ஒரு காதல் கடிதம்
அன்புள்ள......................!

நான் உன்ன நேசிக்கிறது உனக்கு தெரிஞ்சும் கூட ஏன்டி என்னக் காயப்படுத்துற. உன் மேல எவ்வளவு ஆச வைச்சிருக்கிறேன்.உனக்காக உசிரய தருவேன்டி...அது உனக்கு தெரிஞ்சும் உன் மௌனத்தால கொல்றீயடி.....சத்தியமாச் சொல்றன்.....நீயெனக்கு கெடக்கலைன்னா செத்துப் போய்டுவேன்டீ"

இப்படிக்கு ..........................

இது எனக்கு நேற்று கிடைத்த காதல் கடிதமொன்று......

(அட.....வெயிட்.....எனக்கல்லப்பா....மொறைக்காதீங்க)

இத எழுதினது 16 வயது மாணவன், (தரம் 1 1) எங்க ஸ்கூல்தான் படிக்கிறான். அவனுக்கு நான் சயன்ஸ் பாடம் படிப்பிக்கிறேன். ரவுடித்தனத்தில பர்ஸ்ட்..படிப்பில சத்தியமா அவனுக்கு மண்டைல ஒன்னுமே ஏறாது. தினம் தினம் என்னட்ட ஏச்சு வாங்கும் போது மண்டைய மண்டைய ஆட்டுவானே தவிர அதில ஒன்னுமே ஏறாது.

அவள் தரம் 9 படிக்கும் மாணவி. கெட்டித்தனம், அழகு, அமைதி , செல்வம் எல்லாம் ஒரே இடத்தில குவிந்திருக்கும் பிள்ளைதான் .. இவன் தொடர்ந்து 2 வருஷமா அவளை ட்ரை பண்ணிட்டு வாறன்,. அவளோ அவனத் திரும்பிக் கூடப் பார்க்கல. கடைசில அவர் பொறுமை இழந்தவராக தன் நண்பியிடம் இக் கடிதத்தைக் கொடுத்து தூதனுப்ப, அவள் இதை வாங்க மறுத்து வீசியெறிய.................

அக் கடிதம் ஆல் ரவுண்டராகி கடைசியில் அந்தப் பெண் பிள்ளையின் வகுப்பாசிரியையான என்னிடமே திரும்பி வந்து சேர்ந்தது. விசாரணையை நான் தொடங்கி விட்ட போது , அந்தப் பிள்ளை தனக்கு நடந்ததை சொல்லி அழ, அவனைத் தேடினேன்.

எப்படியாவது ............ அவன் திங்கட்கிழமை என்னிடம் மாட்டுவான்தானே .அப்ப இருக்கு..........

இதுகள் எல்லாம் லவ் பண்ணி........கருமம் கருமம்....
படிக்கிற வயசில நாசமாக போகத் துடிக்கிறவன அடி கூடத் திருத்தாது!No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை