உன்னில் தொலைந்த நான்

Photo: பனிச் சலசலப்பில்
பாதையோரம் உதிர்கின்றன- உன்
நினைவுக் குமிழ்கள்!

என் அக வெளியில் உலாவித் திரியும்
பட்சிகளிலெல்லாம்
கொட்டிச் செல்கின்றன உன் தேசத்துச்
செய்திகளை!

நீ நடந்து வந்த திக்கெல்லாம்
நீவி நிற்கும் முட்களெல்லாம்
வாந்தியெடுக்கின்றன - உன்னுள்
குந்திக் கொண்டிருக்கும் கோபங்களை!

நினைக்கவேயில்லை
கனவுக்குள்ளும் குறுகுறுக்கும் - உன்
புன்னகைகளை வெட்டிச் சாய்க்கும்
கோடாரி நானென!

உன் ரசிப்புக்களால் - அன்று
சிலிர்த்த கவிதைகளின்று
விதவைகளாய் மௌனித்துக் கிடக்கின்றன
மங்களத்தையெங்கோ தொலைத்தபடி!

பனிச் சலசலப்பில்
பாதையோரம் உதிர்கின்றன - உன்
நினைவுச் சருகுகள்!

என் அகவெளிப் பட்சிகள்
கொட்டிச் செல்கின்றன - உன்
இராச்சியத்தின் தூதோலைகளை!

நீ நடந்து வந்த திக்கெல்லாம்
நீவி நிற்கும் முட்களெல்லாம்......
வாந்தியெடுக்கின்றன - உன்னுள்
குந்திக் கொண்டிருக்கும் கோபங்களை!

நினைக்கவேயில்லை - உன்
கனவு வேர்களை
வெட்டிச் சாய்க்கும் கோடாரி நானென!

உன் ரசிப்புக்களால் சிலிர்த்த கவிதைகள்
இன்று
எங்கோ வெறிக்கின்றன
மங்களத்தை தொலைத்தபடி!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை