விரலிடுக்கு பேனாவாய்
உன் விரலிடுக்குப் பேனாவாய்
தீ ஜூவாலைகள்!
உன் உதடு தொட்டுக் கொள்ளும்
ஒவ்வொரு புகையிலும்............
கருகிப் போவது என் ஆத்மாவல்லவா!

அன்பைக் கற்றுக் கொடுத்த
நீதான்.................
பிடிவாதமாய் என் கண்ணீரையும்
நீ பற்றும் தீயில்
அணைத்துச் செல்லத் துடிக்கின்றாய்!

உன் உயிரைக் கருக்குமிந்த வேள்வியின்
விலையாய் என்னுயிரும்தான்!
அறிந்தும் அறியாததுபோல் - எனைக்
கடந்து செல்கின்றாய் ஆணவமாய்
நீயோர் ஆண் மகன் என்பதால்!

உனைக்கான என் கெஞ்சல்கள் எல்லாம்
செல்லாக் காசாகி
வீழ்ந்து கிடக்கின்றது மௌனவெளியில்....

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை