About Me

2014/11/19

அன்புக்குமுண்டோ................





தேசங்களுக்கிடையில்....
எல்லை தொடா நெடுங்கடலும், 
தடுப்புச் சுவர் விரிக்கா நீல வானும் 
எம் நேசத்திற்கும் பால மாகட்டும்
இறையாசியுடன்......!


திருமண வாழ்த்து




உறவுகள்








         அஸ்கா











அஸ்கா


பூவொன்று மலர்ந்ததுவோ எம் அகம்தனில் அழகாக....
குறும்புகளை கரும்பாக்கு மிந்த அரும்பின் குதுகலத்தில் .........
நேரங்கள் நகர்வது தெரிவதில்லை கடிகாரத்திற்கே!..
பாசம் காட்டும் மழலை மலர்ந்த நாளை (12.11.2014)...
எம் வாழ்த்துக்களின் செறிவில் தித்திக்கட்டுமே!
அல்லாஹ்வின் கிருபையால் அஸ்கா எல்லாச் செல்வமும் பெற்று வாழ நாமும் வாழ்த்துவோம்!

பேசும் மனம்



முகில்த் துளிகளின் நீரோட்டம்
மழையாய் குவிந்ததில்.......
பனிச்சாரல்கள் மெல்ல
கசிந்தன போர்வையாய்!
----------------------------------------------------------

பணம் கையில் இல்லாத போதுதான் வாழ்க்கையின் அருமை புரியும்.....
எனவே சேமிப்பின் அளவுதான் நமது நிம்மதியான வாழ்வுக்கு வழி விடுகின்றது....
எனவே......
சேமிப்போம்......
பணத்துடன் நல்ல மளிதர்களையும்!

---------------------------------------------------------

குடும்பம் என்பது குழப்பம் , குதுகலத்தின் சேர்க்கை.......
அதனைத் தீர்மானிக்கும் கருவி
நம் மனதை இயக்கும் வார்த்தைகளில் உள்ளது
--------------------------------------------------------------------------------

கற்பகதருவின் காற்றின் வாசம்
மனசோரம் சுவாசமாய் வீழ.......
எப்போதோ வற்றிப்போன  - எம்
காலடித் தடங்களின் வரட்சி...
மெல்ல கரைந்து போக - நானும்
பயணிக்கின்றேன் நானும் யாழ் நோக்கி!


--------------------------------------------------------------------------------------------


நாம் விரும்பியோ விரும்பாமலோ வாழ்க்கையில் மாற்றங்கள் நம்மைத் தேடி வருகின்றன. அவை பெரும்பாலும் சவால்களின் அறைகூவல்தான்! தைரியமாக அம்மாற்றங்களை நம் வசப்படுத்தும்போது தன்னம்பிக்கை மிக்க எதிர்காலம் நமக்குரியதாக மாறுகின்றது!

---------------------------------------------------------------------------------------------------
மனசோரம் வலி சுமக்கும்
ஒற்றைப் பறவை நான்.....
ஒளிந்து கொள்ள ஓரிடம்
அளிப்பாயோ 
உன் னிதயக் கூட்டில்
-------------------------------------------------------------------------------------------

நம் தகுதியை பிறருக் குணர்த்தும் உரைகல் .......
நாம் பேசும் உண்மை வார்த்தைகள்தான்!
-----------------------------------------------------------------------------------
என் குரல்நாண் அதிர்வில்
ரகஸியமாய் ஔிந்து கொள்ளும் உன்னை....
தினம் உச்சரிக்கின்றேன் என் பெயராய்!

வாழக் கற்றுக் கொடுத்த நீயே - என்
வாழ்க்கையாய்!
சிரம் தாழ்த்துகின்றேன் என் சிந்தை நெருடுமுன்
சுரமாம் அன்பிற்கே!

-----------------------------------------------------------------------

நாம் காணும் அடுத்தவர்களின் தவறுகள்கூட நமக்குப் பாடங்களே!
ஏனெனில்.........
நாம் நம் சுயத்தைத் திரும்பிப் பார்த்து ...
நம் தவறுகளை நாமே உணரும் சந்தர்ப்பம் அதன் மூலம் கிடைக்கின்றது!

-  Jancy Caffoor -

2014/11/03

நீயென்



தனிமை.........
இப்போதெல்லாம் நீயாய்!

வெறுமையின் விசாரிப்பில் விசனப்பட்ட
என் உயிர்க்கூட்டில்.....
உன் பாதச் சுவடுகள் ஆழமாய்!

உன் நச் சென்ற முத்தங்களின்
சொர்க்கத்தில்.....
இப்போதெல்லாம்...
உயிர் அலைமோதுகின்றது
சுகமாய்!

முதுகோரம் .....
வீழ்ந்துகிடக்கு மென் .....
கூநதலிழுத்து........
நீ
வம்பு பண்ணும்போதெல்லாம்....
கசியும் வலிகூட
ரகஸியமாய் நாண முதிர்த்து - உன்னுள்
புன்னகையை
விட்டுச் செல்லும்!

காதலும் மோதலுமாய்
நகரும் நம் அன்பின் தித்திப்பில்
ஊடல் மைல்கல்லா.....!
ரசிக்கின்றாய் தினமும்
என்னையும் வம்புக்கிழுத்து!

பனிமூட்டங்கள் பிழியும் கூதல்
நம் நாடியோரம் வீம்பு பண்ணுகையில்.....
எனை யுன் அருகிழுத்து
உருக்குகின்றாய் உணர்வுகளை!

நானோ...!
எனை மெய்மறந்து...
ஈரம் சொட்டும் காதலுடன்
காத்திருக்கின்றேன் விழியோர முனை
தரிசிக்க!

வா.....
வாழ்ந்துதான் பார்ப்போமே!
என்னுள் உன்னையும்
உன்னுள் என்னையும்
அன்பால் நிரப்பி!