துளிகள் - 3

இனத் துவேசம் துறந்து வாருங்கள்
இங்கே ..............
மொழி மறந்து கூடுங்கள்.........
அழிக்கும் சாதியை ஒழியுங்கள்.......
மதங்கள் மேல் மதமில்லா
நட்புலகம் நமதாகட்டும்!


------------------------------------------------------------------------------------------


காதல் எவ்வளவு இனிமையோ .............
அதைவிட கொடுமை  பிரிவு வலி!

--------------------------------------------------------------------------------------


நாளைய சிதைவுக்கான..........
இன்றைய ஒத்திகை!

----------------------------------------------------------------------------------------
வலிக்கும் போராட்டங்கள்தான்.........
வழி விடும் பயணப்பாதைக்கு!

----------------------------------------------------------------------------------------வாலிபன் முதுமையை விரும்ப மாட்டான்.....
அறிஞனோ இளமையை விரும்ப மாட்டான்!

முன்னவன் கவர்ச்சிக்கான வாய்க்கால்
பின்னவனோ அனுபவக் கடல்!

----------------------------------------------------------------------------------------


சுதந்திரமாக இருப்பதாக எண்ணுங்கள்
சுறுசுறுப்பு தானாய் தேடி வரும்!

அதிக ஆசை அடக்கி வாழுங்கள்...
மனம் என்றும் ஆரோக்கியமாய் வாழும்!

-----------------------------------------------------------------------------------(ஏ)மாற்றங்கள் நிறைந்த வாழ்வினில்
ஏற்றங்கள் தருவன வாழ்வியல் போராட்டங்கள்!
புரிந்தால் சீற்றங்கள் விலகும்..............

------------------------------------------------------------------------------------பல காத்திருப்புக்களின்
சேமிப்பகம்தான்...........
வாழ்க்கை!

காலங்கள் வீணடிக்கப்படும் போது
வாழ்வும்
தன் பெறுமதியை இழந்து விடுகின்றது!

---------------------------------------------------------------------------------------


தானாய் கிடைப்பதை விட......
போராடிக் கிடைப்பதில்தான் மகிழ்ச்சி குவிகின்றது.

ஏனெனில் அணுவணுவாய் உணர்ந்து போராடும் போது கிடைக்கும் அனுபவம் எப்போதும் வெற்றியை தனதாக்கிக் கொள்ளக் கூடியது!

-----------------------------------------------------------------------------------------இன்று நாம் நிராகரிக்கும் விடயங்கள்......
எதிர்காலத்தில் நம்மை ஏங்க வைக்கும் வரங்களாகக் கூட இருக்கும்.

இருந்தும்.........................!

நாமோ சூழ்நிலைக் கைதி!
நம் தீர்மானங்களுக்கு சூழ்நிலைகளும் காரணமாக அமைந்து விடலாம்!

------------------------------------------------------------------------------------------


குழந்தையாகவே இருந்திருக்கலாம்.......
குதுகலமும் குறைந்திருக்காது!

கடந்தது திரும்புமோ.............

மனசோரமோ  ஏக்கத்தின் நிழல்களில்
நசிங்கிக் கிடக்கும் நேரம் இந் நேரம்........!!

----------------------------------------------------------------------------------------நல்ல புத்தகம் மிகச் சிறந்த நண்பர்!
நல்ல நண்பர் - நம்
நற்செயல்களுக்கான கடிவாளம்!

நல்ல நண்பர்களைப் பெற்றோர் வாழ்வில் அதிஷ்டசாலிகளே!

---------------------------------------------------------------------------------------ஏமாற்றங்கள் மனதின் வலி. ஏமாறுபவர்கள் இருப்பதால்தான் ஏமாற்றுபவர்களும் உருவாக்கப்படுகின்றார்கள். ஆனால் ஏப்ரல் முதலாம் திகதி ஏமாற்றப்படும்போது மட்டும் மனதில் சுமந்திருக்கும் கவலையெல்லாம் துறந்து வாய்விட்டுச் சிரிக்கின்றோம். செல்லமாய் சினக்கின்றோம்......
உண்மையில் இந்த பேதமைக்குக் காரணம் நட்பு, அன்பின் ஈர்ப்போ.......................................!2 comments:

 1. அனைத்தும் அருமை... சில வரிகள் - வலிகள்...

  படத்திகேற்ற வரிகள்... (இல்லை வரிகளுக்கேற்ற படமா...?) பாராட்டுக்கள்...

  முக்கியமாக :

  நல்ல நண்பர்களைப் பெற்றோர் வாழ்வில் அதிர்ஷ்டசாலிகளே...!

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை