இனிய அவஸ்தைஒவ்வொரு விடிகாலையும்
எனக்குள் நிச்சயமற்றவை!
சங்கூதும் மரண ஓலத்தின்
புலம்பலோடு
விழிக்கும் என் மடல்கள்!

இரவு கண்டெடுத்த கனாக்கள்
உயிரறுந்து.............
அக்கினி வேரின் நீட்சியாய்
அலைந்து திரியும்!

என் மெலிதான சுவாசத்தில்
வருங்காலம் சுருங்கி.............
சிறகறுந்து - உன்
உறவின்றி கதறும்!

நாளை.............
உனக்கும் சேதி வரும்!
வா  என் கல்லறைக்கு!
உன்னால்...........
கருக்கலைப்பு செய்யப்பட்ட
என்...............
கனாக்களுக்காய்
ஒரு துளி கண்ணீர் தா!
No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை