மகளிர் தினம்பெண்.................

சுற்றிச் சுழலும் பூகோளத்தின்
அச்சாணி!

உயிரணுவுக்குள் உரு கொடுத்து
காத்திடும் தாய்மை!

அத்தகைய பெண்மைக்காக உலக நாட்காட்டியில் ஒதுக்கப்பட்ட தினமே இந்நாள்!

அன்று............
பெண்ணடிமைத்தன வீச்சங்களால் கறைபட்ட காலங்கள்...அடக்குமுறைகளும் அவஸ்தைகளும் பெண்ணவள் பிரதிபலிப்புக்களாக உருமாற்றப்பட்ட காலங்கள்!
அத்தகைய சூழ்நிலைகளின் போது.....1789-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி பிரெஞ்சு புரட்சியின் போது சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்று கோரிக்கைகளை முன்வைத்த பாரிஸ் பெண்கள் , ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பாரிஸ் தெருக்களில் கைகளில் கிடைத்த ஆயுதங்களுடன் பிரான்ஸ் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்! 

இவர் போராட்டம் கண்டு அஞ்சாத அரசன் , "இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்" ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான். ஆனால் ஆத்திரமடைந்த பெண்கள் கூட்டத்தினர் தம் மீது அடக்குமுறை விதிக்கும் அரசனின் மெய்க் காப்பாளர்கள் இருவரை கொன்று விடவே, அரசன் சற்று அதிர்ந்து பணிந்து அவர்களின் கோரிக்கையை ஏற்பதாகக் கூறிய அரசன் தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்.

இந்தச் செய்தி ஐரோப்பிய முழுவதும் பரவ , போராட்டமானது இன்னும் பலமடைந்து ,கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் போன்ற நாடுகளிலும் பரவியது.

இத்தாலியிலும் பெண்களும் தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு போராட்டக்களத்தில் இறங்கினர். 

இவ்வாறான முறுகல் நிலைகளின் போது,

பிரான்ஸ், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். 

அந்த நாள் 1848-ம் ஆண்டு மார்ச் 8-ம் நாளாகும்! அந்த மார்ச் 8-ம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது. 

ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இதுவென்றாலும் பெண்ணடிமைத்தனம் முற்றாக இன்னும் அறுத்தெறியப்படவில்லை.

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை