யாரோ எவரோ

Photo: ஓர் பொழுதின் முகநூலில்
ரோஜா வாசம்.......
நுகர்ந்தேன்......
புன்னகையொன்று தூதாகிக் கிடந்தது!

முகமறியா நட்பென்றே எட்டிப் பிடித்தேன்
முகமலர்வுடன்..........
முகவரி தந்தான் தன்னையெனக்கு 
அடையாளப்படுத்தி!

முறுக்கு மீசையும்
முறுவலிக்கும் கண்களும்
அழகான ஆண்மையும்...........
திடகாத்திர தேகமும்
அவனாய்..............

இன்னொரு பாரதியிவனோ!
சிகரம் தொட்டான் கலையுலகில்!
இலக்கண வலுக்களில் பழுது காண்கையில்
வாளெடுத்து வீசினான் வார்த்தைகளாய்!

சீண்டலில் அவன்தான் ராஜா ...............
தினமும் குண்டுக் கண்களால் வம்பிழத்தே
கற்கண்டுகளை இலஞ்சம் வைப்பான் 
சொற்களால் இலக்கியம் புரட்டி !

விடியலில் மையல் கொண்டு ...
இயற்கையை இதமாய்ப் பருக ...
சூரியனுக்கே அலாரம் வைப்பான்!

நிலாவைக் களவாய்ப் பிடித்து
காற்றில் நெய்து தூதனுப்புவான் 
இந்தக் கவிதைக்காரன்!

நடுநிசிப் பொழுதில் திரை விரிப்பான்
கைபேசியில்...............................
இருள் கூட முகம் நோக்காது
மறைந்திருக்க !

அவன் திமிரில் இடறி வீழ்கையில் 
மிரளும் என் உயிர் கண்டு......................
இழுத்தணைத்தே கவி கொட்டுவான்
இந்தக் காரியக்காரன்!

என் கனவுகளை தன் வசப்படுத்தி
களவாய்ச் சிரிக்கும் இந்தக் கள்ளனவன்.......
என் கவிதைகளுக்கு விலங்கிட்டவன்
இத்தனைக்கும் அவன்.......

யாரோ.....................!
எவரோ ......................!

ஓர் பொழுதின் முகநூலில்
ரோஜா வாசம்.......
நுகர்ந்தேன் சட்டென
புன்னகைகள் நகர்ந்தன!

முகமறியா நட்பென்றெ
பட்டியலிட நானும்.........
விட்டெறிந்தான் முகவரியை
அன்போடு இறுக்கிப் பிடித்து!

முறுக்கு மீசையும்
முறுவலிக்கும் கண்களும்........
பாரதியின் உருக் கொண்டான்
சிகரந் தந்தான் கலையிலகில்!

இலக்கணங்களின் தலைக்கணங்கள்
இலக்காகி வீழ்ந்தன- அவன்
வாள் வீச்சு பேச்சினிலே

சொற்களில் இலக்கியம் நயந்து
கற்கண்டாய் ரசித்துக் கிடப்பான் காதலை!
தன் குண்டுக் கன்னத்தில் சிரிப்பை நனைத்து
சீண்டலில் வம்பெடுப்பான் வீம்பாய்!

விடியலில் வலை விரித்து
சூரியனை எட்டியும் பிடிப்பான்!
நிலவொளியில் களவாய் காதல் நெய்து
இலஞ்சமாய் தூதனுப்புவான் இயற்கையை!

அவன் திமிர் கண்டு - என்
உயிர் மிரண்டோடும் !
வாஞ்சையோடு கட்டியிழுத்து
கனவிலும் கவி கொட்டும் காரியக் காரனிவன்!

இவன் யாரோ..............எவரோ!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை