எல்லாமே முடிந்து விட்டதாய்
எல்லாமே முடிந்து போனதாய்
நெஞ்சக்குழியில் விரக்தி!

கவிதை வடிக்கத் தொடங்குகின்றேன்
காகிதம் நனைகின்றதா....
கண்ணீர்த்துளிகளின் அட்டகாச யாத்திரையால்!

உன் னுருவில் கண்ட அன்பு
உரு சிதைந்ததாய் பிரமை!

உனக்காய் நானும்
எனக்காய் நீயும் அழுத நாட்கள்...

தனிமைக் கசிவில்
ஞாபகங்களாய் வழிகின்றன!

தூக்கத்தைத் தொலைத்துவிட்டு
ஏக்கத்தை நிறைத்து.....

விடிவிளக்காய்
நிறைந்த நம் ஞாபகங்கள்

இன்னும் நீளமாய் -நம்
சுவடேந்தி அலைகின்றன!

ஓ........

பிரிந்து விட்டாயா.....

என் கல்லறைச்சுவர்களில்
சிறகுடைந்த பட்டாம்பூச்சிகள்......
காவலிருக்கின்றன ...

இற்றுப்போன என் வெற்றுடம்பின்
வலியைத் தூதுரைக்க
உனக்கு!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை