உனக்கான என் வரிகள் - 5நாளை தமிழ் புத்தாண்டு....

எங்கும் பட்டாசுகள் ஆக்ரோசமாக வெடிக்கின்றன..மனமோ உன் நினைவில் பின்னோக்கி ஓடுகின்றது...

அன்று...

ஜனவரி முதலாம் திகதி...புதுவருடம் பிறந்து இன்றுபோல் பட்டாசுக்கள் வெடித்துக் கொண்டுதான் இருந்தன். எனக்கு புதுவருட முதல் வாழ்த்து உனதாக இருக்கவேண்டுமென்ற உன் அன்புக் கட்டளையில் நானும் காத்திருக்க....

டாண்....டாண்...

கடிகாரம் பனிரெண்டு அடித்தோய்ந்தது..தூக்கத்தை விரட்டி நானும் உனக்காக காத்திருந்தேன். ஆனால் திடீரென அன்று என் தந்தைக்கு மாரடைப்பு வந்ததில் வீட்டில் யாருமே உறங்கவில்லை.

தந்தையோ என்னை தன்னருகில் இருக்கும்படி கூறியதையும் பொருட்படுத்தாமல் உன்மீதான அந்த அன்புக்காக எனதறைக்குள் ஓடுகின்றேன்.

உன் தொலைபேசி அழைப்பு வருகின்றது. எனக்கு இது புது அனுபவம்...என் தந்தையின் உடல்நிலை தந்த சோகத்தையும் மறைத்து உன்னுடன் பேசுகி்ன்றேன். எவ்வளவு சந்தோசமாக அன்றைய நாட்கள் இருந்தன..

நாளை விடிந்தால் புதுவருடம் பட்டாசுக்களைப் போல இப்போதெல்லாம் நீயும் என்னுடன் வெடிக்கின்றாய்...

என் அன்பு இப்பொழுதெல்லாம் உனக்கு புரிவதில்லை.

சண்டை பிடிப்பதற்காக காரணம் தேடுகின்றாய்...
என்றோ ஒருநாள் என் அன்பை புரிந்து கொள்வாய் ..ஆனால் அன்று நான் உன்னை விட்டு வெகுதொலைவில்!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை