உனக்கான என் வரிகள் - 2

Photo: ஒவ்வொரு நொடிகளும்
வந்து போகின்றாய் என்னுள்.....
கன்னம் கிள்ளி முத்தம்
சிந்துகின்றாய் தித்திப்பாய்.....

உன்னுள் நானும் என்னுள் நீயும்
வாழும் அந்த வாழ்வுக்கு...
ஆயுள் நூறாகட்டும்
பிரார்த்திப்போம் வல்லோனிடம்!

ஒவ்வொரு நொடிகளும்
வந்து போகின்றாய் என்னுள்.....
கன்னம் கிள்ளி முத்தம்
சிந்துகின்றாய் தித்திப்பாய்.....

உன்னுள் நானும் என்னுள் நீயும்
வாழும் அந்த வாழ்வுக்கு...
ஆயுள் நூறாகட்டும்
பிரார்த்திப்போம் வல்லோனிடம்!

---------------------------------------------------------------------------------

ஆழமான அன்பு அறியாத சொற்கள்....
பிரிவு!
பிரிவிலும் இணைந்திருப்பது
பரிவுள்ள மனங்கள்!

----------------------------------------------------------------------------------

உன் நிழல்படாத என்னிந்த பக்கங்கள்
கண்ணீரால் கழுவப்பட்டுக் கொண்டிருக்கின்றது
சில நாட்களாய்!

----------------------------------------------------------------------------------

உனக்கு நான்......
எனக்கு நீ......
போதும் இந்தப் பிரபஞ்சத்தில்
உன் சின்ன இதயம் என் னிருப்பிடமாய்!

-----------------------------------------------------------------------------------

செல்லச் சண்டையிடும்போது வலிக்கும் மனது....
சில விநாடிகளில் நாம் அவற்றை மறந்து விட்டுக்கொடுக்கும்போது உருவாகும் சந்தோஷத்தில் மெய் மறந்து சிலிர்க்கின்றது...

இது அன்பின் சிலிர்ப்பு செல்லமே!

-----------------------------------------------------------------------------------

உன் விரல் ஸ்பரிசங்களில் கரைய
காத்திருக்கு மென் விழிகள்..........
நீ யுன் துன்பத்தில் உறையும்போதெல்லாம்
கரைந்து விடுகின்றன கண்ணீராய்!

Photo: உன் விரல் ஸ்பரிசங்களில் கரைய
காத்திருக்கு மென் விழிகள்..........
நீ யுன் துன்பத்தில் உறையும்போதெல்லாம்
கரைந்து விடுகின்றன கண்ணீராய்!

---------------------------------------------------------------------------------

உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன்
உனக்கே தெரியாமல்....
ஊரு சனம் தூங்கும்போதும்
உனக்காய் விழித்திருக்கின்றேன் - நீ
அனுப்பப் போகும் குறுஞ்செய்திகளுக்காய்!

Photo: உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன்
உனக்கே தெரியாமல்....
ஊரு சனம் தூங்கும்போதும்
உனக்காய் விழித்திருக்கின்றேன் - நீ
அனுப்பப் போகும் குறுஞ்செய்திகளுக்காய்!

----------------------------------------------------------------------------------------

நகரும் ஒவ்வொரு விநாடியும் ...
உன் நேசிப்புடன்தானடா ...
என் செல்ல உறவே!
No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை