நிலா மோனா


எல்லையில்லா சுதந்திரத்தின் மைல்கல்லாய்
"ஆபத்து"
ஆரவாரிக்கும் விளைநிலமாய் நமது வாழ்க்கை!
-----------------------------------------------------------------------


என்னை உனக்காய் எழுதி வைத்தேன்
கவிதையாய்.....

வந்தாய் காற்றாய்....

உயிர்வாழ சுவாசம் தேவையில்லை - உன்
வாசமே போதுமடா!
-----------------------------------------------------------------------


சாலைப்பூக்கள் வியர்வை சிந்தும்
நீ
ஒற்றையடிப் பாதையிலே
நடந்துவரும் ஓசை கேட்டு!

உன்...
ஓர விழி பார்வை சிந்த
காத்திருக்கும் பொன்மலர்கள்
நம் காதில் கூறும் சேதி என்னவோ!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை