உனக்கான என் வரிகள் - 3

Photo: போய் வருகின்றேன்.....
உனை விட்டு நீண்ட தூரத்திற்கு!

அதுவரை.........!

சுதந்திரமான உன் வாழ்க்கை
சுகமான உன் உறக்கம்....

என்பவற்றை.....
உனக்கே தந்து விட்டு

மௌனத்தை மட்டும் எடுத்துக் கொண்டவளாய்

போய் வருகின்றேன்.....
உனை விட்டு நீண்ட தூரத்திற்கு!

போய் வருகின்றேன்.....
உனை விட்டு நீண்ட தூரத்திற்கு!

அதுவரை.........!

சுதந்திரமான உன் வாழ்க்கை
சுகமான உன் உறக்கம்....

என்பவற்றை.....
உனக்கே தந்து விட்டு

மௌனத்தை மட்டும் எடுத்துக் கொண்டவளாய்

போய் வருகின்றேன்.....
உனை விட்டு நீண்ட தூரத்திற்கு!

-----------------------------------------------------------------------------------------
Photo: நெருப்பு குளிரை அனுமதிக்காது!
பிரிவை அன்பும் நெருங்க விடாது!

நீண்ட சமுத்திரங்கள் பிரித்திருக்கும் நம்மை
தீண்டாத பிரிவும் வெட்கப்பட - இதோ
துளிர்த்துக் கொண்டே யிருக்கின்றது
நம்மன்பும்!

உன் நினைப்பில் உறைந்து
உறுதியான காதலால் வியர்த்திருக்கும் - என்
னன்பை பறைசாற்றும் பார்வை.....

பாதை பார்த்திருக்கின்றது - நாளை
உன் னிழலுடன் பிணைந்து கிடக்க!

நெருப்பு குளிரை அனுமதிக்காது!

----------------------------------------------------------------------------------------
Photo: நாம் யாரை அதிகமாக நேசிக்கின்றோமோ...
அவர்கள்தான் நம்மை அதிகமாக வருத்தப்பட வைக்கின்றார்கள்!

உண்மைதான்....!

ஒருவரின் அன்பு தள்ளிப்போகும்போது, வருத்தும் அந்நேசத்தின் வலி குறைக்கும் நிவாரணியாய் மௌனம்தான்!

ஏனெனில்....
பேசுவதைவிட , ஒருவரின் மௌனம் அதிகம் சாதித்து விடுகின்றது!

காதலின் அடிப்படை அன்புதான்...
காதல் காயப்படும்போது
கண்ணீர்தான் அதனைக் குணப்படுத்துகின்றது!

நாம் யாரை அதிகமாக நேசிக்கின்றோமோ...
அவர்கள்தான் நம்மை அதிகமாக வருத்தப்பட வைக்கின்றார்கள்!

உண்மைதான்....!

ஒருவரின் அன்பு தள்ளிப்போகும்போது, வருத்தும் அந்நேசத்தின் வலி குறைக்கும் நிவாரணியாய் மௌனம்தான்!

ஏனெனில்....
பேசுவதைவிட , ஒருவரின் மௌனம் அதிகம் சாதித்து விடுகின்றது!

காதலின் அடிப்படை அன்புதான்...
காதல் காயப்படும்போது
கண்ணீர்தான் அதனைக் குணப்படுத்துகின்றது!

-------------------------------------------------------------------------------------------
Photo: முன்பெல்லாம்....!

பல இரவுகள் விழித்துக் கொண்டுதானிருந்தன - நம்
பேச்சொலிகள் நிசப்தம் கிழிக்க!

இப்பொழுதோ...!

இரவுடன் நானும் விழித்துக் கொண்டுதானிருக்கின்றேன்.....
நீயோ...
தூங்கி விடுகின்றாய் நேர காலத்துடன்!

உனக்குள் நான் சலித்து விட்டேனா!
முன்பெல்லாம்....!

--------------------------------------------------------------------------------------
அன்று....
நீ காதல் தந்தபோது - உன்
மடியில் குழந்தையாய் தவழ்ந்தேன்!

இன்று....
நீ பாசம் மட்டும் கேட்கும்போது
என் மடியில் குழந்தையாய் நீ!

காதல்....
பாசமாகி...

நம்...
பார்வைகள் காலத்தின் கைப்பிடியில்
மாற்றம் காட்டலாம்!

ஆனால்...
இரண்டும் அன்பின் பரிணாமங்களே!

---------------------------------------------------------------------------------------

என்னை நீ இன்று மறந்தாலும்கூட
என்றோ ஒருநாள் நினைப்பாய்.....

அன்று நான் மீள திரும்பி வருவேன்...

ஒருவேளை நீ என்னை நினைக்காமலே விட்டால்..
நீ தந்த நினைவுகள் போதும்
நான் வாழ்வதற்கே!

விடைபெறுகின்றேன்......

--------------------------------------------------------------------------------------

நீ விரும்பும் மௌனமே
இனி என் மொழியாக....

---------------------------------------------------------------------------------------

எதையும் தாங்கும் இதயமாய் நானிப்போ.....
உன்போல் பக்குவப்பட்டேன் இப்போது!

இனி ........

நமக்குள் சண்டைகள் இல்லை!!

ஆனால்...

Sunday வருமே!

----------------------------------------------------------------------------------------

இப்போதெல்லாம் நம்மைப் பிரிக்கும் முதல் விதியாய்
உன் தாய்!

----------------------------------------------------------------------------------------

துன்பங்கள் கரைந்து வெற்றி கொள்வாய்...
துவண்டு விடாதே மனமே!

----------------------------------------------------------------------------------------

அன்புக்கு காதல். பாசம், நட்பு என்று பல பக்கங்கள்..

அது எந்த பேதமும் பார்க்காது.  காதல் எனும் அன்பு வாழ்க்கையைத் தீர்மானிப்பதனால் பல வாலிபங்களின் தலைவிதி அந்த காதலின் காலடியில்...

அந்த காதலின் வெற்றி கல்யாணம் என்று பல இதயங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால்.....

தான் நேசித்தவனின் வாழ்க்கையில் நிம்மதி, சந்தோசத்தை ஏற்படுத்துவதே அந்தக் காதலின் முதல் வெற்றி!

-------------------------------------------------------------------------------------------

உன்னை என்னுள் பூட்டி வைத்தேன்
சாவியை எங்கோ தொலைத்து விட்டேன்...
தொலைத்ததை நானும் தேடவில்லை
நீயும் என்னுள் இருந்து விடு!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை