தடையில்லையினியாரறுத்தார் நம் சிறகுகளை...
உயிரறுந்து கிடக்கின்றது - நம்
பட்டம்பூச்சி!

இரவின் வெம்மையில்
உஷ்ணம் சொறிந்த உன் வெண்ணிலா கூட
சாம்பராகிக் கிடக்கின்றதென் மெத்தையில்!

உனக்கான என் கவிதைகள் கூட
இப்பொழுதெல்லாம் ..........
கல்லறைக்குள் தனித்து முணுமுணுக்கின்றது!

நேற்று
கற்றுத் தந்தேன் காதலை.....
இன்று நீயோ.........
இன்னொருத்தியின் உணர்வாய்!

உன் மாற்றம்........
எனக்குள் ஏமாற்றம்!
உயிர் வதைக்கும் தடுமாற்றம்!

விடை பெறுகின்றேன்
மடையுடைக்கும் கண்ணீர்த்துளிகளுடன் !
தடையில்லையினி உனக்கு நான்!

அன்பும் பொய்த்தது.....
ஆசைக் கனவுகள் உடைந்தும் போனது!
இன்னலை என் ஜன்னல் கன்னம் வைக்க
இன்னொருத்தியின் வாசமாய் நீ!

2 comments:

 1. /// உன் மாற்றம்........
  எனக்குள் ஏமாற்றம்...!
  உயிர் வதைக்கும் தடுமாற்றம்...! ///

  இனி நல்வாழ்வு மலரட்டும்... மலரும்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அன்பும் பொய்த்தது.....
  ஆசைக் கனவுகள் உடைந்தும் போனது!
  இன்னலை என் ஜன்னல் கன்னம் வைக்க
  இன்னொருத்தியின் வாசமாய் நீ!...very.nice line...

  ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை