உனக்காய் நீ


உன் பாதையில் நானில்லை
புரிந்தும் காத்திருக்கின்றாய்
என் தடமோரம் பாசத்துடன்!

வலிக்கின்றது.....
தினம் என்னைத் தேடும்
உன் பாசத்தின் செறிவும்
என்னைப் பற்றிய நம்பிக்கைகளும்!

அன்றென்னை தொலைத்துவிட்டு
இன்றல்லா தேடுகின்றாய்........
சந்து பொந்துகளில்!

மழையில் நனைந்தவாறே- எனக்கு
குடை பிடிக்க நினைக்கும் உன்னிடம்....
கேட்கின்றேன் - நீ
நல்லவனா வில்லனா......!

முட்களை முகமாக்கி நிற்கும் உன்னிடம்...........
சத்தமில்லா ஓசையாய் விம்மலொன்று
வெடித்தெழுகின்றது இப்பொழுதெல்லாம்!

அழுகின்றாயா.........
எனக்காக அழுகின்றாயா.....
ரணங்களை மட்டும் உனக்காக்கும் எனக்காக
தினம் அழுகின்றாயா!

புயலுனக்குள்ளும்..........
பூத்திருக்கும் பூவுக்குள்
மறைந்திருக்கும் மகரந்தங்களாய்........
என் நினைவுகளை மட்டும் விட்டுச் செல்கின்றேன்
உன்னிடம்!

நீ வாழ வேண்டும்...........
உனக்காய்.....
உனக்குள் நீயாய்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை