வர்ணக்கலவைஎன் தனிமையைப் பொசுக்குகின்றேன்..
தாவி வருகின்ற நிமிடத்துளிகளில்....
வர்ணக்கலவையாய்
கரைந்தே கிடக்கின்றன வுன்
நினைவுகள்!

---------------------------------------------------------------------------------ஆண் பிள்ளைகள் தவறு செய்யும்போதெல்லாம் தட்டிக் கேட்காத தாய்மார்கள் , தம் பிள்ளைகளின் தன்னிச்சையான போக்கிற்கு தாமே வழியமைத்துக் கொடுக்கின்றார்கள்...!

நினைவுகள்தூரங்கள்...
துரத்திக் கொண்டுதான் இருக்கின்றன
அதனால்தானோ...
இன்னும்- எங்கள்
விரல்கள் தொட்டுக் கொள்ளவில்லை
உரிமையுடன்!..

சூரியத்தீயாய்
நீ....
வந்துபோனாலும் கூட
குளிர்நிலாவாய்தான்
நான் .......
காத்துக் கொண்டிருக்கின்றேன்!

ஐயத்தில்
நீ ....
அடிக்கடி உறையும் போதெல்லாம்
அச்சத்தின் தொடுபுள்ளியில் நான்
விழுந்து கிடக்கின்றேன்!

நீ....
என்னை
மறுத்து போனாலும்கூட
மறந்திட வுன்னை - என்
நினைவுகள் முயல்வதில்லை!

அடுத்தவர் பார்வையில்
திருத்திக் கொள்ள விரும்பா
தவறுகளாய் - நம்
அன்பும் இருக்கட்டும்!

அதனால்தான்....

திரும்பிப் போக விரும்பாத பாதையாய்
விரும்பிக் கிடக்கின்றே னுன்
இருண்ட நிழலுக்குள்!

அழகு.....விடா முயற்சி.....
பிடிவாதம்.....
அழகு.....
மென்மை....
புன்னகை.....
அன்பு....
கவலைகளறியா வாழ்க்கை...

இவை குழந்தைகளின் வார்ப்புக்கள்!

உள்ளத்தின் ஊன் கரைத்தால்
இவை யாவும் தாராளமாய் எமக்கும் கிடைக்கும்!

-------------------------------------------------------------------------------------

பெரும்பாலும்...
விட்டுக்கொடுப்புத்தான்
உறவுகளை முறித்து விடாத ஆதாரம்!

ஆனாலும்...

அவசரமான வாழ்க்கைக் கோலத்தில்
பலர்
அதனை பின்பற்றாமல் இருப்பதனால்
முறிந்து விடுகின்றது
அன்பின் நம்பிக்கை!

காதல் வலி
காதல் ஒரு வழிப் பயணம்
உள்ளே நுழைந்தால் உளத்தின் பயணம்
அத்திசை வழியே!
சோகங்களைத் தந்திடும் காதல்
நம் வாழ்வையே மாற்றக்கூடியது!

--------------------------------------------------------------------------

என் தனிமையில் நீதான்
வந்து போகின்றாய்
ஆனால்
நானோ துணையின்றி!

-------------------------------------------------------------------------

காதல்
என்னை உனக்குத் தந்தது
ஆனால்
சாதல்
நீ எனக்குத் தந்தது

------------------------------------------------------------------------

அன்பைத் தேடி அலையும்
அனாதை நான!
அனாதை இல்லம்
என் கூடு!

------------------------------------------------------------------------

நம்பிக்கைத் துரோகங்களின் வலியில்
இற்றுப் போனதென் இதயமின்று

ஞாபகத் தீ


Photo: Tnxs - Anbu Javaharsha sir 

ஞாபகத்துளி
--------------------
 பாடசாலையில் குறைந்த லீவு பெற்றமைக்கான விருது எனக்கும் கிடைத்தது. அதனை ஞாபகப்படுத்தும் புகைப்படமிது!

இதில் நானும் உள்ளேன்....கண்டு பிடித்து விட்டீர்களா!
Tnxs - Anbu Javaharsha sir

ஞாபகத்துளி
--------------------
 பாடசாலையில் குறைந்த லீவு பெற்றமைக்கான விருது எனக்கும் கிடைத்தது. அதனை ஞாபகப்படுத்தும் புகைப்படமிது!

இதில் நானும் உள்ளேன்....கண்டு பிடித்து விட்டீர்களா!
----------------------------------------------------------------------------------------உறவுகளுக்கிடையே நம்பிக்கை எப்பொழுது அறுந்து போகின்றதோ
அப்பொழுதே அவ் உள்ளங்களுக்கிடையிலும் ஊன் வடிந்து போகின்றது. அதன் தொடர்ச்சியாய் பிரிதலும் அவநம்பிக்கைகளும்தான்...

கண்ணாடி மனம் உடைந்தால்...
மீள பழைய உணர்வுகள் திரும்புதல் சாத்தியமோ!

அதனால்....
உரிமையோடு பழகியவர்களை
ஒட்ட வைப்பதா...
ஒட்ட நறுக்குவதா...

வார்த்தைகளின் தீர்மானமது!
-----------------------------------------------------------------------------------------

மழை நீரின் வாசம்
மண்ணோடு நேசம் - அவ்
அழகின் சாரல் பிழிதலில்- இன்றைய
இருளின் மயக்கம் கழிந்ததோ!

நீண்ட நாட்களின் பின்னர் இன்று அநுராதபுரத்தில் மழை!

பனித் தூறல்கள் வீழும் இன்றைய இரவில் நரம்புகளைத் துளைத்திடும் இதமான தூக்கம் குளிரின் கொடையால்!

---------------------------------------------------------------------------------------
உறவுகளுக்கிடையே நம்பிக்கை எப்பொழுது அறுந்து போகின்றதோ
அப்பொழுதே அவ் உள்ளங்களுக்கிடையிலும் ஊன் வடிந்து போகின்றது. அதன் தொடர்ச்சியாய் பிரிதலும் அவநம்பிக்கைகளும்தான்...

கண்ணாடி மனம் உடைந்தால்...
மீள பழைய உணர்வுகள் திரும்புதல் சாத்தியமோ!

அதனால்....
உரிமையோடு பழகியவர்களை
ஒட்ட வைப்பதா...
ஒட்ட நறுக்குவதா...

வாரத்தைகளின் தீர்மானமது!

----------------------------------------------------------------------------------------

எதிர்பார்ப்புக்கள்தான் தேவைகளைத் தீர்மானிக்கின்றன. தேவைகள்தான் நமது தேடலைத் தீர்மானிக்கின்றன. அதிக தேடல்கள் சில நேரங்களில் ஆசைகள் வளரவும் காரணமாக இருக்கலாம். அதிக ஆசைகள் நிம்மதியற்ற மனதின் ஆணை எப்பொழுதும்!

அவள்

Photo: அவள்.....
தினமும்
என்னுடன் சண்டையிடும் 
செல்ல உறவு!

அவள் ...
என் மனதை வசீகரிக்கும்
காதலிக்கும் மேலானவள்!
உணர்வுகளை ஆகர்ஷிக்கும்
தோழிக்கும் மேலானவள்...

அதனால்தான்....

மானசீகமாக என் மனதில்
மனைவியாக ஜீவிக்கின்றாள்
இதமான அன்பைப் போஷித்து!

எனக்குள் விரியும் கற்பனையுலகில்
அவளென்....
ரெண்டு குழந்தைகளுக்கும்
தாயானவள்!

இருந்தும்...!

அவளுக்கு மூன்று குழந்தைகள்
என்னையும் சேர்த்து!
எனக்கும்
அவள் குழந்தைதான்!

ஏனெனில் .......!

கபடமற்ற அவள் அன்பில்
தினம் மெய்மறந்து...
என்னையும் செதுக்குகின்றேன்
ஆவலுடன்!


அவள்.....
தினமும்
என்னுடன் சண்டையிடும்
செல்ல உறவு!

அவள் ...
என் மனதை வசீகரிக்கும்
காதலிக்கும் மேலானவள்!
உணர்வுகளை ஆகர்ஷிக்கும்
தோழிக்கும் மேலானவள்...

அதனால்தான்....

மானசீகமாக என் மனதில்
மனைவியாக ஜீவிக்கின்றாள்
இதமான அன்பைப் போஷித்து!

எனக்குள் விரியும் கற்பனையுலகில்
அவளென்....
ரெண்டு குழந்தைகளுக்கும்
தாயானவள்!

இருந்தும்...!

அவளுக்கு மூன்று குழந்தைகள்
என்னையும் சேர்த்து!
எனக்கும்
அவள் குழந்தைதான்!

ஏனெனில் .......!

கபடமற்ற அவள் அன்பில்
தினம் மெய்மறந்து...
என்னையும் செதுக்குகின்றேன்
தாய்மையுடன்!

குற்றாலம்

Photo

இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டம் எனக்கு மிகவும் பிடித்த ஊர். அதற்குக் காரணம் அல்வா மட்டுமல்ல இன்னொன்றும்...என் உறவுகள் அங்கும் பிணைந்துள்ளார்கள்.

இம்மாவட்டத்தில் இருக்கும் பேரூராட்சிகளுள் குற்றாலமும் ஒன்று..இது திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 55 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. குற்றாலத்திலிருந்து 100 கிலோ மீற்றர் தூரத்தில் தூத்துக்குடி விமான நிலையம் அமைந்துள்ளது. தென்காசி புகையிரத நிலையம் குற்றாலத்தின் அருகிலுள்ள நிலையமாகும். எனவே குற்றாலம் தென்காசிக்கு அருகிலுள்ளது.

குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகை மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி இது என்பதால் குற்றாலம் எனப்பெயர் ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் என்றவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது குற்றால அருவிதான். இது திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது.

குற்றால அருவியின் சிறப்பு குளிர்ச்சியான காலநிலை, எண்ணெய்க்குளியல், மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆக்ரோசத்துடன் பாய்ந்தோடும் அருவி என்பவற்றின் அனுபவங்களாகும்.!

இங்கு குளியல் வெறும் பொழுதுபோக்கல்ல...இந்த அருவியில் பாய்ந்தோடும் நீர் பல மூலிகைச் செடிகளையும் தழுவிப் பாய்வதால் இது மருத்துவ குணம் வாய்ந்த நீரைக் கொண்டுள்ளது.1. பேரருவி
----------------
இது குற்றாலத்தின் மிக முக்கியமான அருவியாகும். செங்குத்தான பாறையிலிருந்து நீரை வௌியேற்றுவதனால் அதிகமாக நீர் வௌியேற்றம். பல உயிர்களைக் காவு கொண்டுள்ளது. எனினும் இங்கு பாதுகாப்புக் கருதி தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இத் தடுப்புச்சுவருக்கு வௌியே நீர் பாய்ந்தால் குளிக்கத் தடை ஏனெனில் நீரின் வேகமும் வௌியேற்றமும் உக்கிரமமாக இருக்கும்.

தடுப்புச்சுவருக்குள்ளே நீர் பாய்ந்தால் யாரும் குளிக்கலாம். இக்காலங்களில் இங்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படும்.  கோவிலுக்கு அருகிலுள்ள இவ்வருவியே இன்றைய குற்றாலத்து அருவியாகும்.

2. சிற்றருவி-
-----------------
இது பேரருவிக்கு மேலே உள்ளது.பேரருவியிலிருந்தே இங்கு நீர் பெறப்படுகின்றது.

3. செண்பகதேவி அருவி -
---------------------------------
பேரருவிக்கு மேல் 2 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. காடு போன்ற பகுதியைக் கடந்தே இதனை அடைய வேண்டும். சற்று பாதுகாப்பு குறைவு4. தேன் அருவி -
---------------------
இங்கு பல தேன்கூடுகள் இருப்பதனால் இது அபாயகரமான பகுதியாகும். இங்கு குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
5. ஐந்தருவி -
-----------------
இது பேரருவியிலிருந்து 5 கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது. திரிகூடமலையில் தோன்றி சிற்றாறின் வழியே பாயும் இவ்வருவி பாறையிலிருந்து பாயும் இடத்தில் 5 பகுதிகளாகப் பிரிந்து பாய்வதனால் இப்பெயர் பெறப்பட்டுள்ளது. அதுமாத்திரமுமன்றி இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமுமாகும்.6. பழந்தோட்ட அருவி
------------------------------
இது பேரருவியிலிருந்து 8 கிலோ மீற்றர் தொலைவிலுள்ளது. சுதந்திரமாகக் குளிக்கலாம்.

7. புலியருவி
-------------------
இது பேரருவியிலிருந்து 8 கிலோ மீற்றர் தொலைவிலுள்ளது. சுதந்திரமாகக் குளிக்கலாம்.

8. பாலருவி
-----------------
இது தேனருவிக்கு அருகிலுள்ளது. குளிக்கத் தடை

9. பழைய குற்றால அருவி
--------------------------------------
இது பேரருவியிலிருந்து 16 கிலோ மீற்றர் தொலைவிலுள்ளது. இங்கும் தண்ணீர் மிகவும் உயரத்திலிருந்து பாய்கின்றது. முன்னர் மக்கள் இதனைப் பயன்படுத்தினாலும்கூட  தற்போது இங்கு மக்கள் நடமாட்டம் குறைவு.மேற்கூறப்பட்ட ஒன்பது அருவிகளிலிருந்தும் கிளம்பும் சாரல் வெகுதொலைவு வரை தென்படுவதனால் , அந்தக் குளிர்மை நம்மைக் கூல்படுத்தும்...

மாரிகாலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்கு பலர் வருவதுண்டு. தென்மேற்கு பரவகாலத்தில் குற்றால அருவியில் நீர் ஆர்பரித்து விழத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் "குற்றால சீசன்" எனப்படும்.

இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது. சங்க காலத்தில் பெண்ணின் அழகுக்கு இவ்வூர் உவமையாகக் கூறப்பட்டுள்ளதால் இவ்வூர் தேனூர் எனப் பெயர் பெற்றது.

ஈரலிப்பில் நனைக்கும் இந்த இயற்கையை நானும் ரசிக்க ஆசை....

இன்ஷா அல்லாஹ்....

அங்குள்ள என் உறவுகளின் அருகாமையுடன் இது நிறைவேறட்டும்!

கீழேயுள்ள படங்கள் கிளிக்  #செல்லா


Photo

Photo


Photo

அந்தக் கடைசி நிமிடங்கள்

Photo: அந்தக் கடைசி நிமிடங்கள்
----------------------------------------------
இருள் கௌவும் நேரம்.....
உடல் அதிகமாக வியர்க்கும் உணர்வு. மெல்லத் தலையை உயர்த்த முயற்சிக்கின்றேன். முடியவில்லை.

உஷ்ணம்................

மூச்சுக் காற்றில் உட்காந்து விளையாட ஆரம்பித்தது. ஆனாலும் வியர்வையால் நனைந்து போன உடல் மட்டும் ஜில்லென்று....

"ம்"

முனகுகின்றேன்.....

கண்களில் கண்ணீர் கன்னம் வழியே கோடு கிழிக்க...

மனசும் உப்புக் கரிக்கின்றது.

"ஓவென" கத்த வேண்டுமென்ற உணர்வு!

இறுதி ஊர்வலத்திற்காக டாக்டர் நாள் குறித்தாகியாச்சு..இந்தப் பூமியை விட்டு நீங்குவதற்கு ஏதோ ஒரு காரணம் கிடைத்து விடுகின்றது..

நிமிடங்களின் நச்சரிப்பையும் பொருட்படுத்தாது இதயம் மீண்டும் துடிக்கின்றது..

"வலியால் மெல்ல முனங்குகின்றேன்"

"மாரடைப்பு" எனக்கும் நாள் குறித்து விட்டதா...

மரண வலியிலும் என் கண்கள் பனிக்கின்றன. இதயத்தின் மாறுபட்ட துடிப்பை என்னால் உணர முடிகின்றது.

அது வலியா.........அழுகையா!

என்னைச் சுற்றியுள்ள கூட்டத்தை விலக்கி கண்கள் இரகஸியமாக அவனைத் தேடுகின்றது..

"அவன் வருவானா"

நப்பாசையில் விரிந்த மனதை, பகுத்தறிவு அடக்குகின்றது..

"இந்த இறுதி ஊர்வலத்தை அவனுக்கு யார்தான் அறிவிப்பார்கள். பக்கத்திலா இருக்கின்றான். கண்கலங்கி விடையனுப்ப!

இதயம் மீண்டும் வலிக்கின்றது..

"அவன் நினைவுகள் வாழ்ந்த கூடு அது..உயிர்ப்போடு ஆசைகளையும் கனவுகளையும் செல்லச் சண்டைகளையும் சேமித்த கூடு அது"

கண்கள் நனைவதையும் பொருட்படுத்தாமல், விழிகள் நிரந்தரமாக மூடத் தொடங்குகின்றன...

அவன் நாளை என்னைத் தேடி வருவான். அதுவரைக்குமாவது என் இற்றுப் போன இதயம் துடிப்பை மறக்கலாமா...

ஆத்மாவின் ஓலம் புலப்படாமலே, வெறும் மெய்க்கூட்டை நால்வர் சுமந்து செல்கின்றனர் கண்ணீருடன்!

அந்தக் கடைசி நிமிடங்கள்
----------------------------------------------
இருள் கௌவும் நேரம்.....
உடல் அதிகமாக வியர்க்கும் உணர்வு. மெல்லத் தலையை உயர்த்த முயற்சிக்கின்றேன். முடியவில்லை.

உஷ்ணம்................

மூச்சுக் காற்றில் உட்காந்து விளையாட ஆரம்பித்தது. ஆனாலும் வியர்வையால் நனைந்து போன உடல் மட்டும் ஜில்லென்று....

"ம்"

முனகுகின்றேன்.....

கண்களில் கண்ணீர் கன்னம் வழியே கோடு கிழிக்க...

மனசும் உப்புக் கரிக்கின்றது.

"ஓவென" கத்த வேண்டுமென்ற உணர்வு!

இறுதி ஊர்வலத்திற்காக டாக்டர் நாள் குறித்தாகியாச்சு..இந்தப் பூமியை விட்டு நீங்குவதற்கு ஏதோ ஒரு காரணம் கிடைத்து விடுகின்றது..

நிமிடங்களின் நச்சரிப்பையும் பொருட்படுத்தாது இதயம் மீண்டும் துடிக்கின்றது..

"வலியால் மெல்ல முனங்குகின்றேன்"

"மாரடைப்பு" எனக்கும் நாள் குறித்து விட்டதா...

மரண வலியிலும் என் கண்கள் பனிக்கின்றன. இதயத்தின் மாறுபட்ட துடிப்பை என்னால் உணர முடிகின்றது.

அது வலியா.........அழுகையா!

என்னைச் சுற்றியுள்ள கூட்டத்தை விலக்கி கண்கள் இரகஸியமாக அவனைத் தேடுகின்றது..

"அவன் வருவானா"

நப்பாசையில் விரிந்த மனதை, பகுத்தறிவு அடக்குகின்றது..

"இந்த இறுதி ஊர்வலத்தை அவனுக்கு யார்தான் அறிவிப்பார்கள். பக்கத்திலா இருக்கின்றான். கண்கலங்கி விடையனுப்ப!

இதயம் மீண்டும் வலிக்கின்றது..

"அவன் நினைவுகள் வாழ்ந்த கூடு அது..உயிர்ப்போடு ஆசைகளையும் கனவுகளையும் செல்லச் சண்டைகளையும் சேமித்த கூடு அது"

கண்கள் நனைவதையும் பொருட்படுத்தாமல், விழிகள் நிரந்தரமாக மூடத் தொடங்குகின்றன...

அவன் நாளை என்னைத் தேடி வருவான். அதுவரைக்குமாவது என் இற்றுப் போன இதயம் துடிப்பை மறக்கலாமா...

ஆத்மாவின் ஓலம் புலப்படாமலே, வெறும் மெய்க்கூட்டை நால்வர் சுமந்து செல்கின்றனர் கண்ணீருடன்!

கைவிலங்கு
உன்னைச் சுற்றும் சிலந்தி
நான்....
சிறைபடுகின்றாய் தினமு மென்
பார்வைக்குள்...!

விடுதலை யுனக் கிருந்தும்
நீ ......
விரும்பிக் கிடக்கு மென் சிறையின்
கைவிலங்காய் என் அன்பு!


நாங்கள்
விடை தேடும் விடுகதையொன்று!

நாங்கள்........
தினமும் சண்டை பிடிக்கின்றோம்!

ஆனால்
நாங்கள் விரோதிகளல்லர்!

நாங்கள்........
அன்பாகவும் சில நேரங்களில்
பேசுகின்றோம்!

ஆனால்........
நாங்கள் நண்பர்களுமல்லர்!

நாங்கள் யார்?

உணர்வுகள்நம் உயிர் வாழும் கூடு மெய்
இருந்தும்....
மெய் யன்பில் நாட்டமில்லா வாழ்வோர்தான்
அதிகம்...
இந்த பொய் உலகில்!

-------------------------------------------------------------------------------------

நாம் பெறும் அனுபவங்களே உணர்வுகளில் பதிந்து நமது செயல்களாய் இயக்குகின்றன. எனவே நாம் எவ்வாறு நம்மை நினைக்கின்றோமோ, அவ்வாறேதான் பிறரையும் நினைப்போம்..

நமது எண்ணங்களுக்கும், யதார்த்த சூழலுக்கும் இடையில் ஏற்படும் இடைவௌிகளே மனக்குழப்பங்களையும், பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும்.....

எனவே................

நல்லதையே நினைப்போம்!
-----------------------------------------------------------------------------------

பல வருடங்களாக களிப்போடு
சிறகு விரித்த என் கல்விச்சாலை...இன்று
சிறைக்கூடமாய்!
யார் செய்த தவறிது!

----------------------------------------------------------------------------------
அன்று ன்னை
என் தனிமைக்குள் நிரப்பி வைத்தேன்

ஆனால்....

இன்று .....

தனிமையோ....
துணையின்றி!

---------------------------------------------------------------------------------

சில புதிர்களுக்கு இப்பொழுதுதான்
விடை கிடைத்திருக்கின்றது!

காத்திருந்து இற்றுப் போன இதயம்
காலனிடம் மண்டியிடாமல்...
காலம் காயம் ஆற்றட்டும்!

--------------------------------------------------------------------------------
எல்லாம் கடந்த பின்னர்தான்
வாழ்க்கை பற்றிய தேடல் ஆரம்பிக்கின்றது!
விளைவாய்..........
விரக்திக் கோடுகள்!
அவை...............
அழியா வரங்கள்!

-----------------------------------------------------------------------------
என் குடும்பம்
என் கணவன்
என் பிள்ளைகள்
எனும் "என்' பற்றிய சுயநலத்தினால் பொறாமையும், பாவங்களும் , விரோதங்களும் உருவாகின்றன..இச்சுயநலம்தான் உறவுகளுக்கிடையிலும் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றன.


WhatsApp

Photo: உணர்வுகளின்
அன்புப் பாலம்!

செல்லச் சண்டைகளின்
உஷ்ண கூடம்!

புகைப்படங்களைப் பரிமாற்றும்
கொடையாளி!

நம் மனதை மெஸேஜ்களாய்
வாசிக்கும் செய்திச்சாலை!

இரவும் பகலும்
நமக்குழைக்கும் தூதன்!

பேச்சொலி மறுத்து
மூச்சொலிக்குள் ஸ்பரிசம் சேர்க்கும்
காதல் பரிசு!

ஞாபகங்களைப் பதுக்கி வைக்கும்
களஞ்சியசாலை!

லாஸ்ட் ஸீனில் நம் வருகையைப்
போட்டுக் கொடுக்கும் துரோகி!

அட.....

இத்தனைக்குள்ளும் 
எனக்குப் பிடித்தது..........

உன்னை தினமும் என்னுள் 
அடையாளப்படுத்தும் பொக்கிஷ மது!

உணர்வுகளின்
அன்புப் பாலம்!

செல்லச் சண்டைகளின்
உஷ்ண கூடம்!

புகைப்படங்களைப் பரிமாற்றும்
கொடையாளி!

நம் மனதை மெஸேஜ்களாய்
வாசிக்கும் செய்திச்சாலை!

இரவும் பகலும்
நமக்குழைக்கும் தூதன்!

பேச்சொலி மறுத்து
மூச்சொலிக்குள் ஸ்பரிசம் சேர்க்கும்
காதல் பரிசு!

ஞாபகங்களைப் பதுக்கி வைக்கும்
களஞ்சியசாலை!

லாஸ்ட் ஸீனில் நம் வருகையைப்
போட்டுக் கொடுக்கும் துரோகி!

அட.....

இத்தனைக்குள்ளும்
எனக்குப் பிடித்தது..........

உன்னை தினமும் என்னுள்
அடையாளப்படுத்தும் பொக்கிஷ மது!

viber

Photo: காதல் வைரசின்
சைபர் குற்றமோ !

பேச்சின் அதிர்வுகளின்
ஒலிப்பதிவோ !

கைபேசிகளின் நுழைவை
அம்பலப்படுத்தும் அந்தரங்கமோ !

IDD கொள்ளையடிப்பை
ரத்துச் செய்யும் இராஜாங்கமோ!

இலவச சேவையினுள்
உலகம் சுருங்கி விட்டதடா...

உன்னையும் என்னையும்
உள்ளிழுத்தவாறு!காதல் வைரசின்
சைபர் குற்றமோ !

பேச்சின் அதிர்வுகளின்
ஒலிப்பதிவோ !

கைபேசிகளின் நுழைவை
அம்பலப்படுத்தும் அந்தரங்கமோ !

IDD கொள்ளையடிப்பை
ரத்துச் செய்யும் இராஜாங்கமோ!

இலவச சேவையினுள்
உலகம் சுருங்கி விட்டதடா...

உன்னையும் என்னையும்
உள்ளிழுத்தவாறு!


புரிந்து கொள்கொற்றனே...!
உன்னில் தடுமாற்றம்...
ஏன் என்னுள் மாற்றம்!

இற்றைவரைக்கும்
நீயென்னை ......
வார்த்தைகளால் இம்சித்தும்
என் னுணர்வில் மாற்றமில்லை..

அன்பென்றும்
நிறமாறா பூக்கள் - இவ்
வகிலத்தில்...........

நீயும்
நானும் விதிவிலக்கா சொல்!

புரிந்து கொண்டால்
இன்னும்
பரிவு வளரும் நமக்குள்!

இவன்


கேலியோடு பார்த்தவர்களெல்லாம் - இன்று
கேள்வியோடு!
மாற்றங்கள் தோலால் அல்ல
மானசீக உணர்வுப் பரிமாற்றங்களின்
உந்தல்களால்!

பிணத்திற்கும் உயிர் பாய்ச்சி
பிழைக்க வைத்த குணவாளன் நீ யென
காரணம் சொல்லவா எல்லோருக்கும்
காதைக் கொடுங்கள்!

இவன்......!

எரிமலைக்குள்ளும்
முத்துக் குளித்தவன்!

சூறாவளியையும்
ஆறத் தழுவி சுவாசம் தந்தவன்!

முடிந்து போன வழிச்சுவட்டுக்குள்ளும் - புதுத்
தடம் பதித்தவன்!

அழகுக்காக அலையும் ஆயிரம் பேர்களுள்
என்னுள்....
ஆத்மா தேடும் இவன்
வித்தியாசமானவன்தான்!

ஏனெனில்.....
தினமும் சண்டைதான் பிடிக்கின்றோம்..
அதுகூட
அன்பின் பரிமாணமாய்!

ஒருபோதும் மறவாத
என் இமைக்குள்ளும் பல கனவுகள்தான்...
ஒருநாள் இமைக்காமல் உன்னையே பார்த்துக் கொண்டிருந்தபோதுதான்...
என் கனவுகள் உன்னையும் லேசாக உரசிச் சென்றது..திடுக்கிட்டு விழித்தாய் புன்முறுவலுடன்!

விரல் நீட்டினேன். பற்றிக் கொண்டன நம் ரேகைகள்...
உரிமையுடன் கைகளை உரசி அன்புணர்த்தினாய்...
இதழ்கள் படபடத்தபோது அடக்கினாய் சில துளிகள் முத்தங்களையிட்டு!

மனசு காற்றிலே பறந்தபோது ஆரத்தழுவினாய்..
நானோ விழிகள் உடைந்து முதன் முதலாய் உன் அன்பில் நெகிழ்ந்து அழுதபோது உன் கண்களும் உப்பேற்றின..

புரியாமல் விழித்தோம்.. அன்பு வார்த்தைகளாய் கசிந்தன..

அன்று.....

வெட்கம் வெடிக்க இருவரும் நம்மைப் பார்வைக்குள் ஔித்துத் திரிந்தோம் சந்திக்காமலே!...

நாட்கள் பறந்தன...உருவங்கள் பருவங்கள் திறந்தன..

நிறையப் பேசினோம்..ஒருவரையொருவர் புரிந்து கொள்வோமென்ற நப்பாசையில்!

ஒருநாள்...

நம் உதடுகள் மூடிக் கொண்டன ஊமையாய்..
திறந்த போது வெடித்தன சண்டைகளாய்...

முதன்முதலாய்......புரிதலுடன் பிரிதலும் தலைகாட்ட..
ஒன்றோடொன்று உறைந்த நம் நிழல்கள் திசை பிரிந்தன.
யதார்த்தக் கதவுகளில் நம் காதல் தொலைந்து போனதா!

ஏனோ...

இப்போதெல்லாம் நமக்குள் நாமே முள்வேலிகளிட்டு......
அன்பை மறைத்துக் கொண்டிருக்கின்றோம்!

இருந்தும்...

சில துளிகள் வற்றாத அன்பினால் நம் கனவுகளிலும் இரகஸிய ஈரலிப்புக்கள்!

பணத்தின் அருமை


Anuradhapura Bank town
அன்பியா ஜூவலர்ஸ் முன்னாலுள்ள வீதி மஞ்சள் கோட்டுக்கருகில்!

இன்று மாலை ஒரு தேவையின் பொருட்டு கடைக்குச் சென்றிருந்தேன். எனது வேலை முடிவடைந்த பின்னர் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த எனது மோட்டார் சைக்கிளை இயக்க ஆரம்பித்த போது..................

எனக்கருகே மோட்டார் சைக்கிளொன்று உரசி நின்றது..

திரும்பிப் பார்த்தேன்...

"ஸ்கூட்டி பைக்"

நடுத்தர நவநாகரிக சிங்களப் பெண்மணி அவசரமாக உந்துருளியிலிருந்து இறங்கினார்.

அவரைச் சுற்றி என் கண்கள் மொய்த்தன.........

எனக்கு மிக அருகில்  காற்றில் படபடத்துக் கொண்டிருந்த நூறு ரூபாய் நோட்டினை  தனது சைக்கிள் சில்லினால் மறைத்தவறே நின்றிருந்தார். அருகில் நான் நிற்பது அவர் அவசரத்திற்குப் புரியவில்லை.

மின்னல் வேகத்தில் கீழே குனிந்து அந்தப் பணத்தை தன் கைகளுக்குள் பொத்தியவாறே பறந்தார்.

அவர் முகத்தில் சந்தோஷக் களை...ஆனால் பணத்தைத் தொலைத்தவர் மனதில்!

சனநடமாட்டம் உள்ள இடத்தில்கூட அடுத்தவர் பற்றிய எண்ணமில்லாது பாய்ந்திறங்கி பணத்தை எடுத்த அப்பெண்மணியைக் கண்டதும்....

என் மனதில் பணத்தின் அருமை புரிந்தது.

நானோ  ....
மனம் தேவையொன்றைத் தீர்மானித்ததும் கவலையின்றி பணத்தைக் கரைக்கும் தவறு  உறைத்தது...

சாதாரணமாக கவலையின்றி நான் செலவளிக்கும் அந்தப் பணத்தை , அப்பெண்மணி எடுத்துக் கொள்ள பதினைந்து நிமிடங்கள் செலவளித்திருக்கின்றார். அடுத்தவர் பணத்தை எடுப்பது தவறு என்றாலும்கூட, அச்சிறு பணத்தின் பெறுமதி அம்மணிக்கு நன்கு புரிந்திருக்கின்றது!

என் நலனில் அக்கறை கொண்டோர், பணத்தை வீண் செலவு செய்யாமல் சேமிக்கப் பழகிக் கொள் என்று அடிக்கடி கூறும் வார்த்தைகள் அப்பொழுது எனக்குள் சுழல, மனதில் ஒரு தௌிவும் படர்ந்தது...

இன்ஷா அல்லாஹ்......

இனி பணத்தை வீண்செலவு செய்யக்கூடாதெனத் தீர்மானித்துக் கொண்டேன்!

அஹமட்

Jancy Caffoor's photo.

அஹமட்.....

ஆறு வயது!

என் சகோதரி மகன்.. விடுமுறைக்காக கட்டார் தோகாவிலிருந்து அவன் குடும்பத்துடன் வந்துள்ளான்.  நன்றாக ஆங்கிலத்தில் விளாசுவான் பெரியோரே வியந்து நிற்கும்படி!

இன்று மாலையில் நானும் அவனும் சகோதரியும் பொடி நடையாக Foodcity டவுனுக்குப் போனோம். சல்ஹாது பாண் வெதுப்பகம் முன்னால் ஒரு சைனாக்காரன் நின்று கொண்டிருந்தான். அவன் பார்வையோ இவன்மீதுதான்!

"அஹமட்......உன் இங்கிலிசில பேசு"

சொன்னேன்.

நாங்கள் அவனைக் கடக்கும்போது அவன் அஹமட்டைப் பார்த்து "ஆய்போவன்"  சொன்னதும், இவனும் அவன் முன்னால் நின்று விட்டான்.

"ஆஹா...அஹமட் பொடியன் ஏதோ பேசப் போறன் போல"

என் மனம் நினைக்க, நானும் அவர்களை விட்டு சற்று தள்ளி நின்றேன்
.
அஹமட் சைனாக்காரனைப் பார்த்துக் கொண்டே நின்றவன், திடீரென அவனுக்குப் பதில் சொல்லாமல் விருட்டென என் பக்கத்தில் வந்தான்.

"ஏன்டா பேசல" இது நான்...

"அவன் நோட்டி" இது அவன்..

"வை டா" புரியாமல் அவனைக் கேட்டேன்..

அவன் சரியில்ல..சிகரெட் குடிக்கிறான். அவன்கூட பேச மாட்டேன்"

அவன் தன் பிஞ்சுக்குரலில் சொன்னபோதுதான் சைனாக்காரனை  நோட்டம் விட்டேன். சைனாக்காரன் கையிலிருந்து புகை வளையங்கள்...வௌியேறின!

சிறு வயதில் பிள்ளையின் மனதில் நல்ல அனுபவங்களைப் பதிப்பது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும்...

காலங்கள்நம் அன்பானவர்கள்...
கடந்த காலத்தை மறந்து விடச் சொல்லுவார்கள்

நிகழ்காலத்தில் நம்முடன் இணைந்து
இன்ப துன்பங்களில் பங்கு கொள்வார்கள்..

எதிர்காலத்திற்கு நம்பிக்கையூட்டுவார்கள்..

நீ கொண்ட அன்புக்கு சாட்சியமாய்
என் காலங்கள் உன் வசமாய்!---------------------------------------------------------------------------------------

மனதின் இருப்பு


மனம் ஒருவரை நேசிக்கும்போது ....
அவரின் குறைகள் எல்லாம் நிறைவாகிப் போகும். இதனால் அவரை ரசித்து மகிழ்கின்றோம்!

ஆனால்...

காலத்தின் விதிவசத்தால்...

அவரை வெறுக்கின்றபோது ....
அவரின் ஒவ்வொரு சாதாரண அசைவிலும் குற்றமும் குறைகளும் தேடிக் கண்டுபிடித்து   வலி கொடுத்தவாறே நமது விலகலை வௌிப்படுத்துகின்றோம்..

விருப்போ...
வெறுப்போ...

மனதின் வௌிப்பாடு நம்மை தன்னுள் அடக்கியாள்கின்றது என்பதே யுண்மை!

----------------------------------------------------------------------------------------
Photo: நண்பர்களுக்கு நாம் வழங்கும் மிகச் சிறந்த பரிசு

" உண்மையான அன்பு"

நண்பர்களுக்கு நாம் வழங்கும் மிகச் சிறந்த பரிசு

" உண்மையான அன்பு"

---------------------------------------------------------------------------------

Photo: கடல் .....!

அலையடிக்கும்போதுதான் அதன் நுரை கரையோடு மோதி அழகு காட்டும். அலைகள் பாய்ந்து வரும்போது பயம் கொள்ளும் மனது,
தரை தொட்ட  அலைகள் கால்களை வருடும்போது சிலிர்த்து நிற்கின்றன..

வாழ்க்கையும் இப்படித்தான்...!

துன்பங்கள் நெருடும்போது மனதை கட்டிப்போடும் பயம், அவ்வலியை நீக்க நாம் போராடும்போது பலமாக மாறி விடுகின்றது..

பலம் பலகீனமாகவும், பலகீனம் பலமாகவும் மாற்றிப் போராடும் இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் எல்லாவற்றையும் நாம் கற்றுக் கொள்ளும்போது காலம் போய் விடுகின்றது. அனுபவம் எஞ்சும்போது நாமோ வாழ்க்கையின் பசுமையை இழந்து விடுகின்றோம்.

கடல் .....!

அலையடிக்கும்போதுதான் அதன் நுரை கரையோடு மோதி அழகு காட்டும். அலைகள் பாய்ந்து வரும்போது பயம் கொள்ளும் மனது,
தரை தொட்ட  அலைகள் கால்களை வருடும்போது சிலிர்த்து நிற்கின்றன..

வாழ்க்கையும் இப்படித்தான்...!

துன்பங்கள் நெருடும்போது மனதை கட்டிப்போடும் பயம், அவ்வலியை நீக்க நாம் போராடும்போது பலமாக மாறி விடுகின்றது..

பலம் பலகீனமாகவும், பலகீனம் பலமாகவும் மாற்றிப் போராடும் இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் எல்லாவற்றையும் நாம் கற்றுக் கொள்ளும்போது காலம் போய் விடுகின்றது. அனுபவம் எஞ்சும்போது நாமோ வாழ்க்கையின் பசுமையை இழந்து விடுகின்றோம்.

----------------------------------------------------------------------------------------உன் .....

உரிமை
உறவெல்லாம்....

சினமாகி
என்னுள் தூறிக் கொண்டிருக்கின்றது
இப்போதெல்லாம்!

வருந்தவில்லை நானும்
ரசிக்கின்றேன் உன் அன்பை!

திட்டி விடு
அன்றேல் கொஞ்சி விடு

--------------------------------------------------------------------------------------எதனையும் நாம் மனப்பாடம் செய்து பேசுவதில்லை. சந்தர்ப்பங்கள்தான் நம் வார்த்தைகளைத் தீர்மானித்து விடுகின்றன. ஒருவரின் வார்த்தைகள்தான் அவர்களது மனதைப் படம் பிடித்துக் காட்டும் கருவி..

அன்போ...
நட்போ...
பாசமோ..
உரியவர்களிடம் அதிகம் பேச வைத்து விடுகின்றது..
முடிவில் அதன் விளைவு்..

அவர்கள் நம்மிடம் கொள்ளும்....
நல்லபிப்பிராயம் அல்லது தப்பெண்ணம்!


------------------------------------------------------------------------------------------

அவசரம்
அறியாமை
ஆத்திரம்
முட்டாள்தனம்
என்பவற்றின் பின்னல்தான்
தவறுகள்

நம் தவறுகளின் வலி
நம்மை மீளவும் புது மனிதராய்
மாற்றக்கூடியது

ஏனெனில்...........

ஒருவரின் வார்த்தைகளின் வலி
நம்மைச் செதுக்கும் உளி!

-------------------------------------------------------------------------------------------

ஒவ்வொரு ஆரம்பமும்
முடிவொன்றின் அடித்தளம்........................
எனது பாடசாலை இடமாற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில்,
கற்பித்தல் பணியிலிருந்து நீங்கி
தனிமையில் நான்!

--------------------------------------------------------------------------------------------

பிரிதலும் கூடலும்


Photo: நீ வருவாயென..
இருளென்றும் பாராமல்
விடி விளக்காய் - என்
விழி யிரண்டும் ஏற்றி வைத்தே காத்திருந்தேன்...

வந்த நிலாவும் போனதுவே யுன்
சந்தடி யென் காற்றில் கலக்காமலே..
எந்தன் மனம் யுனக்காய் துடித்திருக்க - நீயோ
எனை மறந்துன் வழிப்பாதையில்!

நீ வருவாயென..
இருளென்றும் பாராமல்
விடி விளக்காய் - என்
விழி யிரண்டும் ஏற்றி வைத்தே காத்திருந்தேன்...

வந்த நிலாவும் போனதுவே யுன்
சந்தடி யென் காற்றில் கலக்காமலே..
எந்தன் மனம் யுனக்காய் துடித்திருக்க - நீயோ
எனை மறந்துன் வழிப்பாதையில்!

------------------------------------------------------------------------------------

பிரியும்போதுதான்
புரிகின்றது - நம்
சண்டைகள்கூட .......
அன்பின் வருடலென்று!

-----------------------------------------------------------------------------------

நேற்றைய சரி
இன்றைய பிழை!

-----------------------------------------------------------------------------------

நம்
வாழ்வைத் தீர்மானிப்பது வயதல்ல
மனம்
ஏனெனில்
வயது எனபது வெறும எண்கூட்டம்!

-----------------------------------------------------------------------------------

பிரிந்துதான் செல்கின்றாய்
இருந்தும்
என்னை நீ யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டாய்
ஏனெனில்
முன்னைய நாட்களில்
உன் அன்பில் நான்!

----------------------------------------------------------------------------------

ஒவ்வொரு சிரமத்திலும் ஒரு வாய்ப்பு உள்ளது..
ஒவ்வொரு வாய்ப்பும் முயற்சியின் வழியாக நம்மை பலப்படுத்துகின்றது!

---------------------------------------------------------------------------------
Photo: மௌனம்..............
நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம்!
ஏனெனில் மனவேதனைகளின் இறுக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும் கேடயம் இதுதான்!

மௌனம்..............
நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம்!
ஏனெனில் மனவேதனைகளின் இறுக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும் கேடயம் இதுதான்!


கவாஸ்கர்
வாழ்க்கை அழகான கனவுகளின் கூடாரம். வாலிபம் அக் கனவுகளை மூடிக் கிடக்கும் திரை. இந்த வசந்த வனப்புக்களையும் அறுத்தெறியும் சதியாக விதி!

இன்னும் வாழத் தொடங்காத வயது..
இருபத்திரெண்டு!
பருவத்தின் விளிம்பில் நடமாடும் உணர்ச்சிப் பிழம்பாய்!

காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை. கலங்க வைத்து தன் ஆட்டத்தில் பலரை கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை!

அதற்கு இவனும் விதிவிலக்கல்ல...

கவாஸ்கர்...!
வறுமைச் சிறையை உடைத்தெறிந்து வாழத் தெரிவு செய்த மார்க்கமாய் இஞ்ஜினியரிங் படிப்பு இவன் நிழலாகியது. ரொம்ப நல்லவன் என்பதால் எப்போதும் தன்னைச் சூழ்ந்திருப்போரை சிரிக்க வைத்துக் கொண்டிருப்பான். இவனது இந்த அழகான இரசனை அவனுக்கு பல நண்பர்களைப் பெற்றுக் கொடுத்தது..

வள்ளியூர் ....திருநெல்வேலி....
இவன் பாதம் பட்ட  தரைச்சுவடுகள்!
M.E.T College of Engineering ..இவனைச் செதுக்கிய கல்விக்கூடம்..

இந்து , நாடார் குலம்...இவன் கலாசார சின்னம்..
வாழ்க்கையைக் கற்க புறப்பட்டவன் காலனிடம் சிக்கித் தவித்த போது, அவன் கனவுக்கூடாரங்கள் சிதைந்து கல்லறையாகியது..
தான் ஆசையாக வாங்கிய உந்துருளியில் பயணித்த போது விபத்துக்குள்ளானான். வேகமாகப் பயணித்ததில் ஏற்பட்ட விபத்தா அல்லது கொலைச் சதியா ...

இறைவன்தான் அறிவான். இவனுக்குள்ளும் ஆயிரம் ஆசைகள் எதிர்பார்ப்புக்கள் மொய்த்திருக்கும். அவற்றைத் தனக்குள் சேகரித்திருப்பான் அல்லது தன் மனதைக் கவர்ந்தவர்களிடம் பகிர்ந்திருப்பான்..

மெல்லன விரிந்த மொட்டொன்று, தன்னிதழ்களை விரிக்க முன்னரே வாடிப்போனதுதான் கவலை..

தன்னைக் கடந்துபோன ஒவ்வொரு நொடிகளிலும் , தான் அற்ப ஆயுசில் போவேனென நினைத்திருப்பானா....

விதியின் சதிராட்டத்தில்....இவனும் ஒரு பங்காளி!
ஜூன் 5ம் திகதி தனது பிறந்த நாளைக் கொண்டாடியவன், நினைத்தும் பார்த்திருக்க மாட்டான் ஜூன் 24ல் தன் கல்லறையை மண் திரட்டுக்களும் அக்கினியும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்குமென்று!

மரணம்..............
இவனைத் தேடி வரவில்லை மாறாக மரணத்திற்கான அழைப்பானை இவனால் விடுவிக்கப்பட்டது மறக்க முடியாத சோக வடு!
வாழ வேண்டிய வயது...அற்ப ஆயுசில் உயிர்ப்படங்கிப் போவது யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத சோகம்தான்..


அவன்  சோகத்தினை வாசிக்கும்  ...கண்ணீர்த்துளிகள்!

ஒவ்வொரு பெற்றோரும்....

தம் பிள்ளைக்கு உயிர்ப்பூட்டி வாழ்க்கையும் தந்து நடமாடச் செய்யும்போது பலரோ அந்த வசந்தத்தை ஏதோ ஒரு வகையில் கரைத்து விடுகின்றனர்..

விதி பறித்த அந்த உயிர் மீள வருமா..

நம் வாழ்க்கையின் பெரும் பகுதி குடும்பத்தினருடனான சந்தோசத்தில் பகிரப்பட வேண்டும். ஆனால் மாறாக பலரோ அவர்களைக் கண்ணீரில் தள்ளி விட்டு காணாமல் போய் விடுகின்றனர்.

மரணக் குகைக்குள் நுழைந்த அந்தச் சின்னவனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்...ஏனோ

Photo: இப் பிரபஞ்சத்தில்
நானும்
நீயும்
இரு உருக்கள்
இறுகிய பாறைகளல்ல
அழகிய அன்பை யுடைக்க!

நம்
விழிகளில் விம்பம்
விழவேயில்லை யின்னும்
இருந்தும்...
அகக் கண்ணில் நம் நகர்வுகள்
அடிக்கடி வீழ்த்தப்பட்டு....
வீம்பாய்
முறைக்கின்றன செல்லச் சண்டைகளாய்!

அடுத்தவர் முறைப்பில்- நம்
விருப்புக்கள் இடமாறிச் செல்லும்போதெல்லாம்
சிறகடிக்கும் அன்பும்
உயிர்க்கின்றன இதமாய்!

என்னை யுன்னிடம் நிருபிக்க
அன்பு மாத்திரமே யுண்டு!

பத்திரப்படுத்து அதனை - நாளை
என் ஞாபகங்களாவது
பொய்க்கா மலிருக்க!

காலத்தின் சிதைவில்
காத்திரமான என் அன்பும் உன்னில்
கறைபட்டுப் போனதோ!
கலங்கி நிற்கின்றேன் .....

இப் பிரபஞ்சத்தில்
நானும்
நீயும்
இரு உருக்கள்
இறுகிய பாறைகளல்ல
அழகிய அன்பை யுடைக்க!

நம்
விழிகளில் விம்பம்
விழவேயில்லை யின்னும்
இருந்தும்...
அகக் கண்ணில் நம் நகர்வுகள்
அடிக்கடி வீழ்த்தப்பட்டு....
வீம்பாய்
முறைக்கின்றன செல்லச் சண்டைகளாய்!

அடுத்தவர் முறைப்பில்- நம்
விருப்புக்கள் இடமாறிச் செல்லும்போதெல்லாம்
சிறகடிக்கும் அன்பும்
உயிர்க்கின்றன இதமாய்!

என்னை யுன்னிடம் நிருபிக்க
அன்பு மாத்திரமே யுண்டு!

பத்திரப்படுத்து அதனை - நாளை
என் ஞாபகங்களாவது
பொய்க்கா மலிருக்க!

காலத்தின் சிதைவில்
காத்திரமான என் அன்பும் உன்னில்
கறைபட்டுப் போனதோ!
கலங்கி நிற்கின்றேன் .....


சிந்தனைத்துளிகள்எப்படி வாழ வேண்டுமென்று நினைக்கின்றோமோ
அதனைக் கற்பனையில் செதுக்குவோம்!

எதனைச் செய்ய வேண்டுமென்று துடிக்கின்றோமோ
அதனை செயலாய் உருவாக்குவோம்!

நம்மை தயார்படுத்தும் ஆற்றல் - நம்
உள்ளத்துணர்வில் பதிந்துள்ள சொற்களே!

ஏனெனில்....

நாம் சொல்லும் சொற்கள்
அல்லது
கேட்கும் சொற்களுக்கேற்ப நம் நடத்தைகளும் மாறும்!

----------------------------------------------------------------------------------------------


உறவுகள் உடைந்து விடக்கூடும்.
காதலும் கரைந்து விடக்கூடும்..

ஆனால்....

உண்மை அன்புள்ள நட்புக்கள் நம்மை விட்டுப் போகாது.
எத்தனை வருடங்கள் ஆனாலும் அதே எதிர்பார்ப்பற்ற அன்பு!

உண்மைதான்...

நட்பே அழகானது. இங்கு பேசுவது உணர்ச்சிகளல்ல..
அன்பான உள் மனம் மட்டுமே!


-----------------------------------------------------------------------------------------வழித்துணைநாம் வாழ்க்கையில் சந்திக்கும் நபர்கள் ஏதோ ஓர் வகையில் நமக்குப் படிப்பினையாக உள்ளனர். அந்த படிப்பினைகளைப் பகிரும் பதிவு இது
---------------------------------------------------------------------------------------------

இன்று....
யாழ்ப்பாணம் - கொழும்பு பஸ் என்னைச் சுமந்தவாறு பயணித்தது என் இருப்பிடத்தை நோக்கி!
சிறிது நேரத்தின் பின்னர் முன்பக்கத்தில் ஓர் இருக்கை கிடைக்க..

அப்பாடா....

அமர்ந்தேன்!
எனது சற்று முன்புறமாக ஓர் கிறிஸ்தவப் போதக சிஸ்ரர் இருந்தார். அவர் ஆங்கிலத்தில் பஸ் சாரதியுடன் தான் இறங்க வேண்டிய இடம் தொடர்பாக கேட்டுக் கொண்டே வந்தார்.
பஸ்ஸில் இருந்தவர்கள் தமிழ் அல்லது சிங்களம் பேசக்கூடியவர்கள். கோவாவிலிருந்து வந்த இச்சிஸ்ரரின் பிரச்சினையை யாரும் காது கொடுக்கவில்லை.

பேரூந்து............

சாலியவெவ யில் உணவுக்காக நிறுத்தப்பட்டபோது, அச்சிஸ்ரர் என்னை நெருங்கினார். ஆங்கிலத்தில் , எங்கே போகின்றாய்" என்றார்.
நானும் பதில் கூறினேன்.
தான் ஹபரணை போவதாகவும், எப்படி எந்த பஸ்ஸில் போக முடியும் என்றும் கூறினார். நானும் பதில் கூறினேன்.
அநுராதபுரம் வந்து போங்கள் என்று சொன்னபோது அவர் மறுத்தார். தனக்கு நேரம் போகுமென்று சீக்கிரம்  தானங்கு போக வேண்டுமென்றும் கூறினார்..

பேரூந்து............

மின்னல் வேகத்தில் பறந்தது. திடீரென போக்குவரத்துப் பொலிசார் பஸ்ஸை நிறுத்தி அரை மணித்தியாலம் தாமதிக்க வைத்தபோது அவர் பதற்றமும் அதிகரித்தது.

போகும் வழியில் பஸ் இறக்கம் இருந்தால் இறக்கி விடும்படி சாரதியிடம் கூறினார்.

ஆனால் அவர் கோரிக்கை நிறைவேறவில்லை.
பஸ் அநுராதபுரத்தை அடைந்தது. என்னுடன் வரும்படி அழைத்தேன். இறங்கினார். வழமையாக மட்டக்களப்பு பஸ் நிறுத்தப்படும் இடத்திற்கு அழைத்துச் சென்றேன். அவர் கெட்ட காலம் அங்கிருந்தோர் மாலை  4.30ற்குப் பிறகு பஸ் புதிய பஸ் நிலையத்திற்கு வருவதில்லை என்றும் பழைய நகர் சென்றால் தம்புள்ள பஸ்ஸில் ஏறி செல்ல முடியுமென்று கூற, நானும் ஆட்டோ ஒன்றை அவருக்காகப் பேசினேன்.

ஆட்டோக்காரன் 150 ரூபா கேட்க சிஸ்ரர் 100 ரூபா சொல்ல பயணம் தடைப்பட்டது. மீண்டும் சிறிது தூரம் நடந்து இன்னுமொரு ஆட்டோவை பேரம் பேச அவனும் அதே வாடகையை கேட்க...

வேறு வழியின்றி சிஸ்ரர் ஆட்டோவில் ஏறினார். தனக்கு பழக்கமில்லாத ஊரென்பதால் என்னையும் பஸ் நிலையம் வரும்படி அழைத்தார்.

அப்பொழுது நேரம்..மாலை 6 மணி..

அவர் அழைப்பை நிராகரிக்க மனமில்லை என்றாலும்கூட மறுத்தேன். என்னை வீட்டில் தேடுவார்களென!

அவ் ஆட்டோக்காரனுக்கு விபரம் சொல்லி பத்திரமாக அவரை அனுப்பி வைத்தது மனதுக்கு திருப்தியாக இருந்தது.

உண்மையில்...

நமக்கு பழக்கமில்லாத ஊரில்கூட உதவி செய்ய யாரேனும் வருவார். இறை நம்பிக்கை பலமாக இருந்தால்...

சுயநலம்Photo: சாலையோரம்....

அருகே தலை நிமிர்ந்து நிற்கும் மரங்களின் அழகான மலர்கள் உதிர்ந்து கிடக்கின்றன. அதன் நறுமணமோ நாசிக்குள் உட்புகுந்து மனதை வருடிக் கொண்டிருக்கின்றது.. பூக்களை மிதித்துதான் அவ்வழியைக் கடக்க வேண்டும். சுதந்திரமாக உதிர்ந்து கிடக்கும் இயற்கையின் கொடையை.........! மிருதுவான மேனியுடன் சாலையோரம் வீழ்ந்து கிடக்கும் அம் மென்னிதழ்களை நசுக்க யாருக்குத்தான் மனம் வரும்..

இருந்தும்...

நம் வழிப்பாதையின் தடைக் கற்கள் அவை!

கடந்துதான் ஆகவேண்டும்.மிதிக்கின்றேன். இதமான மென்மையுடன்..

மனசு வலிக்கின்றது. நாளை அவை உலர்ந்து சருகுகளாகி விடலாம். அல்லது அழகு அழிந்து காற்றில் வேறெங்காவது பறந்தும் போகலாம்!

நம் சுயநலம்...

இயற்கையை ஏதோ வகையில் இம்சித்துக் கொண்டே இருக்கின்றது.

சாலையோரம்....

அருகே தலை நிமிர்ந்து நிற்கும் மரங்களின் அழகான மலர்கள் உதிர்ந்து கிடக்கின்றன. அதன் நறுமணமோ நாசிக்குள் உட்புகுந்து மனதை வருடிக் கொண்டிருக்கின்றது.. பூக்களை மிதித்துதான் அவ்வழியைக் கடக்க வேண்டும். சுதந்திரமாக உதிர்ந்து கிடக்கும் இயற்கையின் கொடையை.........! மிருதுவான மேனியுடன் சாலையோரம் வீழ்ந்து கிடக்கும் அம் மென்னிதழ்களை நசுக்க யாருக்குத்தான் மனம் வரும்..

இருந்தும்...

நம் வழிப்பாதையின் தடைக் கற்கள் அவை!

கடந்துதான் ஆகவேண்டும்.மிதிக்கின்றேன். இதமான மென்மையுடன்..

மனசு வலிக்கின்றது. நாளை அவை உலர்ந்து சருகுகளாகி விடலாம். அல்லது அழகு அழிந்து காற்றில் வேறெங்காவது பறந்தும் போகலாம்!

நம் சுயநலம்...

இயற்கையை ஏதோ வகையில் இம்சித்துக் கொண்டே இருக்கின்றது.

திருமறை