இனியுன்னைவிடியலின் விரல்கள் - என்
விழி தழுவிச் செல்கின்றன!

காற்றின் சில்மிசத்தில்
காணாமல் போயிருந்த என் உறக்கம்
மெல்ல மொட்டவிழ்கின்றன
உனை நோக்கி!

கால விரயத்தில்
காணாமல் போன நம்முறவுகள்
மீண்டும் தளிர் தொடும் பசுமைகளாய்!

உடைந்து போன கனவுகளை
மெல்லன ஏந்தி................
கெஞ்சுகின்றன நம் காதல்
விதியிடம்!

இதோ...........!

அன்பின் சிறகடிப்பில்
ஆரத்த தழுவும் உன் ஆன்மா
மெல்லக் கிள்ளுகின்றன - என்
கன்னம் சிவக்க
"இனியுன்னைப் பிரியேனடி"
No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை