நினைவுகளில்காதலித்தால் கவிதை வரும்
காதலழிந்தால்......................
கவிதையுடன் கண்ணீரும் வரும்!

நேற்று கவிதையாய் பூத்த நான்
இன்று.........
கண்ணீரில் கரையும் ஓவியமாய்!

அவன்...................
மாற்றம் தந்த ஏமாற்றம்
தடுமாற வைக்கின்றது என் மனதை!

வலிக்கிறதடா.............
உன் மௌனத்தின் இம்சையில்
சிதைகின்றதடா என் மனசு!

நிமிடத்திற்கு நிமிடம்
பெயரழைத்தே.....
சீண்டினாய் ஊடல் குலைத்து!

இனி காண்பேனோ
அன்பால் வருடுமுன்
காதல் மனதை!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை