புரிதலும் பிரிவும்குதுகலங்களும் குறும்புகளும்
உன் வாழ்வியலின் விசிறிகள்.........
புரிய வைத்தாய் எனக்கு
புளாங்கிதமாய் விடிந்த விடியலை
இருளாக்கி!

இருந்தும்...........உன்
மெய்யின் அரங்கத்துக்குள்
எத்தனை பொய்கள்!

மறைத்தாயா.........
உன்னை எனக்கு மறைத்தாயா!

அலட்சியங்களும் அவமானங்களும்
வாழ்வோரத்தின் கற்களல்ல..........
அவை - என்
புதுப் பாதையின் தடங்கள்!

உன்னை நான் சபிக்க மாட்டேன்
என்னை எனக்கே...........
அடையாளப்படுத்திய ஆன்மா நீ!

நேற்றுதிர்ந்த உன் வார்த்தைகள்
இன்னும் ஈரம் துடைக்க முன்னர்...........
நீயோ வெம்மைக்குள்
கருகிக் கிடக்கின்றாய்!

அழகும் காமமும்...............
வாலிபத்தின் நோட்டங்கள்!
தீர்ந்த பின்னர்தான் தேடலில் வீழும்
அன்பின் சிலிர்ப்புக்கள்!

இனி...............
உனக்காய் அழவே மாட்டேன்!
என் கண்ணீரைக் கூட - உனக்கான
புன்னகை வரமாய் விட்டுச் செல்வதால்!

என்னை ஓர் கணம் சிந்தி!
உன் வாலிபக் கடலின்
சஞ்சலங்களை கரையொதுக்கி..........
ஒரு கணம் சிந்தி!
கண்ணீரின் ஈரம் ஒரு துளியாவது
எனக்காய் சேரும்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை