மார்கரெட் ஹில்டா தாட்சர்

வாழ்க்கை எனும் மைப்புள்ளியை நோக்கி பயணிக்கும் நம் வாழ்வினை பல எதிர்பார்ப்புக்கள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. வாழ்க்கை குறுகியதாய் இருந்தாலும் கூட, அவ்வாழ்வில் நாம் சாதிக்கும் சாதனைகள்தான் நம்மை இவ்வுலகிற்கு அடையாளப்படுத்தும் அடையாளங்களாகிய நிற்கின்றன.
அந்தவகையில் இன்றைய தினம் என் சிந்தனையில் ,  மறைந்த பிரிட்டிஷ் இரும்புப் பெண்மணி மார்க்கரெட் ஹில்டா தாட்சர்........எட்டிப்பார்க்கின்றார்.

அரசியல் மனிதனை வாழவும் வைக்கின்றது, விழவும் வைக்கின்றது. உலகப் புகழடைய மிகச் சிறந்த வழிமுறையாக அரசியல் விளங்குகின்றது. அந்த அரசியல் உட்பிரவேசமே தாட்சரையும் நமக்கு அடையாளப்படுத்தியுள்ளது எனலாம்.

இங்கிலாந்து திருச்சபை மதத்தைச் சேர்ந்த இவர் , 13.08.1925 ல் ஜனனமாகி 13.04.2013 ல் இவ்வுலகை விட்டும் நீங்கியுள்ளார்.

1959 ம் ஆண்டு  முதல் அரசியல் பிரவேசமாக இவருக்கு கை கொடுத்தது பின்ச்லே தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எனும் பதவியாகும். பின்னர் 1970ல் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.  1975 ல் பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவரானார். பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல்வாதியான இவர் 1979 முதல் 1990 வரை 3 தடவைகள் பிரதமர் பதவி வகித்துள்ளார்.

அன்னாரின் ஆம்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக!


Photo: சிறு இடைவெளியின் பின்னர் மீண்டும் என் தளத்தில் பேனா முனையுடன் வந்திருக்கின்றேன்..எதையாவது கிறுக்கிச் செல்லும் அவாவில்.........

வாழ்க்கை எனும் மையப்புள்ளியில் தொக்கி நிற்கும் எதிர்பார்ப்புக்களுடன் தான் நமது வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கின்றது. அக் குறுகிய வாழ்வில் சாதிக்கும் மனிதர்களை இவ்வுலகம் மலைப்போடு வியந்து பாராட்டிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் மறைந்த இரும்புப் பெண்மணி மார்க்கிரட் தாட்சர்....

அவரைப் பற்றி சிறுதுளிகள்.....

ஒரு பெண்மணி இவ்வுலகின் அரசியல் வாழ்வில் அதுவும் பலம் பொருந்திய பதவியில் நிலைத்திருக்கிறாரென்றால் அது சாதாரண விடயமல்ல ..சாதனைகளால் நிரப்பப்பட்ட மனிதரின் அடையாளம் தென்பட வேண்டும். அந்த வகையில் மார்கரெட் ஹில்டா தாட்சர் (Margaret Hilda Thatcher, Baroness Thatcher ஐ நாம் கருதலாம்.

இவர் 13 அக்டோபர் 1925 ல் பிறந்து 8 ஏப்ரல் 2013 ல் மறைந்தார். 

1959ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராக பின்ச்லே தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970இல் எட்வர்டு ஹீத் தலைமையேற்ற அரசில் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1975ஆம் ஆண்டில் நடந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் உட்கட்சித் தேர்தலில் ஹீத்தை தோற்கடித்து பிரித்தானிய எதிர்கட்சித் தலைவரானார். 

1979ஆம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகப் பொறுப்பேற்றார். இவரே பிரித்தானியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் ஆவார். பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல்வாதியான இவர் மூன்று முறை தொடர்ச்சியாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இருபதாம் நூற்றாண்டில் நீண்டகாலம் பொறுப்பாற்றிய பிரித்தானிய பிரதமராக 1979 முதல் 1990 வரை தொடர்ச்சியாக பணியாற்றினார்.

வேதியியல் ஆய்வாளராக துவங்கிய மார்கரெட்பின்னர் சட்டம் படித்து பார் அட் லா ஆனார்.சோவியத் இதழாளர் ஒருவரால் பிரித்தானியாவின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்டு அதுவே அவரது விடாநிலை அரசியலையும் தலைமைப் பண்பையும் குறிக்கின்ற அடைபெயராக அமைந்தது. இவரால் செயலாக்கப்பட்ட கொள்கைகள் தாட்சரிசம் என அழைக்கப்படலாயிற்று

இவரது - வாழ்க்கைத் துணை டெனிஸ் தாட்சர்

பிள்ளைகள் கரோல் தாட்சர் ,மாற்கு தாட்சர்

இருப்பிடம் செஸ்டர் சதுக்கம், பழைய மாணவர் சோமர்வில் கல்லூரி, ஆக்சுபோர்டு
இன்ஸ் ஆப் கோர்ட்

துறை  - வேதியியல் , வழக்கறிஞர்

சமயம் இங்கிலாந்து திருச்சபை

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை