உனக்கான என் வரிகள்

Photo: அன்பைத் தேடும் ஒவ்வொரு மனமும் 
குழந்தையாகி வாழ்தல் கூட ......
துன்பம் தவிர்க்கும் மார்க்கம்தான்!

அன்பைத் தேடும் ஒவ்வொரு மனமும்
குழந்தையாகி வாழ்தல் கூட ......
துன்பம் தவிர்க்கும் மார்க்கம்தான்!

---------------------------------------------------------------------------------------------

ஆழ்ந்த அன்பும் பிரியக்கூடும்
அனுபவித்தேனின்று!

பிரிவு...
பரிவில்லாத மனதின் ஆரவாரிப்பு!

---------------------------------------------------------------------------------------------

உன் நிஜம் தேடி வரும் நிழலாய் நான்....

Photo: உன் நிஜம் தேடி வரும் நிழலாய் நான்....<3

--------------------------------------------------------------------------------------------
Photo: குறும்பே - நீயேன்
காதல் அரும்பே!
விரும்புகின்றேனுன்னை
தினமும் - நம் அன்பென்றும்
கரும்பே !!குறும்பே - நீயேன்
காதல் அரும்பே!
விரும்புகின்றேனுன்னை
தினமும் - நம் அன்பென்றும்
கரும்பே !!

--------------------------------------------------------------------------------------

நாம் போடும் சண்டைகளையெல்லாம், முத்தமாக திருப்பிக் கொடுத்து விடுகின்றது நம் அன்பு!

Photo: நாம் போடும் சண்டைகளையெல்லாம், முத்தமாக திருப்பிக் கொடுத்து விடுகின்றது நம் அன்பு!

---------------------------------------------------------------------------------------
செல்லமே.....

உன்னைச் சந்தோசப்படுத்தும் ஒவ்வொரு நிமிடங்களும் உன்மீதான என் அன்பும் உயர்ந்து கொண்டுதான் செல்கின்றது..

Photo: செல்லமே.....
உன்னைச் சந்தோசப்படுத்தும் ஒவ்வொரு நிமிடங்களும் உன்மீதான என் அன்பும் உயர்ந்து கொண்டுதான் செல்கின்றது..

---------------------------------------------------------------------------------------

மனதோடும் உயிரோடும் கலந்தவள் நீ
மறந்தாலும் உன் நினைவோடு வாழுவேன்..!
----------------------------------------------------------------------------------------

கவிதை சொந்தக்காரியைக் காதலித்தேன்
என்னையும் கவிதையாகச் செதுக்கி விட்டாய் மனதில்!

-----------------------------------------------------------------------------------------

இருவரிக் கவிதை நீயும் நானும்
ஒருவரி மறைத்தாலும் உயிர் பெறாது கவிதை மட்டுமல்ல நம் காதலும்தான்...

அன்பே உன் கவிதை அழகோ அழகு!

-----------------------------------------------------------------------------------------

எதிர்பார்ப்புக்கள்தான் நம்மைப் பிரிக்குமென்றால் இனி நம் பிரிவுக்கான எந்த எதிர்பார்ப்புக்களும் என்னிடம் இல்லை....

------------------------------------------------------------------------------------------

என் சுவாசம் நீ...
அதனால்தான் வாசமாகின்றாய் - என்
மனதுக்குள்!

-----------------------------------------------------------------------------------------

இணையம் எனும் ஒற்றைப்புள்ளி - நம்
இதயம் இணைத்த அன்புப் புள்ளி!
செல்லமே!
-----------------------------------------------------------------------------------------

இப்போதெல்லாம் நீ என் பக்கம் பார்க்கவே மறந்து விடுகின்றாய்...

இருந்தும்.........

உண்மைக் காதலை உன்னிடமே கற்றுக் கொண்ட என்னிதழ்கள் உன் னினைவிலேயே படபடக்கின்றது!

------------------------------------------------------------------------------------------

உன் உடற்காயம் கண்டதனால்
என் மனக்கண்........
வடிக்கின்ற இரத்தத்துளிகளில்
படிந்து கிடக்கின்றதென் காதல்!

--------------------------------------------------------------------------------------------

உன்னையே மனப்பாடம் செய்ததில்
என்னையே மறந்தேன்!

--------------------------------------------------------------------------------------------

தலைவா உன்னைத் தேடுகின்றேன்
அந்த ஏக்கத்திலேதான் வாடுகின்றேன்..
தினமும் உன்னை நேசிக்கின்றேன்
அந்த வாசத்திலேதான் வாடுகின்றேன்!

Photo: தலைவா உன்னைத் தேடுகின்றேன்
அந்த ஏக்கத்திலேதான் வாடுகின்றேன்..
தினமும் உன்னை நேசிக்கின்றேன்
அந்த வாசத்திலேதான் வாடுகின்றேன்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை