உனக்கான என் வரிகள் - 4

Photo: நீ மறந்து போனவை இன்னும் எனக்குள் ஞாபகங்களாய்....

அன்று...

உன் தலையணைக்கு என் பெயர் சூட்டி உறங்கும்போது இறுக்கமாய் அரவணைத்து தூங்கிய நீ....

இன்றோ....

என்னை மறந்து தூங்குகின்றாய்...
நானோ உனை தொலைத்த வேதனையில் தூக்கத்தையே விற்றவளாய் உன்னிடம்!

நீ மறந்து போனவை இன்னும் எனக்குள் ஞாபகங்களாய்....

அன்று...

உன் தலையணைக்கு என் பெயர் சூட்டி உறங்கும்போது இறுக்கமாய் அரவணைத்து தூங்கிய நீ....

இன்றோ....

என்னை மறந்து தூங்குகின்றாய்...
நானோ உனை தொலைத்த வேதனையில் தூக்கத்தையே விற்றவளாய் உன்னிடம்!

--------------------------------------------------------------------------------------------------
Photo: இறுக்கி யணைக்கின்றாய் - என்
தேகம் சிலிா்க்க ரசிக்கின்றாய்....
காற்றும் நுழையா இடைவௌி கோர்த்து
காதல் செய்கின்றாய் என்னுள்!

இறுக்கி யணைக்கின்றாய் - என்
தேகம் சிலிா்க்க ரசிக்கின்றாய்....
காற்றும் நுழையா இடைவௌி கோர்த்து
காதல் செய்கின்றாய் என்னுள்!

-----------------------------------------------------------------------------------------------
Photo: என் மௌனம் கொஞ்சம் மிச்சம்
வைக்கின்றேன் உனக்காக....

வெறுப்பாலல்ல!

நீ சண்டையிட்டு மறையும் பொழுதுகளில்
காணாமல் போகும் வார்த்தைகளின்
சாட்சியாய்!

என் மௌனம் கொஞ்சம் மிச்சம்
வைக்கின்றேன் உனக்காக....

வெறுப்பாலல்ல!

நீ சண்டையிட்டு மறையும் பொழுதுகளில்
காணாமல் போகும் வார்த்தைகளின்
சாட்சியாய்!

----------------------------------------------------------------------------------------------

Photo: உனக்காகக் காத்திருக்கின்றேன்
வந்துவிடு தடைகளை யுடைத்து!

-----------------------------------------------------------------------------------------

விட்டுக்கொடுக்கின்றோம் - நம்
செல்லச் சண்டைகளை ஒருவருககொருவராய்...
முகங்காட்டும் மௌனம் இம்சிக்கையில்
துடித்துப் போகின்றோம்...
உனக்காய் நானும்
எனக்காய் நீயும்...

இதுதான் காதலென்பதா!
Photo: விட்டுக்கொடுக்கின்றோம் - நம்
செல்லச் சண்டைகளை ஒருவருககொருவராய்...
முகங்காட்டும் மௌனம் இம்சிக்கையில்
துடித்துப் போகின்றோம்...
உனக்காய் நானும்
எனக்காய் நீயும்...

இதுதான் காதலென்பதா!

------------------------------------------------------------------------------------------------

Photo: என்......
மன வரிகளின் கவிதை நீ!

நாம்....
காதல் இலக்கியத்தின் வரிகள்!

எதிர்பார்ப்பும் ஏக்கங்களும்
நம் இலக்கணங்கள்!

வா.......!!

வாழ்ந்து பார்ப்போம்
ஒரு கணமேனும்.................

நம்மை உச்சரித்தபடி!

என்......
மன வரிகளின் கவிதை நீ!

நாம்....
காதல் இலக்கியத்தின் வரிகள்!

எதிர்பார்ப்பும் ஏக்கங்களும்
நம் இலக்கணங்கள்!

வா.......!!

வாழ்ந்து பார்ப்போம்
ஒரு கணமேனும்.................

நம்மை உச்சரித்தபடி!

----------------------------------------------------------------------------------------------------
Photo: ஆகாயம் சுருங்குகின்றது
ஆரத்தழுவி நிற்கும் நம் மன்பு கண்டு...

தென்றலோ சீண்டி நிற்கின்றது
கன்னக் கதுப்பில் நாணம் விதைத்து....

விழிப்பரப்பின் நீச்சல் தடாகத்தில்
விளையாடும் விண்மீன்களாய் 
நம் கண்கள்...

அட......

நாமோ - நம்
காதல் தேசத்தில் 
நம்மைத் தொலைத்தபடி!

ஆகாயம் சுருங்குகின்றது
ஆரத்தழுவி நிற்கும் நம் மன்பு கண்டு...

தென்றலோ சீண்டி நிற்கின்றது
கன்னக் கதுப்பில் நாணம் விதைத்து....

விழிப்பரப்பின் நீச்சல் தடாகத்தில்
விளையாடும் விண்மீன்களாய்
நம் கண்கள்...

அட......

நாமோ - நம்
காதல் தேசத்தில்
நம்மைத் தொலைத்தபடி!

---------------------------------------------------------------------------------------------------
Photo: மலர் பேசும் காற்றில்
நானும் கலக்கின்றேன் 
சிறு துளியாய் - உன்
சுவாசத்தினை ஸ்பரிசிக்கவே!

மலர் பேசும் காற்றில்
நானும் கலக்கின்றேன்
சிறு துளியாய் - உன்
சுவாசத்தினை ஸ்பரிசிக்கவே!

---------------------------------------------------------------------------------------------------

Photo: கனவுகள் பூத் தூவுகின்றன - நம்
விழிச் சமரின் இம்சைகளில்!

மனமோ......

நாளைய வசந்தத்தின் சிறகடிப்பில்!

கனவுகள் பூத் தூவுகின்றன - நம்
விழிச் சமரின் இம்சைகளில்!

மனமோ......

நாளைய வசந்தத்தின் சிறகடிப்பில்!

--------------------------------------------------------------------------------------------------

Photo: கனவுகள் மொய்க்கின்றன
உன் ஞாபகங்களை விதைத்தபடி....

நிலவோ....
அக்கினிப் பூக்களை
என்னுள் விசிறியடி!

நானோ.....
உனக்கான காத்திருப்புடன்!

கனவுகள் மொய்க்கின்றன
உன் ஞாபகங்களை விதைத்தபடி....

நிலவோ....
அக்கினிப் பூக்களை
என்னுள் விசிறியடி!

நானோ.....
உனக்கான காத்திருப்புடன்!

----------------------------------------------------------------------------------------------------

Photo: அன்பின் பிணைப்பில் - நம்
கரங்கள்
மனமோ......
வாழ்வுத் தேடலில்!

நம் கரங்கள் இணைத்திட்ட
அப்பொழுதே- நம்
காலடித்தடங்களும் ஒன்றாய்!

அன்பின் பிணைப்பில் - நம்
கரங்கள்
மனமோ......
வாழ்வுத் தேடலில்!

நம் கரங்கள் இணைத்திட்ட
அப்பொழுதே- நம்
காலடித்தடங்களும் ஒன்றாய்!

----------------------------------------------------------------------------------------------------

Photo: உன் பேரைச் சொல்லும்
ஒவ்வொரு கணங்களும் - என்
இதயத்தில்......
இறக்கை கட்டி விடுகின்றதே காதல்!

உன் பேரைச் சொல்லும்
ஒவ்வொரு கணங்களும் - என்
இதயத்தில்......
இறக்கை கட்டி விடுகின்றதே காதல்!

---------------------------------------------------------------------------------------------------
Photo: இரவின் சயனத்தில்
நீ.....
நானோ 
உன் நினைவுச் சிம்மாசனத்தில்
என்னைத் தொலைத்தவளாய்!

இரவின் சயனத்தில்
நீ.....
நானோ
உன் நினைவுச் சிம்மாசனத்தில்
என்னைத் தொலைத்தவளாய்!

---------------------------------------------------------------------------------------------------

Photo

---------------------------------------------------------------------------------------------

மறைந்துதான் போனாய்
மறந்துதான் போனாய்
இறந்துபோன நான்
ஒற்றையாய்
பற்றைக்காடு மயானத்தில்!

-----------------------------------------------------------------------------------------------

Photo: அருகிலிருக்கும்போது வருடல்கள் தந்தாய்...
தொலைவிலிருக்கும்போது வலியும் தந்தாய்...
வலியும் புன்னகையும் நம் அன்பின் பக்கங்கள்தான்!

அருகிலிருக்கும்போது வருடல்கள் தந்தாய்...
தொலைவிலிருக்கும்போது வலியும் தந்தாய்...
வலியும் புன்னகையும் நம் அன்பின் பக்கங்கள்தான்!

------------------------------------------------------------------------------------------------
Photo: என் விழிப்பார்வைகள் - உனை
வழி மறைக்கும்போதெல்லாம்......
வெட்கத்தில் திரை விரிக்கின்றாய் மெல்ல!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை