நீதான்

Photo: கனகாலம்
நீதான் ...........
என்னைச் சீண்டினாய்
உன் கண்களால்!

கண்ணே ....மணியே..
கண்மணி என்றே - என்
கன்னத்தில் நொறுக்கினாய்
உன் உதடுகளைத் தினமும்!

கண்முன்னே உன்னைப் பரப்பி
ஒவ்வொரு நொடியும் - என்
கருத்தினில் நிறைத்தாய்
ஆசையுடன் உன்னை!!

சிரித்தாய் அடிக்கடி..........
ரசித்தாய் கவியாக்கி....
பூரித்தாய் மனைவியென்றே
கற்பனையில் நம் கரு சுமந்து!

அடடா...........
வாலிபத்தின் சில்மிஷங்களை
ஜாலியாய் தேரோட்டினாய் என்னில் - உன்
அழகிய காதலை வார்த்து!

கனவுகளும் கற்பனைகளும்
நம்மில் மூழ்க........
அடுத்தவர் கண்களுக்குள் நாமும்
கடுப்பாகி உயிர்க்க.......

காலம் வந்தது காதலும் ஜெயிக்க...
பெற்றோர் முணுமுணுக்க
உற்றோர் கரம் சேர்க்க
நாடினர் உன்னை!

கோலமிட்ட நம் காதலை
ஏனடா............
அலங்கோலமாக்கினாய் அவசரமாய்!

ஏந்திழையே.........!

எந் தாயவள் கேட்கின்றாள் உன்னிடம்
சீதனமென்றாய்!

நாமிருவர் வாழ்ந்திடவே- உன்
மாமி கேட்கின்றார் சில இலட்சங்கள்........
என் பெயரில் வங்கியிலும்
இருபது பவுண்கள் உன் கழுத்திலுமென்றாய்...

கனக்க கேட்கவில்லை
காரும் பங்களாவும் தந்துவிடு
நம் பிள்ளைகள் வாழ்ந்திட சொகுசாய்
என்றாய்!

இன்றே நீயும் தந்துவிடு.....
என்றும் உன் கணவன் நானே
இனிதாகும் நம் திருமணமென்றாய்!

நீயுரைக்க நானும் முறைக்க....
காதல் கனவுகள் எனை அறைந்தே சென்றது
"சீ இவனெல்லாம் ஒரு.....

கண்களால் எனைச்
சீண்டினாய்!

கண்மணியாய் விளித்தே
என் விழியுறக்கமும்
அறுத்தாய்!

கன்னம் வைத்து மனசுள் நுழைந்து
கன்னத்தை நொறுக்கினா யுன்
முத்தச் சத்தங்களால்!

கண் முன்னே யுன்னைப் பரப்பி
நிதமும் - என்
கல்பினுள் நிறைந்தாய்
தனிமை விரட்டி!

எனைக் கவியாக்கி
ரசித்தாய் என்னை........
என்னுள் உனை வீழ்த்தி
சிரித்தாய் மெய் மறந்து!

கருத்தினுள் எனை நிறைத்து
கருவும் சுமந்தாய்
அருமையான வுன் சிசுவை!

கற்பனையைப் பிய்த்தெடுத் துன்
வாலிபங்களை ஜாலியாய் முலாமிட்டே
தாலியும் தந்தாய் மனையாளாய்.....

கனவுகள் மெய்ப்படும் வேளை
மற்றோர் நம்மில் கடுப்பாக.......
மறுப்பிலும் வெறுப்பிலும்
பெற்றோர் சம்மதம் காதல் பெற்றிட.....

அடடா.................

கனக்க கேட்கவில்லை
காரும் பங்களாவும் வேண்டுமென்றாய்
நம் பிள்ளைகள் சொகுசாய் வாழ்ந்திட!

சில பவுண்களும்...........
சில லட்சங்களும்.........
வரதட்சணை தந்துவிடு- இப்
பரந்த பூமியில் நம்மவர் பேர்
அடுத்தவர் சொல்லிட வென்றாய்......

கோலமிட்டவுன் சீதன ஆசையால்
அலங்கோலமாகின
அழகான நம் காதல்
சில நொடிகள்!

நீயுரைக்க.........
நானும் முறைக்க......
கனவுகள் எனை அறைந்தே சென்றது
"சீ" இவனெல்லாம் ஒரு............................No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை