நினைவுகள்தூரங்கள்...
துரத்திக் கொண்டுதான் இருக்கின்றன
அதனால்தானோ...
இன்னும்- எங்கள்
விரல்கள் தொட்டுக் கொள்ளவில்லை
உரிமையுடன்!..

சூரியத்தீயாய்
நீ....
வந்துபோனாலும் கூட
குளிர்நிலாவாய்தான்
நான் .......
காத்துக் கொண்டிருக்கின்றேன்!

ஐயத்தில்
நீ ....
அடிக்கடி உறையும் போதெல்லாம்
அச்சத்தின் தொடுபுள்ளியில் நான்
விழுந்து கிடக்கின்றேன்!

நீ....
என்னை
மறுத்து போனாலும்கூட
மறந்திட வுன்னை - என்
நினைவுகள் முயல்வதில்லை!

அடுத்தவர் பார்வையில்
திருத்திக் கொள்ள விரும்பா
தவறுகளாய் - நம்
அன்பும் இருக்கட்டும்!

அதனால்தான்....

திரும்பிப் போக விரும்பாத பாதையாய்
விரும்பிக் கிடக்கின்றே னுன்
இருண்ட நிழலுக்குள்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை