மார்கழிப் பூவே


மார்கழிப் பூவே!

சமூக அழுத்தங்களால்
எரிமலை படர்கையில்..........
படர்ந்தாய்
பனி மலையாய்!

மூச்சுக் காற்றுக்குள் துரோகங்கள்
சயனைட்
நிரப்புகையில்................
உறிஞ்சியெடுத்தாய் விடத்தை
உரிமையுடன் நட்பாகி!

ப்ரியமே!
நம்.................
ப்ரிய நேசத்தின் ஆயுளுக்கு
நாள் குறித்ததும் யாரோ!

என் விழியன்னலை
உற்றுப்பார்.................
தெரிகின்றதா
கண்ணீரில் நனைந்திருக்கும்
உன்னுருவம்!

கூடல்.........
ஊடல்............

அன்பின் பரிமாணங்களே!
பற்றிக் கொள்ள விரல் தா
சுற்றி எரிக்கும் துன்பம் துடைக்க!
No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை