என் செய்வேன்பூ இதழ்கள் மெல்லன அசையும் தென்றலில்
அன்பா யுன் பெய ருரைத்தேன்...
என் குரல் கேட்டும் காதலுரைக்க
உன் மனசோரம் அமைதியில்லை!

ஆதவன் ஆட்கொண்ட பகலது....
துயில் கொள்ளும் இராப் பொழுதின் நூலிலையில்...
நீ கோர்த்த கனாக்களின் ரம்மியம் கூட
காதோரம் நனைத்திட
உனக்கோ அவகாசமில்லை!

உனக்கென விழி நீர் சுரக்க நானிருந்தும்
உன் கவலைகள் தீரவில்லை..
என் செய்வேன் உன் ஈர முலர்த்த
தண்ணீர் அமிழும் எல்லைகள் தொல்லை!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை