நீயாகிபூக்கள் விரியும் ஒலியில்
உன்......
மூச்சுக்காற்றின் பேச்சும்
துல்லியமாய் கேட்கின்றது!

நீ தள்ளிப்போகும்
ஒவ்வொரு சுவட்டிலும் - என்
தவிப்புக்கள்.....
அனலைத் தேக்கி
உன் னிழலோரம் அலைகின்றது!

என் தவிப்புக்களின் சுமையேற்றம்
உயிர் கொஞ்சம் வருத்த........
நாளை - நான்
வருவேன் உன் தாயகம் தேடி!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை