நீயென்....தனிமை.........
இப்போதெல்லாம் நீயாய்!
.
வெறுமையின் விசாரிப்பில் விசனப்பட்ட
என் உயிர்க்கூட்டில்.....
உன் பாதச் சுவடுகள் ஆழமாய்!
.
உன் நச் சென்ற முத்தங்களின்
சொர்க்கத்தில்.....
இப்போதெல்லாம்...
உயிர் அலைமோதுகின்றது
சுகமாய்!
.
முதுகோரம் .....
வீழ்ந்துகிடக்கு மென் .....
கூநதலிழுத்து........
நீ
வம்பு பண்ணும்போதெல்லாம்....
கசியும் வலிகூட
ரகஸியமாய் நாண முதிர்த்து - உன்னுள்
புன்னகையை
விட்டுச் செல்லும்!
.
காதலும் மோதலுமாய்
நகரும் நம் அன்பின் தித்திப்பில்
ஊடல் மைல்கல்லா.....!
ரசிக்கின்றாய் தினமும்
என்னையும் வம்புக்கிழுத்து!
.
பனிமூட்டங்கள் பிழியும் கூதல்
நம் நாடியோரம் வீம்பு பண்ணுகையில்.....
எனை யுன் அருகிழுத்து
உருக்குகின்றாய் உணர்வுகளை!
.
நானோ...!
எனை மெய்மறந்து...
ஈரம் சொட்டும் காதலுடன்
காத்திருக்கின்றேன் விழியோர முனை
தரிசிக்க!
.
வா.....
வாழ்ந்துதான் பார்ப்போமே!
என்னுள் உன்னையும்
உன்னுள் என்னையும்
அன்பால் நிரப்பி!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை