சுகந்திரம்என் குருவிக்கூடு
தினமும் கல்லெறியப்படுகின்றது....

தும்புகள் சிதறி
இரத்தம் சிந்துவன குருவிகள் மட்டுமல்ல
அடைக்கலம் காத்த என்
நெஞ்சும்தான்!

அடுத்தவர் ....
கண்ணீர் ஈரம் உணராமலே
விசம் தடவும் சிலர் வார்த்தைகள்...

சுய தீர்ப்பாய் மொழிகின்றது ....
குருவிகளின் உயிரோடு!

அந்தோ....

குருவிகள் குற்றுயிராய் - நானோ
அருவியாய் நீரூற்றும்
விழிகளோடு!

விடுதலை
தொலைந்து போன  வாழ்வில்
விடியல் மட்டும் வந்து வந்து
போகின்றது
பிரயோசனமின்றி இரவைக் கரைக்க!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை