காஸாகண்ணீர்த் தணலில்
பற்றி எரிகின்றது காஸா!
பாலஸ்தீனமோ
பயங்கரவாதத் திகிலில்!

அனல் பறக்கும் சிலிப்பர்
குண்டுகளும்.....
கறை படிந்த குருதித் துளிகளும்

இங்கு....
சரித்திரமெழுதும் எழுத்தாணியாய்
தரித்து நிற்கின்றது
மரண ஓலங்களின் சுருதியில்!

முதியோர்களும்
பாவைகளும்
பால் மணம் மாறா பாலகர்களும்
ஈமானியங்களும்...

ஓலமிடும் அழுகுரல்களால்..
காஸா...
காணாமல் போய்க் கொண்டிருக்கின்றது
சில நாட்களாய்!

பயங்கரவாதம் அனல் கக்கும்
அல்லாஹ்வின் வீட்டைக் காக்க
உம்மத்துக்கள்
மௌத்துக்களால்.....
உரமாகிக் கொண்டிருக்கின்றனர்!

யா ரப்பே...!

தணலாய் கொதிக்கின்றது - இப்
பசுமைபூமி!
விடிவு தேடி
விட்டில்களாய் நசுங்கிப் போன - எம்

காஸா உறவுகளோ
ஷகீதாகி...........
உன் வசமாக!

காலம் ஓடிக் கொண்டுதானிருக்கின்றது
நாமோ .....
கண்ணீருடன் அருள் வேண்டி
நிற்கின்றோம் - அம்
மக்களின் துயர் துடைக்க!

எல்லாம் வல்ல அல்லாஹ்வே!
மனதில் ஈரம் கசிய - எம்
துஆக்கள் உன்னிடத்திலே
தரித்து நிற்கின்றன...

அனலோடு
அல்லல் கண்ட அம்மக்களுக்கு
கண்ணியமான சுவர்க்கம் தந்து விடு!
மறுமையாவது வாசமாகட்டும்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை