சித்ரா பௌர்ணமிசித்ரா பௌர்ணமி!
சிரிப்பாள் என் தோட்டத்தில்
அழகாய் ...........நாளை!

மல்லிகை மொட்டுக்களாய் .................
விரிந்து கிடக்கும் நட்சத்திரக் குவியலுக்குள்
மயங்கிக் கிடக்கும் மணப்பெண்ணாய் அவள்!

ஒளி நீரூற்றுக்களை என்னுள் விசிறி
அவளென் கன்னம் கிள்ளுகையில்..........
கிறங்கிப் போவேன்
கவிகளை கிறுக்கியபடி!

பவ்வியமாய் சிரித்து - என்
மனசு கௌவும் அவள் வரும் வரை.............
இன்னும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும்
என்னுடன் சேர்ந்து நீங்களும்!

2 comments:

 1. அருமை... காத்திருக்கிறேன் மேலும் ரசிக்க...

  இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன், உங்களுக்கும் எனது சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

   Delete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை