டயறிடயறி
--------
டயறி என்பது நம் சந்தோசங்களின் திறப்பு...உணர்வுகளைத் தாங்கிக் கொள்ளும் உத்தம நட்பு...நம் இரகஸியங்களை தனக்குள் மாத்திரம் அடக்கி வைத்திருக்கும் ஆத்மார்த்த உறவு!

என்ன..ஆச்சரியமா இருக்கா?

தினமும் டைரி எழுதும் பழக்கமானது, பிற்காலத்தில் நம் ஞாபக மறதியைக் குறைக்கின்றது. அதுமாத்திரமன்றி நாம் சந்திக்கும் சவால்கள், இன்ப, துன்பங்களுக்கு அதில் வரிவடிவம் கொடுக்கும்போது நம் உணர்வுகளைப் பரிமாறிய திருப்தியும், நமது செயல்களை நாமே மதிப்பிடும் பக்குவமும், எழுத்தாற்றலும் ஏற்படுகின்றது..

ஆனால்......பலர் டைரி என்பதை வெறும் தாள்களாக நினைத்து அதில் தமது சோகங்களையும், தோல்விகளை மாத்திரமே பதிவிடுகின்றனர்.

ஓர் உண்மையைச் சொல்லட்டுமா...???

சிறுவயதிலேயிருந்து எனக்கும் டைரி எழுதும் பழக்கம் இருந்தது..அப்பழக்கம்தான் பிற்காலத்தில் என் இலக்கிய வளத்தை மெருகூட்ட காரணமாக இருந்தது..அதுமாத்திரமின்றி எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை வெறும் எழுத்துக்களாக மாத்திரமன்றி உயிர்ப்புள்ள ஞாபகங்களாக மாற்றும் சக்தியும் இதற்குண்டு!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை