தீவெற்றிடத்தை நிரப்பும் காற்றாய்
விருட்டென்று நுழைகின்றாய் என்னுள்!

மிரட்டுமென் தனிமை கொஞ்சம் விரண்டோட.........
கொட்டும் மழையில்  மேனி கரைந்துன்னுள் வழிய

வெட்டும் மின்னலாய் முட்டுமுன் புன்னகையில்
கட்டிப் போடுகின்றாய் என் மனதை மெல்ல!

தவிப்பின் தணலில் மெழுகாய் நம்மேனி கரைய- உன்
வகிடெடுக்கும் விரலால் கீறி என்  நாணம் கிழிக்க........

அடடா..........

மோகம் கிளர்ந்தெழுந்து சாரலாய் நம்முள் கசிய
காமம் வனைந்து கொள்கின்றது நம் காதலை!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை