தவிப்பில்கனவுக்கும் வாழ்வுக்கும் சாளரம் நுழைத்து
என்னில் கன்னம் வைப்பவனே.........

உன்னால் மெல்லன சிலிர்த்தன மேனி
காதல் ஸ்பரிசங்களை விழுங்கி!

உன்..........
நினைவு வேர்களில் என்னுலகம் முடிந்து
நான் மௌனமாய் நடை பயில்கையில்...........

சட்டென பின் தொடர்கின்றாய் விடாமல்
என் நிழல் பிணைத்து!

வருவாயா.........என்னவளாய் - என்
விரலிழுத்து நீ பூசும் முத்தங்கள் சூடாகி

மெல்லன பரவுகின்றது - என்
பெண்மைக்குள் நாணம் சேர்த்து........

உன் தவிப்பறிந்தும்........
மௌனிக்கின்றேன் - மனசால்
உன்னை விழுங்கியவாறு!

வா காதல் செய்வோம்- உன்
குரலொலிக்கும் என் ஆன்மாவின் காதலை
மறைத்தவாறு...........

மறைகின்றேன் உன்னை தொலைவாக்கி
கரைகின்றன விழிகள் சிவப்புறிஞ்சி!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை