தாயே


தாயே.........

அச்சேற்றிக் கொண்டிருக்கின்றேன்
புதுமைப் பெண்களை.....
உங்கள் கண்ணீரை மறைத்தபடி!

ரோசாவின் வாசத்தால்
சுவாசம் நிறைக்கின்றேன்.......
உங்கள் முட்களை மறந்தபடி!

பாசவேலியிடப்பட்டுள்ள உங்கள்
கருவறையை..........
கல்லறையாக்குவோரோடு
உடன்படிக்கை செய்து கொண்டிருக்கின்றேன்
உறவுகளைச் சிதைக்காமல்!

நீங்கள் சிரித்திருப்பீர்களா........
ஒரு துளியேனும் தேடிக் கொண்டிருக்கின்றேன்
என் ஞாபகங்களைக் குலைத்தபடி!

தாயே.......
காலக் கலண்டரில் நாள் குறித்து
தரணியே புகழ் பாடுகின்றது
நீங்கள் ........
அறையப்பட்டிருக்கும் சிலுவைகளை
அகற்றாமலே!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை