என் இரவாய்இப்பொழுதெல்லாம் - என்
ஒவ்வொரு இரவுகளும் விழித்திருக்கின்றன
என்னைப் போல
உன் நினைவுகளையும் சுமந்து!

வெட்ட வெளியாய் பரந்த வானில்
கொட்டக் கொட்ட முழித்திருக்கும்
நட்சத்திரங்கள் கூட..............
உன்னையே சுமந்து காத்திருக்கின்றன
என் வெறுமை நீக்க!

யன்னல் திறந்து உள் நுழையும் காற்றுக் கூட
நள்ளிரவில் குளிர் களைந்து
வெப்பப் பிரளயத்தில் என் மேனி நசிக்குது
இதமாக!

இருள் வெளியின் குரல்வளைச் சத்தமாய்
ஒலிக்கும் ஆந்தை அலறல் கூட.................
உன் கைபேசி அழைப்பாய்
என்னை முட்டிச் செல்கின்றது ஆர்வமாய்!

உனக்காக காத்திருப்புக்கள் சுகமானதுதான்
உன் குரல் வயலில் எனை நாட்டத்துடிக்கும்
உனக்கான காத்திருப்பு சுகமானதுதான்!

உனக்குத் தெரியுமா............
உன் காத்திருப்பு மட்டுமல்ல
உன் முத்தவோசை இன்றிக் கூட - என்
இரவுகள் விடிவதில்லை!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை