அனுபவங்கள்மனசுக்குள் பொத்தி வைத்திருக்கும் எதிர்பார்ப்புக்களை
எல்லாம் தேடிக் கொண்டிருக்கின்றேன்
ஒவ்வொரு இரவு மென் கனவுகளில்!

கண்கள் சயனிக்கும் அந்நொடிகளின் உயிர்ப்புக்கள்
லேசாய் உயிரோடு உரசும்போது..
களைத்துப் போன உள்ளம்
கலி களைந்து களிப்போடு
மெல்லத் தடவுகின்றது என்னை!

---------------------------------------------------------------------


குழந்தை.....
தான் பார்த்ததை செய்யத் துடிக்கின்றது
அங்கே ....
அனுபவங்கள் தொகுக்கப்படுகின்றன
அழகாய்!

நாமும்...
செய்ததை திருப்பிப் பார்க்கின்றோம்
கடந்தகாலமாய்....
அங்கும் தொகுக்கப்பட்ட அனுபவங்கள்
கரைகின்றன...
ஏக்கமாய், வலியாய், மகிழ்வாய்!
----------------------------------------------------------------------

இரும்புக் கரங்கள் இருந்தால் போதும்...
உருகும் மெழுகுகள்கூட
இறுகிய பாறைகளாய்
உருமாறிக் கிடக்கும்!No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை