நிலா மோனா - 5உறவுகள் புரிந்துகொள்ளப்படாதபோது....
உண்மை அன்பு, ஊமைவலிக்குள் தன்னைச் சுருட்டிக் கொள்கின்றது!

அரவணைப்பும், பிரிவும் தீர்மானிக்கப்படுவது தலைவிதியாலல்ல..

அவரவர் மாற்றிக்கொள்ள விரும்பாத முரண்பாட்டுச் சிக்கலால்தான்

----------------------------------------------------------------------------------


மேகங்கள் தீண்டா நிலாப்பெண் நானடா...
இருந்தும்....
உன் ........
விரல்கள் தீண்டும் கவிதையாய்
பிறப்பெடுக்கின்றேன்  உன் ஞாபகத்துள் நசிந்தபடி!

---------------------------------------------------------------------------------


காலம் என்பது அழகான காற்றாடி போன்றது!
காலத்தை உரிய விதத்தில் பயன்படுத்துபவனால் மாத்திரமே , அதனை உரிய திசைக்கு வழிப்படுத்த முடியும்!

-----------------------------------------------------------------------------------


தோல்வி என்பது அனுபவங்கள் பெற்றுத் தரும் களமேடை..........

எனவே ........

தோல்வியற்ற வாழ்வு கிடைக்கும்போது நாம் நம் அனுபவங்களை இழந்து விடுகின்றோம்......

----------------------------------------------------------------------------------


இன்பம், துன்பம், ஏக்கம், எதிர்பா்ப்பு,ஏமாற்றம், அன்பு, பாசம், காதல், தோல்வி, இலட்சியம் போன்ற எண்ண வார்ப்புக்களின் கலவைதான் வாழ்க்கை....

இந்த உண்மையை உள்வாங்கும்போது,  நாமும் இயல்பாய், சுவாரஸியமாய் நம் வாழ்வை முன்னெடுத்துச் செல்ல முடிகின்றது!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை