு ? இவை புலப்படுத்தும் கருத்துக்கள் என்ன?
எனும் வினாக்கள் நம்முள் தொக்கி நிற்கின்றன..இச்சரித்திரத்தை இன்னும் ஆழமாகத் துளாவினால் நமக்குரிய விடை கிடைக்குமா............!
பொறுத்திருந்து பார்ப்போம்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை