அறிவியலில் நாம்அண்டவெளியின் அணுப் பிழம்புகளில்
அதிசயமாய் உலா வரும் முகிற்கூட்டங்களில்......
ஒட்டிக் கிடக்கின்றதுன் மென்மனசு !

காற்றின் தள்ளுகையில் சுரம் கோர்த்து
மனசோரம் இசை நெய்து..........
மானசீகமாய் உன்னுள் வீழ்த்தும் சங்கீதமாய்
சரித்திரமாகின்றது நம் நட்பு!

உன் கண் பந்துகள் உருட்டும்
நேச விசைகளின் ஈர்ப்பில் கட்டுண்டு...........
உன்னைப் பற்றிச் சுற்றும் பம்பரமாய்
எனை அருட்டுகின்றதுன் அன்பு!

உன்னில் கரைந்து கிடக்கும்
பாசத் துகள்களால் - என்
வெந்நீர் மனமும் கூட வெருண்டெழாது.......
சந்திரக் கீற்றுக்களை முகத்திலேந்தி
சிந்தி நிற்கின்றதுன் நினைவுகளை!

கருமை சூழ்ந்த கொன்றல்களின் நடுவே
விருட்டென்று தரையில் வேர் நாட்டும்.........
மின்னலாய் அடிக்கடி ........
என்னுள் கண் சிமிட்டும் நீ....................

அறிவாயா.............!

அறிவியலாய் என்னுள் வாழும்
அழகு நட்பு தானென்று !

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை