24 வருடங்கள்

எங்கள் அகதி வாழ்விற்கு வயது
24.......
.
இதய மின்னும் இற்றுப் போய்த்தான்
இருக்கின்றது....
இரண்டு மணி நேர இனச் சுத்திகரிப்பின்
வீரியத்தில்!
.
நவீனத்தின் பற்றுதலோடு
சுற்றிச் செல்லும் இப் பூமியின் எச்சமாய்
இன்னும்
இடிந்த கட்டிடங்களும்
உருக்குலைந்த மனிதங்களும்
அகதிச் சரிதத்தின்
முகப்புக்களாய் முகங்காட்டித்தான்
கிடக்கின்றன!
.
களமிறங்கும் அரசியல்கள்
கச்சிதமாய் வேட்டுக்களை ஏப்பமிட்டும்
இன்னும் திரும்பிப் பார்க்கவேயில்லை
இருண்ட எம் தாயத்தை!
.
யுத்தம் சப்பிய ஆன்மாக்கள்
நாமாய்...
விரட்டப்பட்டும் மிரட்டப்பட்டும்...
அவலத்தின் சந்ததியாய்- இவ்
அவனிக்கும் பாரமாய்
அந்ததரித்துக் கிடக்கின்றோம்!
.
நிவாரணங்கள் நிர்க்கதியானதில்...
தேய்ந்து போன தாயத் தெருக்கள்
எம் சுவடுகளின்றி
இன்னும்...
குற்றுயிராகத்தான் கிடக்கின்றன!
.
ஆகாயம் வெறித்துக் கிடக்க
அலை புரளும் கடலும்
வியர்த்துக் கிடக்க.........
பனையும் தென்னையும் உரசும்
யாழ்க் காற்றில்..............எம்
மூச்சும் கோர்த்துக் கிடக்கு
மந்தக் காலம் மட்டும்
ஏனோ.......
இன்னும் விடை தரா வினாவாக!


----------------------------------------------------------------------------------------

(30.10.2014 அன்று நாம் யாழ் மண்ணிலிருந்து விரட்டப்பட்டு 24 வருடங்கள் ..............
காலங்கள் ஓடலாம் - ஆனால் எம் ஞாபகச் சுவர்களின் அந்தக் கண்ணீர்த்துளிகள் நாம் மரணிக்கும் வரை ஈரம் உலர்த்தாது.........
உண்மையில்.............
வீடு தேடி அலையும்போதுதான் அகதி வாழ்வின் விரக்திச் சுமை மனதை வருத்தும் அரக்கனாக மாற்றுகின்றது....)

முஹர்ரம்


ஒவ்வொரு மனிதரைச் சூழவும் அவர் அண்டி நிற்கும் சமூக, சமய, கலாசார உணர்வுகள் அவர்களது அடையாளங்களாக நிற்கின்றன. அந்த வகையில் முஸ்லிம் மக்கள் முஹர்ரம் எனும் தமது புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கவுள்ளனர்...

ஹிஜ்ரி வருடம் 1436 ன் புதுப் பிரவேசத்தில் பிரவேசிக்கப் போகும் நிலையில் நாம்...
நாட்கள் எவ்வளவு வேகத்தில் பறந்து கொண்டிருக்கின்றன. நாமோ ஆமை வேகத்தில் நமது செயல்களுடன் பயணிக்கின்றோம்...
இருந்தும்....
இதோ...... நமது புதுவருடத்தின் நிழலில் அண்மித்தவர்களாக நாமிப்போது!

அல்லாஹ் கூறுகிறான் :
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் 9:36)

முஹர்ரம் மாதத்தின் முதலாம் நாள் முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இப்பண்டிகை கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை சீஆக்களால் நினைவுகூரப்படுகிறது.

10 வது தினத்தில் நோற்கப்படும் ஆசுரா நோன்பானது ,
தான் கடவுள் என்று கூறிய அரசன் ஃபிர்அவ்ன் மற்றும் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா (அலை) அவர்களை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதற்காக நோற்கப்படுவதாகும்.

வரலாற்றில் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாள்) நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். ‘இது என்ன நாள்?’ என்று கேட்டார்கள். யூதர்கள் ”இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ”உங்களை விட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்” என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 2004.

ஆஷூரா நாள் நோன்பின் சிறப்பை நோக்கினால்,
”ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!”
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல் : புகாரி 2006

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆஷூரா நாள் நோன்பு முந்தைய ஒரு வருட தவறுகளுக்கு பரிகாரமாகும் என்று நான் அல்லாஹ்விடம் நம்பிக்கை வைக்கின்றேன்.
நூல் : முஸ்லிம் 1976

இஸ்லாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் முஹர்ரம் தொடர்பான கணக்கெடுப்பு பின்வருமாறு கணக்கெடுக்கப்படுகின்றது.
(இன்ஷா அல்லாஹ்)
முஹர்ரம் ஆரம்பம் 25 அக்டோபர் 2014 ----.........இறுதி 22 நவம்பர் 2014

எனவே முஹர்ரம் ..............!

எனும் போர் செய்யத் தடை செய்யப்பட்டுள்ள இப்புனித மாதத்தில் சகல முஸ்லிம்களின் வாழ்க்கையிலும் நேர்வழி ஏற்பட்டு அதனூடாக சாந்தி, சுபீட்சம், அமைதி , சகோதரத்துவம், ஒற்றுமை ஏற்பட எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை புரிவானாக!

                                                                                                                                       - jancy

ஆசிரியர் தினம்


கடந்த 6.10.2014 உலக ஆசிரியர் தினம் பாடசாலையில் நடைபெற்றபோது தரம் 8 பீ அயாஸ் இப்ராஹிம் எனும் மாணவன் எனக்களித்த அன்பளிப்பு இது....
.
பொதுவாகவே தமக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாத்திரமே மதிப்பும் கௌரவமுமளிக்கும் மாணவர்களின் நடைமுறையிலிருந்து விலகி, இம்மாணவன் எனக்களித்த இந்த அன்பளிப்பை உயர்ந்த கௌரவமாகவே கருதுகின்றேன்..

தீபாவளி


பட்டாசு வெடிக்கின்றது
இங்கும்.....
வீட்டுத் திக்கெங்கும் அக்னி பிரளயம்....!
வார்த்தை ஞாலங்களின் மோதல்கள்
எரிபொருளாகி...வெறுப்புத்
தீபங்கள் எரிகின்றன தினமும்
ஆனால்.....
அசுரன் அழிந்ததாகத் தெரியவில்லை!


ஆஹா

---------------------------------------------------------------------------------------------------

புகழை தனக்குள் அடிமைப்படுத்தாதவர்.........
ௐருபோதும்.........
 பிறரால் இகழப்படுவதில்லை


-------------------------------------------------------

தோல்விகள்தான் நமக்குப் பாடங்களைப் புகட்டிக் கொண்டிருக்கின்றன..
ஏனெனில்................

தோல்விகள் ஏற்படும்போதுதான் நாம் நமது குறைகளைத் திரும்பிப் பார்க்க ஆரம்பிக்கின்றோம்!

--------------------------------------------------------------------------------------


புறம் நோக்கும் நம்  கண்கள் கொஞ்சம் ......
அகமும் நோக்கட்டுமே.........
அப்பொழுதுதான்...........
அடுத்தவர் நம்மைக் கணிக்கும் எடையை 
நாமே பார்வையிட முடியும்!
--------------------------------------------------------------------------------------------


குளிரோடு சேரும்
உன் நெஞ்சின் பாசம்.......
பனித்துகள்களாய் உருகி - நம்
நினைவுகளை 
உலர விடாமல் காக்கும்!

ஆனால்........
அழகான இந்த இரவில்
நம்மை ரசிக்க ............
பௌர்ணமியும் இருந்துவிட்டால்...........!
-------------------------------------------------------------------------------------------


அழகான பூக்களுக்கு
முட்கள்தான் பாதுகாப்பென்றால்......
அருமையான வாழ்வுக்குள்ளும்
அர்த்தமுள்ள கட்டுப்பாடுகளும் அவசியம்!

-------------------------------------------------------------------------------------------

நேரம் என்பது...........!
வெறும் கடிகார முட்களலல்ல.....நாம் பயணிக்கப் போகும் செயல்களின் வெற்றித் தன்மைக்காக பயன்படுத்தப்பட வேண்டிய காட்டி!---------------------------------------------------------------------------------------------------


யாரை அதிகமாகப் பிடிக்கின்றதோ
அவர்களிடம் தோற்றுத்தான் போகின்றோம்.......
 எமது எதிர்பார்ப்புக்கள்
அவர்களால் நிராகரிக்கப்படும்போது
தோற்றுத்தான் போகின்றோம்!
.
ஆனால்......
.
தோற்றுப் போகும்போது கிடைக்கும் ஒவ்வொரு அடியும்
நம்மையும் செதுக்கின்றது.......நம்
வாழ்வைப் புரிந்து
வாழப் பழகிக்கொள்வதற்கு!

-----------------------------------------------------------------------------

தாய்நாடு நமக்கொரு அடையாளம்.......
நம்மைப் பராமரித்து அடை காக்கும் குருவிக்கூடு!----------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------

ௐரூவரை விரும்ப ௐர் காரணம்
அன்பு.....
வெறுக்க பல காரணங்கள்

---------------------------------------------------------------------------------------

மகுடம்


காலையில் மலர்ந்து மாலையில் வாடி விழும் பூவல்ல வாழ்க்கை...
அதுவோர்.....................
நீண்ட தேடல்!
தேடும் மனமிருக்கும்போதுதான் தேவைகளுக்கான விடைகளும் கிடைக்க ஆரம்பிக்கின்றன...
நம்மில் பலர்..............
முடியாது என்ற எண்ணத்தில் 'பலத்தை' யெல்லாம் இயலாமையாக்கி விடுகின்றார்கள்!

-------------------------------------------------------------------------------------
காதலையும் கடந்த அன்பு.........
நமக்குள் இருப்பதனால்தான்...
இன்னும் பேசிக் கொண்டிருக்கின்றோம்
வலிகளையும் பகிர்ந்தபடியே!

--------------------------------------------------------------------------------------


-----------------------------------------------------------------------------------

வலி தீர்க்கும் மருந்து.........
அன்பான இதயங்களுடன் மனம் விட்டுப் பேசுவதில் இருக்கின்றது.
ஏனெனில்.........
மனசுக்குள் மறைந்திருக்கும் ஆயிரம் பிரச்சினைகளை அறுத்தெறியும் வாள்
இவ் அன்பானவர்களின் பேச்சிலிருக்கின்றது!
---------------------------------------------------------------------

மொழியீர்ப்பு மையத்தில்
வீழ்ந்து கிடக்கும் நம்மை....
அண்டவௌிகளும்
அதிசயத்துப் பார்க்கின்றன
அன்பின் ரகஸியம் தேடி!
--------------------------------------------------------------------------------------------

எடுத்ததற்கெல்லாம்...
அடுத்தவரைக் குற்றம் சொல்லுபவர்
பிறர்  விமர்சனத்தில் காணாமல் போகின்றார்கள்
அல்லது கல்லெறி வாங்குகின்றார்கள்..
ஏனெனில் இவர்கள்........
பிறர் குறை பறைசாற்ற முன்னர் - தம்
கறை அகற்றாதவர்கள்!
---------------------------------------------------------------------------------------------------

சுயநலம்................!
.
நமக்குள் இருக்க வேண்டும். அப்பொழுதுதான்  தடைகளையும் உடைத்தெறிந்து நம்மை அடுத்தவருக்கு அடையாளப்படுத்தும் உந்துசக்தி கிடைக்கும். ஆனால்.................அச்சுயநலத்தால் அடுத்தவர் நலம் அழியக்கூடாது!

--------------------------------------------------------------------------------------------------

மனதின் நெருடலாய் ஓர் பார்வை

---------------------------------------------------------------------------


அடடா..............!
.
பார்வைகளின் வசீகரத்தில்
மனங்களில் எழுதப்படும் அழகான கவிதை
"அன்பு"

---------------------------------------------------------------------------------------------


வீணாய் உதிர்ந்து கொண்டிருக்கும்
பணத்தின் அருமையை.....
கசிந்துகொண்டிருக்கும் உன் வியர்வைத்துளிகள்
உணர்த்துகின்றன தினமும்!
.
உன் வியர்வையும் - என்
தவறின் கண்ணீரும்........
ஒன்றாய் இணைகையில்
கர்ப்பம் தரிக்கின்றதென்....
"உண்டியல்"
----------------------------------------------------------------------------

திறமைகள்தான் மனிதர்களை அடையாளப்படுத்துகின்றன. நூலைக் கற்றுக் கொண்டவன் பதவிகளில் அலங்காரமாகத் திகழ..
உழைப்பினைக்' கற்றுக் கொண்டவன் திறமைகளால் தன் முதலீடுககளை உயர்த்திக் கொண்டிருக்கின்றான்...
.
முயற்சியுடன் கூடிய எத்தொழிலும் சாதனைகளால்தான் நிரப்பப்படுகின்றன. அரிசியில் பெயரெழுதும் கலையைப் பாராட்டத்தான் வேண்டும்!


-------------------------------------------------------------------------------------------------------------

எட்டியுதையும் கால்களைக் கூட
கட்டித் தழுவும் குழந்தைப் பாசம்.....
மாசற்ற தேன்துளிதான்!
-----------------------------------------------------------------------------------------


இருளுக்கும் விழியாகும்
மெழுகுவர்த்தியே..............
ஔி கொடுத்தே
பலி கொள்ளும் நீ கூட............
.
உதாரணமாய் எம்மிடத்தில்
"நன்மைக்குள்ளும் தீமையுண்டு"
.
பிரித்தறிவோர்...........
பாராளும் முதல்வர்கள்!

--------------------------------------------------------------------------------------------


---------------------------------------------------------------------------------------------

நவீன தொலைபேசியில்.....
எல்லாம் இருக்கின்றதுதான்!
ஆனால்.....
அழைப்புக்களை எடுக்க மட்டும்
நேரமில்லைபிரார்த்தனை எனும் ஆயுதம்


மரணம் எனும் எல்லை வரை தொடரக்கூடிய இம்மனித வாழ்வில் பாவங்களை அகற்றி இறைவனுடன் ஆன்மீகத் தொடர்புகளை ஏற்படுத்த பிரார்த்தனைகள் அவசியமாகின்றன. நம் வாழ்வில் ஏற்படும் சகல பிரச்சினைகளுக்குமான தீர்வுகள் இப்பிரார்த்தனைகள் மூலமாகவே இலகுவில் நம்மை வந்தடைகின்றன..

ஹஜ்ஜின்போது புனித அரபாவௌியில் கேட்கும் பிரார்த்தனைகள், 
ரமழானில் கடைசிப் பத்து இராக்களில் கேட்கப்படும் பிரார்த்தனைகள், தஹஜ்ஜத் தொழுகையின்போது கேட்கப்படும் பிரார்த்தனைகள் 

போன்ற சகல பிரார்த்தனைகளும்இறைவனிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டுமானால், நாம் நம்மைப் படைத்தவன் விரும்பும் வகையில் நமது வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டும்.....அப்போதே நமது துஆக்களின் பெறுமானம் மிகச் சிறந்ததாக இருக்கும்..
.
பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமாயின் முதலில் நமக்கும் அல்லாஹ்வுக்குமிடையிலான தொடர்பு மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். அப்போதே நமது மனமுறுகல் இறைவனிடத்தில் கசிந்து கிடக்கும். மாறாக பாவங்கள், ஷரீ அத்துக்கு முரணான செயற்பாடுகளிலீடுபடும்போது தீமைகளின் செல்வாக்கில் நன்மைகள் தடுக்கப்பட்டு விடுகின்றன. இப் பாவக்கறைகள்தான் பிரார்த்தனைகளின் வலுக்களைக் குறைத்து விடுகின்றன.
.
இதனை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு நவின்றார்கள்..

"நீங்கள் நன்மையை ஏவ வேண்டும். தீமையைத் தடுக்க வேண்டும். நன்மையை ஏவி தீமையைத் தடுக்கின்ற மார்க்கக் கடமையைப் புறக்கணிக்கின்றபோது அல்லாஹ் தீயவர்களை உங்கள் மீது சாட்டி விடுகின்றான். பின்னர் உங்களுக்கு மத்தியில் இருக்கின்ற நல்ல மனிதர்கள் துஆ செய்வார்கள். ஆனால் அந்த துஆவுக்கு பதில் கிடைக்காது"
.
எனவே நமது மனதைச் சுத்திகரித்து, அச்சுத்தத்தின் பிரதிபலிப்பை நாம் வாழும் சூழலிலும் பரவவிட்டு வாழும்போது பாவம், குற்றமற்ற செயல்களைப் புரியாதவர்களுடன் அல்லாஹ் இறுக்கமான தொடர்பைப் பேணி பிரார்த்தனைகளை ஏற்கின்றான்..
.
"ஈமான் கொண்டவர்களே ! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான். உங்களது பாதங்களை ஸ்திரப்படுத்துவான்"
(ஸூரா முஹம்மத்  7,8)
.
எனவே இங்கு உதவி செய்வதென்பது அவனது கட்டளைகளுக்குப் பணிந்து வாழ்தலைக் குறிப்பதால் , துஆ அங்கீகாரமென்பது  இறைவனால் மிக விரும்பப்படும் மனிதருக்குக் கிடைக்கும் அருட்கொடை எனலாம்.
.
அல்லாஹூவுடனான தொடர்பை இறுக்கமாக, நேர்த்தியாகப் பேண முதல் நம்முளம் தூய்மையுள்ளதாக இருக்க வேண்டும்.

"யா அல்லாஹ்! நீதான் அகிலத்தின் அதிபதி, நான் உன தடிமை" 

எனும் மனப்பாங்கு நம்மிடத்தில் இருக்கும்போதுதான் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் அவனுக்குரிய செயல்களாக இருக்கும்.
நாம் அல்லாஹ்வின் அடிமைகள், அவன் எங்கள் ரப்பு எனும் நம்பிக்கையான வார்த்தைகள் அடி மனதிலிருந்து எழும்போதுதான் நாமும் நமது  உளத்தை ஆரோக்கியமாகப் பேணி, இறைவனுடனான தொடர்பைப் பேணுவோம். இது பிரார்த்தனை ஏற்றலின் ஆரம்பநிலை.

பரிசுத்தமான மனதானது பரிசுத்தமான உடலின் ஓர் பாகமாகும். எனவே இறைவனிடத்தில் துஆக்களைக் கேட்டு எமது கரங்கள் உயரும்போது தூய்மையான உள்ளத்துடன் உடல், ஆடைகளும் தூய்மையாகி நம்மைப் போர்த்திக் கொண்டிருக்க வேண்டும். எனவே ஹராம் கறைகளை அகற்றியதாகவும், ஹலாலை நோக்கியதாகவும் எமது தேடல்களும் .  செயல்களும் இருக்க வேண்டும். அப்போதே நமது துஆக்களும் இறைவனால் அங்கீகரிக்கப்படும்.

மேலும் இஸ்லாம் எனும் வாழ்க்கைநெறியின் அடித்தளம் ஈமானாகும். அந்நம்பிக்கை இறைவணக்கத்தின் ஆணிவேராகும். எனவே அல்லாஹூ தஆலா எனது பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்வான் என மனதிலிருத்தி நம்பிக்கையுடன் நாம் அவனிடம் உதவி கேட்கும்போது, நமது துஆக்கள் வலுவுள்ளதாக மாற்றப்படுகின்றன. அதுமாத்திரமல்ல பிரார்த்தனைகள் வெறும் நாவினால் மாத்திரம் உச்சரிக்கப்படாமல், அது மனதின் ஒலியாக வௌிப்படும்போதுதான் இறைவனும் நம் குரலுக்குச் செவிசாய்க்கின்றான்.
.
பிரார்த்தனைகள் துன்பம் தீர்க்கும் வழியல்ல..இன்பத்திலும் இறைவனிடம் சென்றடைய வேண்டிய பாதை. எனவேதான் இன்பமோ , துன்பமோ நாம் செய்த பாவங்களை மனதால் ஏற்றுக் கொண்ட நிலையில், ஒவ்வொரு துஆவையும் குறைந்தபட்சம் மூன்று தடவையாவது மீட்டி, கிப்லாவை முன்னோக்கி அமர்ந்த நிலையில் கேட்க வேண்டும். அப்போது எங்கள் தொனி அமைதியானதாகவும், தாழ்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்..
.
இவ்வுலகில் நாம் ஜனனிக்க பெற்றோர் அவசியம். தன்னைப் பெற்றோரை இகழ்வோனின் துஆ ஒருபோதும் அங்கீகரிக்கப்படுவதில்லை. தாயின் காலடியில் சுவனத்தை வைத்த எம் மார்க்கம் அத்தாய்மைக்கு கருணை காட்ட வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றது. பெற்றோருக்காக கேட்கப்படும் துஆக்கள் நிச்சயமாக ஏற்கப்படுவதைப் போன்றே, நோயாளி கேட்கும் துஆக்களும், நோன்பு திறக்கும்போது கேட்கும் துஆக்களும் ஏற்கப்படுகின்றன. பிரார்த்தனைகள் நமது துன்பம், கவலைகளை மறக்கச் செய்கின்ற ஆயுதமாகும்...

கஷ்டம், துன்பம், மன வேதனை, கவலைகள் நீங்குவதற்கும் பிரார்த்தனை எனும் ஆயுதத்தை கையிலேடுக்குமாறு நபியவர்கள் பணித்திருக்கிறார்கள்.

இப்பிரார்த்தனைகளில்  நாம் கேட்கின்ற "லா இலாஹ இல்லா அன்த" எனும் சொல்லை முன்மொழிவதன் மூலமாக இறைவனின் ஏகத்துவத்தை ஏற்று அவனிடம் பிரார்த்தனைகளை  சமர்ப்பிக்கும்போது அவனும் அத் துஆவை ஏற்றுக் கொள்கின்றான்.

எனவே மேற்கூறிய மனநிலையில் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தேவைகளுக்குமான நிறைவேற்றலுக்காக நாம் படைத்தவனிடம் கையேந்தும்போது அது நிறைவேற்றப்படுகின்றது. எமது முயற்சியும் அதனோடிணைந்த பிரார்த்தனைகளும் நம்மை வழிப்படுத்துகின்ற மேன்மைப்படுத்துகின்ற, பாதுகாக்கின்ற கேடயங்களாக இருப்பதால் அவை நமக்கான, நம் துன்பம் கலைக்கின்ற ஓர் ஆயுதமாகவும் நம்முடன் கூடப் பயணிக்கின்றன.  எனவே உளத்தூய்மையுடன் மொழியப்படுகின்ற பிரார்த்தனைகள் வீண்போவதில்லை.......அவை நம் வாழ்வை வளப்படுத்தும் ஓர் இறை வணக்கமுமாகும்.....

பிரார்த்தனை எனும் இபாதத் ...............
நம் வாழ்வின் வெற்றிகளைக் குவிக்கும் ஆயுதம்.......! 
.

போராட்டம்
எல்லாமே முடிந்து விட்டதாகத்தான்
நினைக்கிறேன்.- இருந்தும்
விரல்கள் விடுவதாக இல்லை
பேனாவைப் பற்றிக் கொண்டு
பேரம் பேசுகின்றன வாழ்க்கைப் போராட்டங்களை!
.
ஒவ்வொரு போராட்டங்களும்
அடிமைத்தனத்திற்கான எழுச்சி!
ஆருடம் சொல்கின்றது
வருஷக் கணக்காக நடக்கும்
பெற்றோர் சண்டைகள்!
.
முரண்பாடுகளுள் உடன்படும்
வருங்காலம்.........
மருண்டு கிடக்கின்றது- மனிதராக
வாழ
அருகதையற்ற சிலரால்!
.
ஏதோ வாழ்க்கையோடிக் கொண்டுதானிருக்கின்றது
வாழத் தெரியாத சிலர்
வாழ்வோடிணைந்து
வாழ்வைப் பாழ்படுத்தினாலும்.....
ஏதோ வாழ்க்கையோடிக் கொண்டுதானிருக்கின்றது
இன்னும்!

மனசின் வரிகள்

------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------காலம் ஒரு கண்ணாடி........

ஏனெனில்..........

பொய்மைகளைத் தானாகவே காட்டித் தந்துவிடும்!

பொய்யானவர்களுக்கு உண்மையாக இருக்கப் போராடுவதை விட,
உண்மையானவர்களுக்கு உணர்வாக இருப்பது அக்காலத்தின் சத்தியமாக இருக்கின்றது...அப்பொழுதுதான் பொய்மையின் பலகீனம், மெய்யின் பலத்தில் கரைந்து போய்விடுகின்றது!
------------------------------------------------------------------------------------------

இலஞ்சம் வீட்டிலிருந்துதான் ஆரம்பமாகின்றது..
இது இலட்சங்களல்ல.......
அழும் குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கித் தருவதிலிருந்து!


உலக தபால் தினம்- 2014தொலைத்தொடர்பு இலத்திரனியல் ஊடகங்களின் வருகையால் சவாலுக்குள்ளாகியுள்ள அஞ்சல் சேவையை மக்கள் புறக்கணித்து விடாத நிலையில் ஒக்டோபர்  9ந் திகதி உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகின்றது.

இந்த வருடத்திற்கான தொனிப் பொருள்

 "மக்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட தபால்"

என்பதாகும். இதன்மூலம் இளைஞர்கள் மறந்துவிட்ட தபால்சேவையின் முக்கியத்துவம் மேலும் உணர்த்தப்படுகின்றது.

1969ம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் பெறப்பட்ட முடிவின்படி ஒக்டோபர் 9ந் திகதி உலக அஞ்சல்தினமாகக் கொண்டாடப்படுகின்றது. உலக தபால் அமைப்பில் 150 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. சுவிற்சலாந்தின் பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல்தினமாகக் கொள்ளப்படுகின்றது.

1712ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் முதலாவது தபால் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையைப் பொறுத்தவரையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே தபால் துரித வளர்ச்சியேற்பட்டது. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பனியினரின் தகவல் வளர்ச்சிக்காக ஒழுங்கமைக்கப்படாத தபால் சேவையொன்று கெப்டன் எ கென்னடியினால் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் , தபால்துறையின் தலைமைப் பொறுப்பதிகாரி ஈ பிளாட்டமன் அவர்கள் 1815ல் கொழும்பு, காலி, மாத்தறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற இடங்களில் ஆறு அஞ்சல் நிலையங்களைத் திறந்தார்..

1832ல் ஆசியாவில் முதற்தடவையாக குதிரை வண்டித் தபால்சேவை கொழும்புக்கும் கண்டிக்குமிடையில் நிகழ்த்தப்பட்டது.

1857ல் (ஏப்ரல்1) முதல் வௌியிடப்பட்ட தபால் தலையில் விக்டோரியா மகாராணியின் உருவம் பொறிக்கப்பட்டது.

1865ல் முதற் தடவையாக கொழும்புக்கும் அம்பேஸ்ஸவுக்குமிடையிலான தபால் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1867ல் முதன்முறையாக தனியார் தபால் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

1872 ஓகஸ்டில் முதல் தபால் அட்டை வௌியிடப்பட்டது.

இன்று இலங்கையில் 609 மேற்பட்ட தபால் நிலையங்கள் சேவையாற்றுகின்றது. ஆனால் உலகிலே அதிகளவான தபால் நிலையங்களைக் கொண்ட நாடாக இந்தியா காணப்படுகின்றது. இங்கு ஒரு இலட் 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் கணக்கிடப்பட்டுள்ளன.

நவீன தொழினுட்ப வளர்ச்சியின் சவாலை சந்திக்க அஞ்சல்துறை பல்வேறு புதிய திட்டங்களை வழங்கும் என நம்பலாம்...

தேவதையுடன்


விரல்களின் விருந்தோம்பலில்
கணனித் தட்டச்சு திணறிக் கொண்டிருக்க..
கண்களைக் திரையில் பொறிக்கின்றேன்!
கன்னம் சிவக்க சிரிக்கு முன் முகம்
காணவில்லை
சில நாட்களாய்!

நெஞ்சக்கூட்டைக் குதறிக் கடிக்கும்
உன் நினைவுகளைக் கிள்ளிப் பார்க்கின்றேன் - நீ
தொலைந்து போன ஈரத்தை
இன்னும் பரத்திக் கொண்டுதான்
இருக்கின்றன ...........
உன்னை உலர விடாமல் தடுக்க!

தடக்கி விழுந்த போதெல்லாம்
என்னை நிமிர்த்திய வுன் கரங்கள்....
அழுதபோதெல்லாம் அணைத்த வுன்
கரங்கள்......
கவலைகள் துடைத்த வுன் வார்த்தைகள்
இப்போதெல்லாம்...............
அவள் பெயரை ஸ்பரித்தே
என்னை மறந்து போனது!

அன்று....
நீ.....
அன்போடு எழுதிய என் சரிதத்தை............
அவசர  அவசரமாய் முடித்து வைத்தபோது
உன்
அவசரத்தின் அவசியத்திற்காய்
வழி விட்டு நிற்கின்றேன்
மௌன வௌிக்குள்!

என் ஆழ்நிலைச் சுவாசம் பிடுங்கி
நீ ......
தினமும் உயிர்ப்பூட்டும் அவளுக்காய்.....
உனக்காய்.........
இறந்துமுன்னை நேசிக்கின்றேன்!

என் கல்லறைச் சுவர்களாவது
உன்னுடனான என் னன்பை......
புரியவைக்குமென்ற நெகிழ்வுடன்
விடைபெறுகின்றேன்.......

நீயாவது வாழ்ந்துவிடு
உன் தேவதையுடன்!

மனமே மனமே
தியாகம், விட்டுக் கொடுப்பு , இறையன்பு போன்ற தத்துவங்களால் ஆளப்படுகின்ற இன்றைய ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது ஈதுல் அல்ஹா ஈத் முபாரக்!
----------------------------------------------------------------

இன்று (ஒக்டோபர் 06) இலங்கையில் சர்வதேச ஆசிரியர் தினம்    கொண்டாடப்படுகின்றது. ஆசிரியர்தின வாழ்த்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள். அத்துடன் எனக்கும் கல்வியூட்டிய என்னுடன் பணியாற்றும் சகல ஆசிரிய நட்புக்களுக்கும் இனிய ஆசிரியர்தின வாழ்த்துக்கள்......! 


--------------------------------------------------------------------------

நீ மறந்து போன..
மறுத்துப் போன ஒவ்வொன்றும் - என்
ஞாபகங்களாய்!
தொலைத்தாய் என்னை - பல
எல்லைகளுக்கு அப்பால்!

-----------------------------------------------------------------


மழைத்துளிகள் மெல்ல கரம் தருகின்றன
கன்னம் கரைக்கும் கண்ணீரை
யாரு மறியாது துடைப்பதற்கு!
---------------------------------------------------------------------------


தேடல்களின் தொகுப்புத்தான் வாழ்க்கை! அதனால்தான் திருப்தியடையாத மனமும் தினமும் தேவைகளை விரித்துக் கொண்டே செல்கின்றது. ஒன்றின் நிறைவில்தான் புதிய தொன்றுக்கான ஆசைமனதில்  வித்திடப்படுவதனால் , கிடைத்த தொன்றினை ரசிக்க ஆரம்பிக்க முன்னர், கிடைக்காத ஒன்றுக்கான எதிர்பார்ப்பில் மனம் அலைந்து ஏக்கம் சுமந்து அந்த ரசனையையும் கவலைக்குள்ளாக்கி விடுகின்றது பலரிடம்...!
.
நிலையற்ற மனித மனமே... நீ
கவலைகளின் சொப்பனம் இதனாலோ!
----------------------------------------------------------------------------------------


உறவுகள், நட்புக்களின்
சுயநலங்கள்......
அன்பைப் பொசுக்கும்போது....
அனாதை விடுதிகளும், முதியோர் இல்லங்களும்
அடையாளங்களாகின்றன
புது உறவைக் கொடுத்து!
.
தொலை சென்ற உறவுகள் தேடா
முள்வேலிக்குள் முகவரி காட்டும்
கலைக்கூடத்திலும்
நல்ல உள்ளங்களின் அன்பும் கிடைப்பதுண்டு!

-----------------------------------------------------------------------------

வேடிக்கையான வாழ்க்கைக்குள்
விடியல் தேடும் மானுடர்கள்.....
நேற்றிருந்தோர் இன்றில்லை
இன்றிருந்தோர் நாளை நம்கூட வரப் போவதில்லை.....
சுயநல ஆதிக்கமும்....
விதியின் கோரத்தனமும்....
மாற்றங்களோடு!

இதுதான் வாழ்வின்
யதார்த்தமா!

மீள வந்துவிடு
இப்பொழுதெல்லாம்
இரவு முகிழ்க்கையில்.....
இதயத்தில் ஏனோ வலி!

அன்று.......

அல்லி பூத்தலை ஈர்த்த
 நம் நெஞ்சங்கள்....
ஔிப்பிழம்பாய் கசியும்
நட்சத்திரங்களை
ரகஸியமாய் நனைத்த
நம் விழிகள் ...
நிலாவின் குளிர்மையில்
உலாவிக் கிடந்த நம் வார்த்தைகள்...

இன்று.....

பிரிவின் மையத்தில்
பரிவில்லா காலத்தின் ஆணையாய்...
கலங்கிக் கிடக்கி்ன்றன!

இது யார் செய்த
சதியடா....
என்னைப் புரிந்து கொள்ளாத
பரிவில்லாத நீ தந்த பரிசடா!

உனக்குள் வாழ்ந்து
உன் சேய்கள் சுமந்த  என்னையே....
காகிதமாக்கி
காலனிடம் சேர்த்தா யுன் சினத்தால்...!

அடிக்கடி .....
என்னை உச்சரித்த
உன் னுதடுகளுக்குள்.....
இன்று நானில்லை!

நம்முள் நகரும் பல நிமிடங்கள்....
வெறுமையின் சிறைக்குள்
உன்னால்!

உன் ஞாபகத்துள்
மறந்துவிட்டஎன் னுயிர்க்கூட்டுக்குள்......
தினமும்
இராக்களில்
விசமேற்றிப் போகின்றாய்...
வம்புடன்!

புரிகின்றதா - என்
கவலைப் பூக்களின் மகரந்தத்தில்
கருக்கட்டப்படும்...
உன் னினைவுகள் - இப்போதெல்லாம்
உரிமையின்றி போகின்றன!
காரணம் நீயடா...!!

உன் னுள்ளம் நேசித்துச்
செல்லமாக முறைத்துச் சண்டையிடும்
என்னையா.....
வெறுத்துப் பயணிக்கின்றாய்
இன்னொரு நிழலுடன்
இராக்களில்!

இன்னும் நம்பிக்கையிருக்கின்றது
என்னுள்.......
என்றோ ஓர் நாள்..
என் ப்ரியம் தேடி மீள வந்துவிடுவாய்
என்னுயிர்க்கூட்டுக்குள்!

அதுவரை ....

நீயாவது வாழ்ந்து விடு .........
உனக்குப் பிடித்த பிரியங்களுடன்
இராக்களின்
விசாரிப்புக்களுடன்!

காலச்சுனாமியில்
காணாமற் போகும் பண்டமல்ல
நம் அன்பு!
இறையருளால்
இதயம் வாசித்த  உணர்வுப் பொட்டகம்!

காத்திருப்புக்கள் தொடர்கின்றன
என்னுள்......

நீ...

மீள ......

என்னை மட்டும் நேசிக்கும்
என்னவனாய் .....
வந்துவிடுவாயென்ற நப்பாசையில்!

இவள் ஜானு!
தரம் 5 பரீட்சைப் பெறுபேறு - Zahira M.V, A/Pura

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு - 
ஸாஹிரா ம. வி, அநுராதபுரம்
------------------------------------------------------------------------------------

அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள் 

அவர்கள் விபரம் -

                               Name                  Marks                      Dis Rank

1.. M.F.Aadhil Ahamed............... ( marks 182) --------------- 3
2. .M.V.Sameeha......................... .......... (177) ---------------- 6
3..M.M.M. Akeel............................. .......(172)---------------- 15
4..N.Ashfan Ahamed...................... ........(167)---------------   24
5..A.A.H.Nisha ....................................... (165)--------------   27
6.. N.Aysha.............................................. (162)---------------  37
7..M.R.F.Salha......................................... (159)----------------46
8..S.H.Hafri ..............................................(158)----------------51
9..A.H.F.Rasheeka..................................  (158)----------------51
10..A.S.Shahama...................................... (158)----------------51
11..T.F.Sahara............................... ...........(156)----------------59

இவர்களை நாமும் வாழ்த்துவோம்...அத்துடன் இவர்களின் இக்கல்வி வெற்றிக்குழைத்த வகுப்பாசிரியர்களான ,M.N.M.SIYAM,
M.K.F.ZAHIRA  உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்..


வாழ்த்துவோம் - அப்துல்லாஹ் அஸ்மின் 
-----------------------------------------------------------------
பதுருயா மத்திய கல்லூரி , மாவனல்லையில் கல்வி கற்கும் அப்துல்லாஹ் அஸ்மின்  2014 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 171 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளார்.  கேகாலை மாவட்டத்தில் 42 வது நிலையைத் தனதாக்கியுள்ள இவரையும் நாம் வாழ்த்துவோம்...


திருமறை