முகநூல் பயணம்முகநூல்..........!

நவீனத்தும் போஷிக்கும்
இயந்திரம்!

ஒரு நொடியில் .......
உலகம் தொட்டு வர - நமக்கு
அனுமதிக்கப்பட்ட விசா!

விண்ணப்பிக்கும் முகங்களை
தெரிவு செய்ய வுதவும்............
தேர்வு மையம்!

படிக்கப் படிக்க
அலுக்காத புத்தகம்!

இங்கே............!

தொலை நிழல்கள் கூட
நிஜங்களாய் ..................
வார்த்தை பேசிச் செல்லும்
பாசத்துடன்!

நட்பு.........
காதல்......
பொழுதுபோக்கு.....
போராட்டம்...........
பகைமை...............

என எல்லாமே கிடைக்கும் தாராளமாய்..........
இலவசமாய்!

இங்கு
உணர்வுகள்தான் பேனா மொழி!
கிண்டல்களும் பாசங்களும்..............
போதனா மொழி!

வாருங்கள் இங்கே........!

இலக்கியம் வளர்க்கலாம்
புதுமைகள் பகிரலாம்......
பழகிப் போகும் உள்ளங்களுடன்
அன்பைச் செலுத்தி
பொழுதையும் நகர்த்தலாம்!

முகவரிகளும்........
முகமூடிகளும்......
வேள்வி நடத்தும் இவ் யாகத்தில்

புத்திசாலிகள் பிழைத்துப் போவார்!
அப்பாவிகள்
அழிந்தும் போவார்!

முகநூல் பாதுகாப்புக் கடவையில்
தரித்து நின்று..........
பின்னூட்டங்களும் விருப்புக்களும்
படைப்புக்களில் சேகரித்துக் கொள்ள...

இதோ கணனிப்
 பயணம்!

வாருங்கள் கை கோர்ப்போம்
நல்ல நண்பர்களாய்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை