புரிதலின்றிபேசித் தீர்த்துவிடு
நம் வாழ்வை நம் முன்றலில்!
இல்லையென்றால்..........
பிளவுபடுவது நாமல்ல - நம்
வளமான குடும்பம்!

சமாந்தரங்களாய் நாம் பயணிக்கையில்
நம் குழந்தைகள்
எதிர்காலம் முடிவிலியில்!

மனசு பார்த்து இணைந்த நாம்
இன்று.................
சட்டம் பேசி நிற்கின்றோம்
வாழ்வை சிறைப்பிடுத்த!
வனப்பைச் சிதைக்க!!

விவாகத்திலிருந்து விமோசனமா
இல்லை
விவாகரத்திலிருந்து விடுதலையா!
புதிராகி நீ எனக்குள்!

சொல்லிவிடு...........
நல்ல பதிலை!
என் மரணத்திற்காய்  நாள் குறிக்கும்
உன்னிடம்தான் கேட்கின்றேன்!

1 comment:

  1. படமே பலவற்றை சொல்லி விடுகின்றன...

    புரிதல் இல்லை என்றால் எதுவுமே / எல்லாமே சிரமம் தான்...

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை