நெருடல்மண் பார்த்து நடக்கும் ஆண் கூட
பெண் அன்பில் கொஞ்சம் நசிந்து
விண் பார்ப்பான் புன்னகையோடு
தன்னவளை நினைந்து.................

அம்மாடி இதுதான் காதலோ
அட...ராமா............................
-----------------------------------------------------------------------------------------கண்ணாடி மனசை கல்லெறிகின்றனர்
உடைவதென்னவோ
மனசல்ல........உயிர்!

------------------------------------------------------------------------------------------அன்புடையார் எல்லோரும் உயர்ந்தோரே!
ஏனெனில்.........
அன்பு வாழ்வைக் கற்றுக் கொடுக்கின்றது
பேதங்களைத் துடைத்தெறிந்து!...

--------------------------------------------------------------------------------------


அழகு மறைந்த பின்னும்- நமக்குள்
நிழலாகும் இரத்த பந்தங்கள்!
போலி வாழ்வுக்குள்ளும் வேலியாகும்
நம் ஆருயிர் சொந்தங்கள் !
----------------------------------------------------------------------------------------என் குரல் (குறள்)
--------------------------
தேடி வரும் சந்தர்ப்பங்களைத் தானிழப்போர்
கோடி துன்பம் தானடைவார் தம் வாழ்வில்!
----------------------------------------------------------------------------------------இளமையின் சுவாரஸியம்
இதயம் எரிக்கும் அக்கினியாக!

சாம்பர் மேட்டில் சரிதமெழுதும்
நிக்கற்றின் வாசிகள் இவர்கள்!

மூச்சுக்குள் விஷம் தடவும்
மூடர்கள் இவர்கள்!

உதடேந்தும் புகையினால்
உருக்குலைந்த ஆத்மாக்கள்!

விண்ணகம் தொடும் மரண வாகனமாய்
விசிலடிக்கும் சிகரெட் காத்திருக்கின்றது
புகைப்போர் அருகாமையில்.....

நகைக்காதீர்!
புன்னகை மறந்தோரே!

-----------------------------------------------------------------------------------------------மலரும் நானும் ஒன்றென்பதனாலா
அடிக்கடி தரையில் உதிர்க்கின்றாய் என்னை
வீம்பாய்!
நீ கசக்குவது என்னை மட்டுமல்ல.........
அழகான  உன் வாழ்க்கையையும் தான்!
நீ மிதிப்பது என் உணர்வுகளையல்ல
அழகாய் வருடிச் செல்லும் அன்பையும்தான்!

-----------------------------------------------------------------------------------கண்ணாடி முன் நின்று
என்னுள் உன்னைப் பார்ப்பதில்தான்
எத்தனை சந்தோஷங்கள்!

நான் நீயாய்
நீ நானாய்...
அன்பின் தித்திப்பில்
அடங்கிக் கிடக்கின்றது நம்மனசு!
-------------------------------------------------------------------------------------உறங்காத மனக்கண்கள்
எழுதும் கவிதை
"கனவு"
-------------------------------------------------------------------------------------
விழியில் நாணங் கலந்து
கன்னத்தில் மருதாணிச் சாறு நனைத்து
மனசெங்கும் துடிப்பு நிறைத்து
உயிரிலே உன்னைக் கரைத்து
காத்திருந்தேன் கனவுகளுடன்
காதலோடு கசிந்தாய் மெல்ல!!

மென் பாதம் தொட்டு
நீ சூட்டும் மெட்டி ஒலி........
மெட்டசைக்கும் நம் காதலோசையாய்
மொட்டவிழ்த்து நானுமுன் கரம் வீழ
எட்டுத் திக்கெங்கும் மேள சத்தம்
நீ கட்டும் தாலி என்னுள் உன்னுயிராய் வருடும்!!

மஞ்சள் நாண் பூட்டி .............உன்
விழிக் கொஞ்சலில் முத்தம் சிதைத்து.......
அழகான வாழ்வும் தந்தாய் காதலுடன்
பல காலம் நானும் உன்னவளாய் வாழ!

உன்னைச் சுமக்கின்றேன் நெஞ்சோரம்
என் மேனியின் அறுவடை உனக்காகவே!
உன் உதட்டோரக் குறும்புகளில் சுருங்கும்
முத்தங்களை சேகரிக்கும் தேனீயாய்
தினமுன்னைச் சுற்றும் ராணி நான்!
-----------------------------------------------------------------------------------------------உன்னை நானும்....
என்னை நீயும் .......
உயிரில் நனைத்த அங்கீகாரம்
தினமும் முத்தமாய் பரவிச் செல்கின்றது
நம்முள்!

இப்பொழுதெல்லாம்
நம் இதழ்கள்..........
முத்தத்தின் சிலிர்ப்பில்தானே
மூச்சு விடுகின்றது!

மயிலிறகை உன் விரலில் நசித்து
என் கன்னம் கிள்ளும் உன் குறும்பில்
கிறங்கிக் கிடக்கின்றது என் ஆயுள்!

நம் சந்திப்பின் ஒவ்வொரு புள்ளியிலும்
நீ எனக்குள் பதியமிடும்............
உன் முத்தத் தடங்கள் நொறுங்கிக் கிடக்கின்றதே
பனித் துளிகளை அணைத்தபடி!

இப்பொழுதெல்லாம் ............
நாம் மௌனித்துக்கிடக்கின்றோம்!
நமக்குள்...........
முத்தங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றன!

--------------------------------------------------------------------------------------அன்பும் ஆசையும் இணைத்து..........
ஈருடலின் உயிரை ஊர் ஒன்றுகூடலில் ஓருயிராக்கி
என்றும் ஏற்றமாக ஐக்கியமாக்கும் ஓளடதமே  திருமணம்!
--------------------------------------------------------------------------------------அன்பின் மொழி அழகான இதயம்!
அழகான இதயத்தின் நுழைவாயில்
மழலையுதிர்க்கும் குழந்தை!
---------------------------------------------------------------------------------------அன்பு.........
அழிப்பதில்லை........
மனசை ஆள்வது, ஆக்குவது!

நாம் வழங்கும் அன்புக்கு பிறரிடமிருந்து பெறுமதி கிடைக்காத போது,
நமது அன்பும் ஊனமடைந்து விடுகின்றது!

இது என் குறள் (குரல்)
------------------------------------
"அன்பு செலுத்தார் இனங் கண்டு புறந் தள்ளுக
அது நம் மனதிற்கு துன்பந் தராத  அருமருந்து"

-----------------------------------------------------------------------------------------சோகம் வருகையில் கண்ணீர் துடைக்கும்
உங்கள் கரங்கள்..........
என் மகிழ்வில் உதிரும் புன்னகை சேர்க்கும்
உங்கள் கன்னங்கள்......
நொடிக்கொரு தடவை பெயர் உதிர்க்கும்
உங்கள் உதடுகள்.........
இதமான அன்பைத் தந்து சிரிக்கும்
உங்கள் மனசுகள்............
நொடிக்கொரு தடவை வேடிக்கை சேர்க்கும்
உங்கள் வார்த்தைகள்..........
எல்லாம் பெயர் சொல்லி நிற்கும் என்றும்
உங்கள் நட்பாய்....
1 comment:

  1. அட ராமா...! ஆரம்பித்து அனைத்தும் அருமை... குறள்கள் உட்பட...

    படங்கள்....? அழகு... அட்டகாசம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை