நிலா மோனா - 4என் காலடிச்சுவடு - உன்
வாழ்க்கைப் பாதையில்!

நீயோ....

விரைந்தோடுகின்றாய்....
என்னைத் தனிமையில் வீழ்த்தி!
------------------------------------------------------------------------------------


தம் செயற்பாடுகளால் சிலர் உணர்த்தும் மாற்றங்களை நாம் உள்வாங்கும்போது.........
காலப்போக்கில் அம்மாற்றங்களை சகித்துக் கொள்ளப் பழகிக் கொள்கின்றோம்!

இதுதான் வாழ்க்கை.......

எனும் உளப்பக்குவம் தரும் அமைதி நம் எதிர்கால நாட்களுக்கான சிறந்த உரமாக மாறி விடுகின்றது!
-------------------------------------------------------------------------------------


ஒருவர் மீதான நம்பிக்கை உடையும்போது, அவர் நமக்குள் ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்ப்புக்களும் தானாக மறைந்து விடுகின்றது....

------------------------------------------------------------------------------------


புன்னகை மூலமாக வௌிப்படுத்தப்படும் அன்பினை கால மாற்றங்கள் சேதப்படுத்துவில்லை....

உண்மையான உள்ளத்தின் அன்பினை வௌிப்படுத்தும் குறிகாட்டியாய் புன்னகை அமைந்து விடுகின்றது!No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை