முகநூல் எண்ணங்கள் - 6சம்மட்டி.....
கல் பிளக்கும் - ஆனால்
பஞ்சு பிளக்காது.....!

வெயில்.....
மலையை உடைக்கும்  - ஆனால்
குடையை உடைக்காது!

வாழ்வில் வரும் துன்பம்
மனதைக் கரைக்கும் - ஆனால்
தன்னம்பிக்கையைக் கரைக்காது!

உண்மையில்.....

தடைகளை உடைத்து
கண்ணீரை உலர்த்துவதே
தன்னம்பிக்கையின் செயலாய் உள்ளது!

----------------------------------------------------------------------

வெறும் பாறையாய்தான் இறுகிக் கிடந்தேன்...
உருக வைத்தாய் உன் பார்வையால்....
இறுதி வரை தொடருமோ
மாசற்ற உன் னன்பு!

---------------------------------------------------------------------

சில சந்தர்ப்பங்களில் ஒருவரின் .....

மௌனம் என்பது நிசப்தங்களின் ஓசையல்ல...
சொல்ல முடியாத உள்ளத்துணர்வுகளின் அலறல்!

இதனைப் புாிதல்......
அன்பின் அங்கீகாரம்!

பிாிதல்.....
புரிந்துணர்வின்மையின் அகங்காரம்!

----------------------------------------------------------------------

முடியாது என்பது பலவீனர்களின் அறியாமை!
முடியும் என்பது வெற்றியாளர்களின் நம்பிக்கை....!

இந்த நம்பிக்கைதான் ....
என் தன்னம்பிக்கையின் ஆணிவேர்!

----------------------------------------------------------------------

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்....

நம் மனம் விரும்பும் பட்சத்தில் தடைகள்கூட உடைந்து
வழி விடும்....

விரும்பாத பட்சத்தில் ...

வழிப்பாதைகள் கூட தடைக்கல்லாய் மாறி
நம்மை நிறுத்தும்!

நம் செயல்களின் ஆணை யாவும்
மனதிலிருந்தே!
ஆனால் நாமோ...
தோல்வியின் இறுக்கத்தில் விதியை சபிக்கின்றோம்
நம் சதியை மறைத்து!

------------------------------------------------------------------------

அன்பு ஒரு உணர்வல்ல.....
இதயம் பேசும் மொழி!

ஆனால்....

அது பலருக்குப் புரிவதில்லையாதலால்
பிரிவைத் தேடிப் போகின்றனர்...

------------------------------------------------------------------------

நம் வசம் இருக்கின்றபோது பெறுமதியற்று போகின்ற ஒவ்வொன்றினதும் பெறுமதி அதன் இழப்பின்போதுதான் வலியாய் மனதைக் குடைகின்றது!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை