பேசும் வரிகள்நல்ல விசயங்களைச் சொல்லும்போது காது கேட்காத பலர்
அர்த்தமற்ற விடயங்களுக்கு ஆவலோடு வாய் பிளந்து நிற்பார்கள்..
இங்கு உண்மை என்பதை விட
சுவாரஸியமான பேச்சாற்றலுக்குத்தான் மதிப்பதிகம்....!
சுவாரஸியம்......பிறர்
மனதைக் கவரும் ரசம்!
------------------------------------------------------------------------------------------


வேண்டாமென்றேன்
வேண்டுமென்றான்!
வேண்டுமென்றேன்
வேண்டாமென்றான்!!
முரண்பாடுகள் தலைகாட்டும்போதெல்லாம்
சலனப்படும் மனசு - மெல்லத்
தட்டுகின்றது அன்பை!
அன்பின் வீரியத்தில் காலாவதியான பிடிவாதங்கள்
உடன்பாடாகி....
உருகியோடுவது கூட
இயற்கையின் தழுவல்கள்தானே!
--------------------------------------------------------------------------------நம்பிக்கை மனதில் இருக்கும்வரை
இருட்டுக்கு அஞ்சவில்லை.............
இன்று போனால் என்ன
நாளை விடியல் வருமென்ற நம்பிக்கையில்...
காலங்களைக் கடந்து செல்லத் தயார்!
2015..........
எனக்கு சவாலான ஆண்டு !
பிரார்த்தியுங்கள் என் தன்னம்பிக்கை அதிகரிக்கட்டும்!
போராட்டங்கள் முரசு கொட்டுமென் வாழ்வில்
இத்தரிப்பிடம் ................
ஓரளவாவது அமைதி தரட்டும்!


நிலாக்கள்


azka + Ayaan வீடு என்பது வெறும் சிமெந்தும் கற்களும் குவித்துக் கட்டப்பட்ட உயிரற்ற இடமல்ல..உயிர் ஜீவன்கள் நடமாடும் இல்லம். அதிலும் வீடுகளில் சின்னப்பிள்ளைகள் இருந்துவிட்டால் அமைதி, வெறுமையங்கு காணமல் போய்விடும். நாம் நம்மைப் பற்றிச் சிந்திப்பதற்கே அங்கு நேரமில்லை.. அவர்களின் செல்லக் குழப்படிகள் நம்மை சில நேரம் ஆத்திரமூட்டினாலும்கூட, நமது கோபத்தை மறந்தவர்களாக அப்பிஞ்சுகள் நம்மைத் தேடி வந்து கொஞ்சு மழலையில் தமது அன்பை வௌிப்படுத்தும்போது நாமும் எல்லாவற்றையும் மறந்துதான் போகின்றோம்.

சின்ன நிலாக்கள்
அழகான அன்பின் ஸ்பரிசம்....
அனுபவிக்கும்போது ஆயிரம் விண்மீன்கள்
சிறகடித்திறங்கும் நம் மில்லத்தில் ஔி கொடுக்க!2015


2014 வருடத்தின் கடைசி நாட்களில் நாம்...

விடிந்தால் விடியலின் பசுமையில் புதிதாகப் பிறக்கும் 2015.....

நாட்கள் எவ்வளவு வேகமாகப் பறக்கின்றன. கண்மூடித் திறப்பதற்குள் 2014 நிறைவுறும் தருணம்....

2014 ன் காலடிச் சுவட்டினுள் எத்தனை நிகழ்வுகளை நாம் ஒவ்வொருவரும் சந்தித்திருக்கின்றோம்!
அவை இன்பமாக, துன்பமாக, ஏக்கமாக, எதிர்பார்ப்பாக. இலட்சியமாக. வெற்றியாக. தோல்வியாக. முரண்பாடாக நம்மைப் பின்தொடர்ந்திருக்கின்றன...

வாழ்க்கை என்பது அழகான கனவல்ல...முட்களும் மலர்களும் நிறைந்த பயணப்பாதை! அப்பாதைவழிப் பயணத்தில் நாம் கண்டெடுத்த அனுபவங்கள்தான் நம்மைப் பதப்படுத்தி வழிப்படுத்தி பயணத்தின் போக்கை சீர்படுத்துகின்றன என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

இந்த வருடத்தின் கடைசிநாளில்.....

நானும் என்னை ஒருகணம் புரட்டிப் பார்க்கின்றேன். என் வாழ்வில் நடைபெற்ற அனைத்தையும் ஒரு கணம் ஞாபகச்சுழற்சியில் ஓடவிட்டு, நல்லவற்றை மட்டும் ஏந்திக் கொண்டு 2015ல் நடைபயில தயாராகிக் கொண்டு விட்டேன்....மனக் கஷ்டங்கள் தந்த தீயவை மறதிக்குள் கருகிப் போகட்டும்!

இன்ஷா அல்லாஹ்!

மாற்றங்கள்தான் வாழ்க்கை. மாற்றங்களை நாம் ஏற்றுக் கொள்ளும்போதுதான் ஏமாற்றங்களைத் தவிர்க்கின்றோம்..
இந்த 2014ல் என் வெற்றிகளுக்காகப் பிரார்த்தித்தும் மனச் சங்கட காலங்களில் எனக்கு நம்பிக்கையூட்டி வழிப்படுத்திய  அனைத்துள்ளங்களுக்கும் நன்றிகள்...

குறிப்பாக............

2014ல் முகநூலில் நான் கண்ட நட்பு, அன்பு, உறவாக ஒரு முகம் என்னிழலாகி இன்றும் தொடர்கின்றது. அவனை இச்சந்தர்ப்பத்தில் நான் நினைவுபடுத்தாவிடில் சுயநலக்காரியாகி விடுவேன்...

அவன்....

அமீர் மொனா!


என் வெற்றிகளின் போது பாராட்டுவதிலும், சில சந்தர்ப்பங்களில் என் அறியாமையின்போது ஏற்படுகின்ற தவறுகளைச் சுட்டிக் காட்டித் திருத்துவதிலும், முரண்பாடுகளின்போது சண்டையிட்டுப் புரியவைப்பதிலும், மனத் துன்பங்களின்போது கண்ணீர் துடைத்து ஆறுதல்படுத்துவதிலும் பாசமாய், நட்பாய், அன்பாய், நலன்விரும்பியாய் ,  ஓர் உறவினனாய்.......................

அவன்......


வயதில் சிறியவன்தான். ஆனாலும் அனுபவத்தில் என்னை வழிப்படுத்தும் அளவுக்குப் பெரியவன்!

அவனும் என் உறவுகளுள் ஒருத்தனாய் என் வாழ்வின் ஒவ்வொரு நாட்களிலும் மறக்காமல் ஸலாம் சொல்லி காலை விடியலைத் திறந்து வைக்கின்றான். இந்த அன்பும் அக்கறையும் உரிமையும் தொடர்கதையாய் எம் வாழ்வில் தொடர்ந்து வரவேண்டும் எனும் பிரார்த்தனைகள் என்னுள்!.. இப்புத்தாண்டு அவன் வாழ்வில் அவனது கனவுகளை ஈடேற்றி வெற்றிகளையும் தன்னம்பிக்கைகளையும் குவிக்க வேண்டும்...

அஸ்கா....2015 ல் தனது கல்வி வாழ்வைத் தொடங்கவுள்ளாள்...அரும்பொன்று மெல்ல இதழ் விரிக்கும் அந்த அழகும் பசுமையும் நான் ரசிக்க வேண்டும். அல்ஹம்துலில்லாஹ்!

2014 ல் நானெடுத்த முட்டாள்தனமான முடிவுதான் யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் முடிவு...சமூகசேவை என்ற நிலைப்பாடு இன்று முட்டாள்தனமாகி உறுத்துவதற்குக் காரணம் யாரோ சொன்ன அரசியல் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுத்து அவசர அவசரமாக எனது இடமாற்றத்தை உறுதிப்படுத்தியதுதான்......!
 எனக்கு நானே என் கடமைகளுக்கு தீயூட்டிய முட்டாள்தனத்தின் பின்னணியில் ஒரு அரசியல்.....இது அரசியல் விதியோ அல்லது விளையாட்டோ.....

இந்த முடிவு என் வாழ்க்கையில ஏற்படுத்திய மனக் கஷ்டம்..
பணக்கஷ்டம்.....எழுத்துக்களுக்குள் அடங்க முடியாதது...அந்த மனநெருக்கடி நிலையில் என் ரணங்களுக்கு ஒத்தடமாகவிருந்த என் தாயையும் இந்த வருடத்தில் மட்டுமல்ல என்றும் மறக்க முடியாது. என் தாயின் ஆரோக்கியத்திற்கும் துஆ கேட்கின்றேன்..


அத்துடன் என் டாக்டர் சகோதரி (Janoss ) அவரின் கடமைசார் பயணத்தில் சிறப்புப் பெற்று வெற்றிகளைக் குவிக்க இறைவன் துணை புரிவானாக!


இன்ஷா அல்லாஹ்!

நானும், என்னைச் சுற்றியுள்ள உறவுகள், என்னை நேசிக்கும் நட்புக்கள் யாவரும் இப்புத்தாண்டில் ஈமானிய எண்ணங்களுடன் மனநிம்மதியும், வெற்றிகளும் பெற்று வாழ வேண்டும் எனும் பிரார்த்தனைகளை அல்லாஹூ தஆலாவிடம் சமர்ப்பித்தவளாக...

என் மனசுக்குள் இன்னும் சிறுசிறு துளிகளாய் சிதறிக் கொண்டிருக்கின்ற எண்ணங்கள் நிறைவேற்றப்படுகின்ற தளமாய்  2015 அமையட்டும் எனும் பிரார்த்தனை கலந்த எதிர்பார்ப்புடன் நாளைய விடியலுக்காக காத்துக்கிடக்கின்றேன்!

Happy Birthday Shifka

வானவில்அடர்ந்த கானகமாய்
படர்ந்திருந்த வானம்.....
இன்று மெலிதாக பனி தூவி ஔி சிந்திச் சிரிக்கின்றது
அழகாய்!
கார்மேகம் கண்ட விழிகள்
சூரிய இறகுகளால் இன்று ஸ்பரிசிக்கப்படும்போது
மெழுகாய் உருகிய மனம் கூட சற்றுத் தரித்து
களிப்போடு.........
சில நொடிகளாவது ஔி பரப்பிய அந்த வானுக்கு
சபாஷ்!

ரேகைகள் ...........
வர்ணமிழந்தாலும் அழகுதான் - அதன்
சுதந்திர பூமியில்!பிரிவுகள்..........
உறவுகளை அறுத்துவிடும் ஆயுதமல்ல
அந்த வெறுமையில்...
இதயவலியின் ஓசையுடன்
உண்மை அன்பை வௌிப்படுத்தும்
அளவுகோல்!
----------------------------------------------------------------------

போராட்ட வாழ்க்கை தினமும்
வேரற்ற மரமாய் நானும்.....
----------------------------------------------------------------------

உண்மைகள் என்றோ ஒரு நாள் வௌிச்சத்திற்கு வரும்போது
பொய் சொன்ன உதடுகள் மௌனித்து விடுகின்றன.....
வசந்தத் திருவாழ்த்துக்கள்

வாழ்க்கையில் பலரைச் சந்திக்கின்றோம். ஆனால் சிலரே நம்மைச் சிந்திக்க வைக்கின்றார்கள். அதிலும் ஒருவரே நம் வாழ்க்கைப் பாதையின் தடத்தை திரும்பிப் பார்க்க வைக்கின்றார். அந்த ஒருவருக்கு நாம் வழங்கும் அன்பளிப்பு வெறும் அன்பே!


அந்த அன்பு ............

சமுத்திரங்களையும் சுருக்கலாம். வெயிலையும் குளிர்விக்கலாம். மனதின் ஸ்பரிசம் அன்பால் ஆக்கிரமிக்கப்படும்போது எல்லாமே நம் சிந்தனையின்றி இயல்பாய் மாறி விடுகின்றது.
              பாசமாய்....
                           காதலாய்....
                                        நட்பாய்!..


                                                     இவன்........!

என்னை நானே திரும்பிப் பார்க்க வைத்தவன். நல்லவன் எனும் அடைமொழிக்கும் அப்பால் கோபக்காரன். ஆனாலும் இளகிய மனசு நேசக்காரன். அன்புக்குள் அடங்கிக் கிடக்கத் துடிக்கும் குழந்தை மனசுக்காரன்!

இருந்தும்...


எங்கள் கோபமும் திமிரும் அன்பின் முன் காணாமல் போய்விடும் அதிசயம்தான் எங்கள் அறிமுகத்தின் ஆயுளை இன்னும் நீடித்து வைத்திருக்கின்றது..சின்னச்சின்னக் காரணங்கள்தான் எங்கள் செல்லச் சண்டைகளின் மூச்சொலியாய் பல பொழுதுகளில் ஓலமிட்டாலும்கூட , எங்கள் மௌனம் சில நொடிகளில் காய்ந்து விடுகின்றது  அன்பின் ஈரலிப்பினால் ! அதுமாத்திரமல்ல எங்கள் முரண்பாடுகளும் அவிழ்ந்து இருவரும் ஒன்றுமறியாத அப்பாவிகளாய் மாறிவிடுகின்றோம்  மீண்டும் இயல்பாய் பேச!

இதுதான் அன்பின் பரிமாணம் என்றால்
எங்கள் அன்பும் தன் ஆயுளைக் கூட்டிக் கொள்ளட்டும்!

மெளனத்தைத் திறக்கும் சாவி அன்பென்றால்................................
அந்த அன்பின் தித்திப்பில் உதடுகள் வார்த்தைகள் மறந்திருப்பதுகூட சுகமே!

அமீர் மொனா........
அந்த அன்பானவனுக்கு இன்று  (2014. 12. 12 ) பிறந்தநாள்!

அவன் வாலிபத் தெருக்களின் பசுமை என்றும் சந்தோச பனித்தூறல்களுடன் சங்கமிக்கட்டும்...
அவன் நேச நெஞ்சக்கூட்டில் என் ஞாபக அலைகள் என்றும் தஞ்சம் கொள்ளட்டும்....
அவன் வாழ்வில் சந்திக்கும் தடைகள் யாவும் தூசாகி பறந்து போகட்டும்..
அவன் எப்போதும் வெற்றியாளனாய்........வெற்றிக்கு மட்டுமே சொந்தக்காரனாய் இப்புவியில் முகம் காட்டட்டும்...

தேக ஆரோக்கியத்துடன்  நல்  வாழ்வும்  சீர் பெற்று விளங்க அல்லாஹ் அருள்புரிவானாக!

வாழ்த்துவோம் நாமும் அவரை.............!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


You Know You're special
to me, 
but your Birthday is a good time to say, "Thanks for everything you do in your own special way" 
 - Jaanu-
May evertthing happy
and everything bright
be yours on your birthday
from morning till night.
And then through the year may the same thing hold
                 true
so that each day is filled with life's best things for you

- Jamee -Action Research


ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களுக்கான ஆய்வு மாணியங்கள் (Research Grants) - 2013
-------------------------------------------------------------------------------------------

இசுருபாய, கல்வி அமைச்சின் கட்டிடத்தில் நடைபெற்ற இவ்வேலைத்திட்டம் தமிழ், சிங்கள , ஆங்கில மொழிகளில் 29 ஜூலை தொடக்கம் 24 திசெம்பர் வரை ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கிளை, கல்விப் பணிப்பாளர் Madam C.M.B.J. திலகரத்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது.

தமிழ்மொழியில்  தெரிவு செய்யப்பட்ட 20 பேர்களில் நானும் ஒருத்தி என்பது மகிழ்வுக்குரிய செய்தியே!  இக்காலப்பகுதியில் எமக்கான வழிகாட்டலும், ஆலோசனைகளும் -

பேராசிரியர்  எம். கருணாநிதி அவர்கள்
பேராசிரியர் T. தனராஜ் அவர்கள்
டாக்டர் எஸ் குகமூர்த்தி அவர்கள்
டாக்டர் ரீ கலாமணி அவர்கள் 

என்போரால் சிறப்பாகக் கிடைத்தன. இவற்றுடன் சிறப்பான போசன உபசரிப்பு, தங்குமிட வசதி என்பவற்றுடன் செயல்வழி ஆய்வுத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியவர்களுக்கு சான்றிதழ்களும் ரூபா ஐயாயிரமும் வழங்கப்பட்டது.

எங்கள் கற்பித்தல் சேவையில் எழுகின்ற பிரச்சினைகளை நாமே திட்டமிட்டுத் தீர்த்து வைக்கின்ற உளப்பாங்கும், பிள்ளைகளின் தனியாள் வேறுபாடுகளுக்கு ஏற்பட, பொருத்தமான கற்பித்தல் உபகரணங்கள், கற்பித்தல் முறைகளை நாமே தயாரித்து வழங்கக்கூடிய ஆற்றலும், மாணவர்களை உற்சாகப்படுத்தி செயல்பட வைக்கும் மாணவர் அபிவிருத்தி கல்விமுறையை வெற்றிகரமாக நிறைவேற்றக்கூடிய ஆளுமையும் எமக்குக் கிடைத்தன என்றால் மிகையில்லை....

இச்செயல்வழி ஆய்வின் சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த 28. 11.2014 ந்திகதி இசுருபாய, பத்தரமுல்ல கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது பிடிக்கப்பட்ட சில புகைப்படங்கள்....

தமிழ்மொழியிலான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் பேராசிரியர் T. தனராஜ் ,ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கிளை, கல்விப் பணிப்பாளர் Madam C.M.B.J. திலகரத்ன அவர்களுடன்...........


  கல்வி அமைச்சின் கேட்போர் கூடம்
எனது தந்தை
இச்செயல்வழி ஆய்விற்காக என்னால் கண்டறியப்பட்ட கற்பித்தற் செயற்பாடுகளுக்கான சில புகைப்படங்கள்..

தலைப்பு - 
அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்தின் தரம் 9 வகுப்பிலுள்ள மாணவர்களின் மூலகக்குறியீடுகளை எழுதும் திறனை மேம்படுத்தல்

பங்குபற்றிய மாணவிகள்மூலகக்குறியீடுகள் - கிளே ஆக்கம் ( மாணவர்கள்)அணுவெண்களை வழங்கி மூலகங்களைக் கண்டறியும்
 செயற்பாடு


மூலகங்களை வழங்கி அணுவெண்களைக்  கண்டறியும் 
 செயற்பாடு
மூலகங்களைக் கண்டறியும் லூடோ விளையாட்டு
(நான் கண்டறிந்த விளையாட்டு )கலந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள்


எனது செயல்வழி ஆய்வு சிறப்பாக வெற்றி பெற உதவிய அனைவருக்கும் நன்றிகள்...
Fatima Adam

Fatima Adam - திருநெல்வேலி
30.11.2014
-------------------------------------------

வாழ்க்கை எனும் சோலையில் இன்றைய தினம்  வசந்தப் பூக்கள் உங்களுக்காக கரகோஷிக்கின்றன. தென்றலும் இயற்கையும் புன்னகை சிந்தி உங்கள் வளமான வாழ்விற்கான மானசீக ஈர்ப்பை பரப்பிக் கொண்டிருக்கின்றன எம்முடன் இணைந்து!.

ஆம்.........

இன்று உங்கள் பிறந்த தினம்!

உங்கள் முகமின்னும் நான் காணவில்லை. ஆனால் ஓர் தினம் நம் குரல்கள் ஒலியலையில் கலந்து கசிந்திருக்கின்றன. நமக்குள் அதிகம் பரிச்சயமில்லை. ஆனாலும் மனதில் உங்கள் மீதான அன்பின் அதிர்விருக்கின்றது.........

காலங்கள் மாறலாம்......
காட்சிகளும் மாறலாம்.....
ஆனால் மனதில் பதிக்கப்படுகின்றன அன்பும், நட்பும் நிலையானது!

உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகின்ற சவால்களையெல்லாம் அல்லாஹ்வின் அருளால் திறமையுடன் வெற்றி கொண்டு, மகிழ்வுடன் வாழ வாழ்த்துகின்றேன்....

                                             


திருமறை